புதன், 28 மார்ச், 2012

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் - கனக லஷ்மி

திரு. லேனா தமிழ்வாணன்

நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போ தெல்லாம் மாணவர்கள் என்னைப்பார்த்து, “இதோ இவன்தான் தமிழ்வாணனோட பையன்” என்று பேசக் கேட்டிருக்கிறேன். 

நான் பள்ளியின் தேசிய மாணவர் படையில் இருந்தபோது அதில் பங்கு பெறும் மாணவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக என்னைப் பார்த்து, “இவன் தமிழ்வாணன் பையன் டா” என்று கிசுகிசுப்பார்கள். இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தாலும் கூட, எனக்குள் ஓர் ஏக்கமும் இருந்தது. நாம் எப்போதும் தந்தையால் தானே அறியப்படுகிறோம். நம்மால் தந்தை அறியப்பட வேண்டும் என்ற மன எழுச்சி வந்தது.

ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள்

திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில்
சோம. வள்ளியப்பன் பேச்சு இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் இது (15.3.2009). முன்பு நம்முடைய GDP 9% ஆக இருந்தது. உலகளவில் வேகமாக வளர்கிற நாடுகளில் நமக்கு இரண்டாவது இடம் என்று சந்தோஷமாக இருந்தோம். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா. இப்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9% அல்ல 6.5, 7 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மட்டுமல்ல, ஏனைய வளர்ச்சிகள் குறைந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்திருக்கிறது. 17 சதவீதம் குறைந்திருக்கிறது. 2008-09ற்கு 200 மில்லியன் டாலர் ஏற்றுமதி என்கிற இலக்கினை இந்தியப்பேரரசு முடிவு செய்திருக்கிறது. அதிலும் ஒரு சுணக்கம் வந்திருக்கிறது.

செல்கின்ற இடங்களில், ‘இந்தியாவின் வளர்ச்சி குறைந்திருக்கிறதே! பங்குச் சந்தை இறங்கியிருக்கிறதே! பல்வேறு துறைகளிலும் வியாபாரம் சுணக்கம் கண்டிருக்கிறதே! இந்நிலைமை மாறுமா? நீடிக்குமா? அவ்வளவுதானா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

செவ்வாய், 27 மார்ச், 2012

99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்



வட்டக்கல்லை தோளில் தூக்கிய பின்னரே திருமணம் என்ற நிலையில் இருந்த, சமூகத்தில் இன்று, சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் சோர்ந்து போகும் இளைய தலைமுறை உருவாகி விட்டது.

இந்த சூழலில், வீட்டில் அனைத்து வேலைகளையும் தானே முன்வந்து செய்யும் பாட்டிக்கு, 99 வயது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், அது தான் நிஜம். அம்பத்தூர், திருவேங்கடபுரத்தில் உள்ள சாவித்ரி அம்மாள் தான் அந்த வயதான தேவதை. பேரனுக்கும் பேரன் பார்த்து விட்ட இந்த பாட்டி தான் அவரது வீட்டின் தூண்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

நெஞ்சை நெகிழ வைத்த காணொளி.

அன்போடு வளர்ந்து வரும் தன் அன்பு மகனையே பல வித குண/மன நலன்களோடு பயணித்து வரும் தொடர்வண்டிக்காய் இழக்கின்ற கொடுமையான காணொளி.!
 
இளகிய மனமுடையோர் காணொளியினை காணுதலை தவிர்த்து விடுங்கள்.


தியாகச் செம்மலை என்னவென்பது?


நன்றி: முகநூலில் பகிர்ந்த உறவிற்கு.
              http://avargal-unmaigal.blogspot.com/2011/06/blog-post_21.html

தர்பூசணிக்குள் ஒரு தளிர்..!


சனி, 24 மார்ச், 2012

புதுவை புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள். இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்,
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழ் எங்கள் இளமைக்கு பால்,
தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! சுடர் தந்த தேன்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

இரண்டு குழந்தைகள் செய்யும் சேட்டையைப் பாருங்க...!


மெகாலுக் டிக்கி மட்டும் வாங்கிக் கொடுத்து தோழி பிடித்திட்டானே சிறுவன். அதுவும் சாதகமான பேச்சால்..!

கர்ணன் திரைப்பட பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது..



மழலைகளின் மகிழ்வே! மனம் இளகிட வழியே!


குழந்தைகளின் மகிழ்வில் சொல்லும் கருத்துகளை விட இவ்வுலகில் நமக்குச் சொல்லித்தரும் ஆசான் எவருமில்லை. அவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பினிலும், அழுகையினிலும் தான் இறைவன் குடி கொண்டிருக்கின்றான். இதனை நம்மைப் பெற்றவள் நம் வழியே கண்டு அனுதினமும் மகிழ்கின்றாள்/ கவலையுங்கொள்கின்றாள்..!


திங்கள், 19 மார்ச், 2012

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்




பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!


மாடசாமியின் மகத்தான சாதனை

மாடசாமியின் மகத்தான சாதனை

அது ஒரு அழகான கிராமம். ஆனை அம்பாரி என ஆண்ட பூமி.. காலத்தின் கோலத்தால் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி கழனியை அழித்தது போல நல்லா இருந்த குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் துயர சம்பவங்கள் நிழந்து விட ஊரில் பேயும், பிசாசும் குடியிருக்கின்றதென்று பலர் பயந்து கொண்டு கைக்கு வந்த விலைக்கு அந்த ஊரில் இருந்த நிலக்கிழாரும் , புதிதாக வீட்டு மனை விற்பனையில் இறங்கியிருக்கும் முனிசாமியிடம் கொடுத்து விட்டு, அதிலிருந்து கிடைத்த காசைக் கொண்டு பட்டணத்தில் வாழலாம் என்று எண்ணி பலர் பட்டணம் நோக்கிச் சென்று விட்டனர்.

அந்தக் கிராமத்தில் மாடசாமி ஒரு நிலக்கிழார் வாழ்ந்து வந்தார். அவர் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல் படுத்தும் ஆன்மீக வாதி!. மக்கள் எதனால் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றார்கள் என்று புரியாமலே காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்.

மாடசாமிக்கு பொன்னுத்தாய் என்ற அன்பான மனைவியும் அழகன், குணவன் என்று இரண்டு மகன்களும் , வள்ளி என்ற ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து பேர். மாடசாமியின் நிலத்தில் வேலை பார்க்க ஆட்கள் உள்ளுரிலிருந்தே வந்து கொண்டிருந்தனர். அதனால் அவர் தன் மகன்களை அழைத்து விவசாயம் பற்றியும், தரமான விளைச்சலை எப்படி பெருக்குவது என்பது குறித்தும் சொல்லிக் கொடுத்திருந்தார். மகன்களும் விவசாயம் பற்றி கொஞ்சம் படித்திருந்தாலும் விவசாயம் செய்வது தங்கள் மூதாதையர் வழி வழியாக மகிழ்வோடு செய்து வருவதால் அந்த வேலையிலே மும்முரமாக இறங்கி விட்டார்கள்.

ஒரு நாள் ஊருக்கு கார் ஒன்று வந்தது. அதில் முனிசாமியும் வந்திறங்கினான். முனிசாமி பட்டணத்தில் இருந்து சில பணக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான். தன் கைவசம் உள்ள நிலத்தை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். ஊருக்குள் புதிதாய் வந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களை யார் என்று முனிசாமியிடம் மாடசாமி கேட்ட பொழுது முனிசாமி தலையில் இடி இறங்கும் விசயத்தை சொல்லி முடித்தான்.

அதாவது தன் நிலத்தையெல்லாம் பட்டணத்தில் இருந்து வந்திருக்கும் இந்த பணக்காரர்களுக்கு கொடுத்து அவர்கள் தொடங்க விருக்கும் தொழிற்சாலையில் அவர்களுடன் பங்குதாரராக இருக்கப் போவதாக தெரிவித்தான்.

இதனைக் கேட்ட மாடசாமிக்கு கோபம் வந்தது, ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளாமல் முனிசாமியிடம் இதனை செய்ய வேண்டாம் என்றும் இதனால் ஊருக்குள் மக்களுக்கு பல தீங்குகள் விளையலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

முனிசாமியோ இதனை சரியாக காது கொடுத்து கேளாமல் தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்றும் தன் இடம் தானே முடிவு செய்வேன் என்றும், யாரும் தனக்கு சொல்ல வேண்டாம் என்று ஆத்திரமாக பேசினான்.

கையில் நிலம் இருந்தவர்களே விற்று விட்டு பட்டணம் சென்றாலும் அடித்தட்டு மக்கள் எங்கும் போக வழியில்லாத காரணத்தால் அந்த ஊரிலே பயந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஊரில் மக்கள் இங்கே பார்த்தேன் பேயை; அங்கே பார்த்தேன் பிசாசை , கருப்பாய் வந்தது, மாடு மாதிரி ஓடிச் சென்றது என்று கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகவே சென்று வந்தனர். வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் பயந்து பயந்தே காலம் கழித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் மாடசாமியின் வயல் வேலைக்கு ஆட்கள் வரத்தில் மந்தம் ஏற்பட்டு விட்டது. களை எடுக்கும் பருவத்தில் நின்ற நெற் பயிர்களும், தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலையில் இருந்த மிளகாய் செடிகளும் ஆட்களுக்காய் ஏங்கி நின்றன.

பகலென்றும், இரவென்றும் பார்க்காமல் மாடசாமியின் குடும்பமே வயற்காட்டில் தான் கிடந்தது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் கூட வயல் வேலையிலேயே மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

கூலி ஆட்களை நாடிச் சென்ற அழகன் ஒவ்வொரு முறையும் ஒருவர் இருவர் என குறைந்த எண்ணிக்கையிலேயே வேலைக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்தான். இதுக்கு மேலே ஆட்கள் வர மறுக்கின்றார்கள் என்று தன் தந்தையிடம் வருத்தத்துடன் தெரிவித்தான்.

ஆட்கள் வேலைக்கு வர மறுக்கின்ற என்ன காரணம் என்று மீண்டும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார் மாடசாமி. முனிசாமியிடம் பேசிய போது அவன் பேசிய விதம், அவன் நடந்து கொண்ட தன்மை என்றெல்லாத்தையும் மீண்டும் தன் வீட்டில் உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அசைபோட ஆரம்பித்தார்.


தான் யோசனையின் விளைவாக ஒரு புதிய தீர்வைக் கண்டு பிடித்தார். அதன் படி தன் வயலில் வேலை பார்த்து விட்டு வரும் போது ஒரு தங்கச் சங்கிலி ஒன்று வழியில் கிடந்ததாகவும் சொன்னார். அது யாருடையது என்று தெரியவில்லை என்றும் அதனை சரியான அடையாளம் சொல்லி பொருளைத் தவற விட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார். பேய் பிசாசைப் பற்றி பேசிக்கொண்டிருந்த மக்கள் இப்போது தங்கச்சங்கிலி பற்றி கூட்டம் கூட்டமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நாள் முனிசாமி குடித்து விட்டு ஊரில் இருந்த மற்றவருடன் பேசிக் கொண்டிருந்த போது தானும் பட்டணத்துப் பணக்காரர்களும் திட்டமிட்டு தான் ஊரில் சில சம்பவங்களை நிகழ்த்தியதாகவும் விவசாயத்தை விட பிற தொழில்களில் தான் முதலீட்டைப் போட்டு பணம் பெருக்கப் போவதாகவும் உளறி விடவே, அந்த வழியாக போய்க் கொண்டிருந்த குணவன் காதில் தெளிவாகப் பட்டது. உடனே ஊர் மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் ஒரு மரத்தடியில் கூடினர்.

ஊரில் இருந்த மற்ற முக்கியமானவர்கள் முனிசாமியிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தார்கள். முடிவில் தன் செய்த தவறை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியாதாகிப் போகவே ஊர் மக்கள் அனைவரும் முனிசாமியை ஊரை விட்டுத்துரத்த வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த மாடசாமி எழுந்து பேச ஆரம்பித்தார்.

முனிசாமியின் செயலுக்கு ஊர் சபை தண்டனை கொடுத்தாலும் அவனை மன்னித்து விடுமாறு இந்த ஊர் சபையைக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயம் ஒன்னும் கேவலமான தொழில் அல்ல. முனிசாமியின் தந்தையும் மிகப் பெரிய விவசாயியே ; முனிசாமியும் ஒரு சிறந்த விவசாயியே ; ஒரு விவசாயி என்பவன் எவ்வளவு உயர்வான மனிதன் தெரியுமா. கடவுளுக்கு ஒப்பானவன். எத்தனையோ உயிர்களின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்.; விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும்.

அத்தன்மை பொருந்திய விவசாயத்தை நாம் தொடர்ந்து பரம்பரையாக செய்து வரல் வேண்டும். பட்டினத்தில் இருந்து வந்தவர்களால் தான் முனிசாமிக்கு மனம் மாறி விட்டது என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தொழிற்சாலை கட்ட விவசாய நிலத்தை கேட்காமல் வேறு தரிசான நிலத்தை மக்களுக்கு தீங்கு விளைக்கா வண்ணம் இருக்கும் இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாமே!!

முனிசாமி தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று முடிவை முனிசாமியின் மீது திணித்தார். இதனைக் கேட்ட முனிசாமி தன செயலுக்கு மனம் வருந்தியதோடு தொழிற்சாலையை வேறு ஒரு இடத்தில் அமைத்துக் கொள்வதாகவும் சொல்லினான்.

அது சரி அப்போ அந்த தங்க சங்கிலி என்னாச்சு....

அதை நீங்க தான் சொல்லனும்.

சொல்லிக் கதையை முடிங்க..

திரும்பிப்பார்க்கின்றேன்.

திரும்பிப்பார்க்கின்றேன்.

அது ஒரு அழகான, அமைதியான கிராமம். அந்தக்கிராமத்திலே மருதப்பன் - முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். மருதப்பன் பெரும்செல்வந்தனாக இல்லாவிடிலும் ஒரு சிறு விவசாயியே.. அவர் சம்பாதித்தது, மூதாதையார் வழிச்சொத்து என சேர்த்து மொத்தம் 2 ஏக்கர் நஞ்சையும், 1.5 ஏக்கர் புஞ்சையும் தன் வசம் வைத்திருந்தார். அவர் பகல் பொழுது முழுதும் தனது விவசாய நிலங்களிலே வேர்வை சிந்த உழைப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.


முத்தம்மாள் தன் வேலை, அவருடைய வேலை என பாரபட்சம் பார்க்காமல் நம் வேலையே என போட்டிபோட்டு தங்கள் கழனியில் வியர்வை சிந்த உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூத்தவன் கார்மேகம், அடுத்தது லட்சுமி, கடைக்குட்டி வசிகரன்.
லட்சுமி பிறந்த 8 வருடங்கள் கழித்தே வசிகரன் பிறந்தான். எல்லோருக்கும் வசிகரன் மேல் அலாதிப்பிரியம். வசிகரன் அளவற்ற பாசத்துடனும்,தனக்குள் ஒரு இறுமாப்புடனும் வளர்ந்து வந்தான்.

மூத்தவர் கார்மேகம் படிப்பில் அதிகம் விருப்பமில்லாமல் விவாசாய வேலை செய்வதையே மும்முரமாக கொண்டவர். அவரும் தன் பங்கிற்கு 10 வது வகுப்புவரை படித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். அடுத்தவர் லட்சுமி இவரும் தன் பங்கிற்கு காலேஜ் வரைக்கும் சென்று ஒரு டிகிரை வாங்கி விட்டார். நம் கடைக்குட்டியோ படிப்பில் பிரமாதம்.
ஒரு நாள்

“ஏங்க... நம்ம புள்ளைகளுக்கு வயசாகிக்கிட்டே போகுது, கல்யாணம் பண்ணி வைக்கிறதப்பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்கீக..” இது முத்தம்மாளின் குரல்.

அப்பொழுது தான் காலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு காலைக்கஞ்சி குடிக்க திண்ணையில் உட்கார்ந்தார்.

“ஆமா முத்தம்மா.. நானும் இதப்பத்தி ஓங்கிட்ட சொல்லனும் நினைச்சேன். நம்ம மருவூரிலில ஒரு நல்ல வரன் இருக்குன்னு தரகர் தணிகாசலம் சொன்னார். வர்ர வெள்ளிக்கிழமை நாம போய் பார்த்துட்டு வந்துடுவோமா?” - இது மருதப்பனின் குரல்.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து வெள்ளிக்கிழமை கார்மேகத்திற்கு பெண் பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். நினைத்தது போலவே கலையரசி மிகவும் அழகும், நல்ல அறிவும் நிரம்பிய பெண்ணாக தெரிந்ததால் அனைவரும் சம்மதித்தனர். நிச்சயிக்கப்பட்டபடியே கல்யாணம் நடந்தேறியது. மருதப்பன் தன்னிடம் உள்ள செல்வங்களை நல்ல முறையில் பண்படுத்தவும்,வளமான குடும்பமாக உருவாக்கவுமே மருமகள் தேவையேயொழிய வரதட்சணை கொண்டுவரும் வாகனமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் உறுதியின்படியே சம்பந்தி வீட்டாரிடம் ஒரு பொட்டுபொடி கூட வாங்கவில்லை.
அதைப்போலவே அவர் மகளான லட்சுமியையும் ஒரு நல்ல வரன் தேடினார். அதே ஊரில் இருந்த மாரி என்னும் சொந்தக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். லட்சுமிக்கும் சிறிய அளவில் வீடு ஒன்று கட்டிக்கொடுத்தார்.

சந்தோஷத்திற்கு மேலாக சந்தோஷம் கிட்டும் விதமாக லட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தையும், கார்மேகத்திற்கு பெண் குழந்தையும் பிறந்தது.கார்மேகத்தின் பெண்குழந்தைக்கு மாதுரி என்றும் லட்சுமியின் ஆண்குழந்தைக்கு வசந்தன் எனவும் பெயர் வைத்தனர் நம் பெரியோர்கள்..

வசந்தனும், மாதுரியும் தன் ஊரிலே இருந்த பாலர் பள்ளியில் படிக்க வைத்தார் மருதப்பன். கிராமத்து வாசனையும், தாத்தா பாட்டியின் அன்பும் இரு செல்வங்களை நன்கு பதப்படுத்தியது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் வேண்டும் , அடுத்தவருடன் நட்புடன் பழக வேண்டும் , யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடக்கூடாது என பல நல்ல செய்திகளை தன் பேரன், பேத்திக்கு அறிவுறுத்தியிருந்தார். குழந்தைகளும் தாத்தா பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர்.

வசிகரன் மேற்படிப்பு படிக்க பட்டணம் சென்றான். அங்கு ஏற்பட்ட ஆடம்பரக்காதலும், நட்பும் வசிகரனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகின்றது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை. மருதப்பன் தன் பிள்ளை பட்டணத்தில் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காவே மாதாமாதம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்த நளினியிடம் தீராக்காதல் கொண்டான். நளினி குடும்பத்தைப்பற்றிச்சொல்ல வேண்டுமானால் மிகவும் கண்டிப்பான அதே சமயத்தில் ஒரு சமயம் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனால் நளினி தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என பலமுறை தன்னுள் புழுங்கியுள்ளாள். இதனால் தன் காதலனுடன் சந்தோசமாகவும் , ஆடம்பரமாகவும் சுற்றித்திரிந்தாள்.

மேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தான். கையோடே காதலையும் கூட்டிகொண்டே திரிந்தான். இவர்களின் காதலை அறிந்த நளினியின் பெற்றோர் உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என வசிகரனிடம் வற்புறுத்தினர். ஆனால் உடனே திருமணம் முடிக்க சம்மதமில்லை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இப்படியே கழிக்கலாமே என தன் எண்ணத்தை பெற்றோரிடமும், வசிகரனிடமும் சொன்னாள்.

தங்கள் மகள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவதை நளினியின் பெற்றோர் வருந்தினர். எனவே வசிகரனிடம் “ நீ என் மகளை முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகே அவளை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றலாம், அதுவரையில் நீங்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்க முடியாது” என உறுதியாகச்சொன்னார்கள்.

தன் அருமைக்காதலியின் பெற்றோர் கூறிய வார்த்தைகளை கேட்ட வசி..

தன் காதலியின் நினைவோடே ஊருக்கு அடுத்த வந்து தன் தாய் தந்தையரிடம் சண்டை போட்டான்

“அப்பா நீ எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கனும்”. - இது வசியின் ஆக்ரோஷமான குரல்.

“ வசி ஆத்திரப்படாதேயப்பா.. உன் அம்மாளும் நானும் உனக்கு ஒரு கால் கட்டு போட்டுடணுமுன்னு பேசிகிட்டு இருந்தோம், தோதா நம்ம தரகர் தணிகாசலம் நேத்துக்காலையில வந்தார். நல்ல படிச்ச குடும்பத்துப்பொண்ணுகளுக்கு வரன் தேடிக்கிட்டு இருப்பதாகவும் சொன்னார். நம்ம வீட்டில கல்யாண வயசுல நீ இருக்கிறதால உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு நாங்க சொன்னோம். அதற்கு அவர் சில படங்களை எடுத்துக்காட்டினார். அதுல நம்ம கண்ட மங்கலம் வாத்தியார் பொண்ணு ரெம்ப அழகா இருந்துச்சு.. நல்ல படிப்பும் படிச்சிருக்கு, நல்ல குடும்பப்பொண்ணுன்னு நம்ம தரகர் வேற சொன்னார். அதற்கு நானும் உன் அம்மாளும் பையனும் வரட்டும் போய் பார்த்துடலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.” என அமைதியாக மருதப்பன் எடுத்துரைத்தார்.

"ஆமாப்பா நல்ல குடும்பமுன்னு சொல்றாக.. நம்ம கலையரசிக்கு ஏற்கனவே அந்தப்புள்ளய தெரியுமாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு சொல்லுச்சு, நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்பா” இது முத்தம்மாளின் பாசக்குரல்.

தன் காதலையும், அதன் பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்ல வந்த வசிக்கு ஒரே குழப்பம். தன் காதலியின் காந்தமுகம் கண்ணிலாடவே தாய் தந்தையரை வெறுப்புடன் பார்த்தான்.

“ஏய் , கிழங்களா நான் என்ன உங்களை பொண்ணு பார்க்கவா சொன்னேன். என்ன கண்ட மங்கலம் வாத்தியார் மகளா ? இல்ல காணாத மங்கலம் போலீஸ் காரன் மகளா ? அவள நான் கட்டிகிட்டு உங்களோடே இந்தக் காட்டுல காலத்தை ஓட்டணுமா?” என சாமி வந்தவன் போல் கத்தினான்.

வசி தன் பெற்றோரை திட்டியுள்ளான் ஆனால் இது வரையிலும் தங்களை இவ்வளவு தரம் குறைய பேசியதே இல்லை என அதிர்ந்து போயிருந்தனர் இருவரும்.

அதே நேரத்தில் வயலுக்கு வேலைக்குப்போயிருந்த கார்மேகமும், கலையரசியும் ஒருவருக்குபின் ஒருவராக கையில் ஆளுக்கொரு பசுமாட்டை பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.பள்ளிக்கூடம் போய்விட்டு தெருவில் விளையாடப்போயிருந்த மாதுரியும் , வசந்தனும் வசி வந்திருப்பதைக்கேட்டு ஓடி வந்தனர்.

வசியின் குரல் கார்மேகத்தின் காதில் பட்டும்படாமலும் கேட்டு விட்டது.

“ அட நம்ம வசி ! எப்பப்பா வந்தே? நல்லாருக்கியா ? படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டுருக்கு? “ கேள்விகளாய் அடுக்கினார் கார்மேகம்.

“ வாங்க தம்பி ! இப்பத்தான் வந்தீங்களா? இருங்க குடிக்க காபி தாரேன்” இது பாசக்கார அண்ணி கலையரசி.

அதற்கு வசிகரன் “ காப்பியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என எரிந்து கொண்டே சொன்னான்.

”என்ன விசயமாய் இவ்வளவு கோபப்படுகிறாய்” என சாந்தமாய் கேட்டார் கார்மேகம்.

தான் வந்த செய்தியை சொல்ல ஆரம்பித்தான். தான் பட்டிணத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவளும் தன் மீது உயிராய் இருப்பதாகவும், தங்களின் காதலுக்கு அவளின் பெற்றோர் கொடுத்த சவுக்கடிச்செய்தியையும் சொன்னான்.

இதனைக்கேட்ட மருதப்பன் பட்டிணத்துப்பெண் நம் குடும்ப பாரம்பரியத்துக்கு அவ்வளவாக ஒத்துப்போக மாட்டாள், அவள் நகர வாழ்க்கை எனும் மோகத்தில் எங்களிடமிருந்து உன்னை பிரித்துச்சென்றால் எங்களால் தாங்கமுடியாது என புலம்பினார்.

இதனைக்கேட்ட வசி ஆத்திரத்தில் கத்தினான் . தான் அவளைத்தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், முடிந்தால் திருமனதிற்கு தாங்கள் இருவரும் வரலாம். இல்லையெனில் இங்கேயே இருந்து கொள்ளுங்கள் என சொன்னான்.

இதனைக்கேட்டு கார்மேகம் ஆத்திரமுற்றார். “ என்னடா ..பேச்சு ரெம்ப பெரிசா போகுது.. நாங்க வராம நீ கல்யாணம் பண்ற அளவுக்கு துணிச்சிட்டாயா ?” என கத்தினார்.

” நீங்க யாருமே இல்லாம என்னால கல்யாணம் கட்டிக்கிற முடியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறீர்களா? நீங்க யாருமே தேவையில்லை எனக்கு, நான் என் நளினியோடு சந்தோசமா இருக்கப்போறேன். நீங்களும் வேணாம், உங்க உறவுகளும் வேணாம்” என வெட்டி வீராப்புடன் மீண்டும் அடுத்த நாள் காலையில் பட்டணத்திற்கு கிளம்பிப்போனான்.

தன் கிராமத்தில் நடந்த செய்திகளை நளினியின் பெற்றோருக்கு எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் கேட்ட நளினியின் அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் திருமணம் முடித்து விட வேண்டியது தான் என வசியிடம் சொன்னார்.

தங்கள் திருமணம் எளிதாக நடைபெறக்கூடாது என்றும், பலவகை விருந்துகளுடன், ஆட்டம் பாட்டமாக உயர்தர நட்சத்திர விடுதியில் தான் நடக்க வேண்டும் என தன் ஆசைக்காதலனுக்கு வாஞ்சையோடு சொன்னாள். அவ்வாறே தன் பெற்றோரிடமும் எடுத்துரைத்தாள்.

தன் ஒரே மகளின் திருமணத்தை அவள் ஆசைப்பட்டபடியே நடத்திவிட வேண்டியது தான் என நளினியின் பெற்றோர் முடிவெடுத்து நாளும் குறித்தனர். நட்சத்திர விடுதியும் புக் செய்யப்பட்டது..

அன்று திருமணத்திற்கான பத்திரிக்கை அடித்து வந்தது. அதில் தான் கேட்டுக்கொண்டபடியே தன் பெற்றோர் பெயர், அவர்களின் சொந்த ஊரின் பெயர், உறவுக்காரர்களின் பெயர், என ஒரு வரியும் இடம் பெறாதது கண்டு மகிழ்ந்தான். ஆனால் நளினியின் அப்பாவிற்குத்தான் சின்ன வருத்தம்.

கல்யாணத்திற்கு வருபவர்கள் வசிகரனின் பெற்றோர் யார் எனக்கேட்டால் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்றும் அதனால் தங்களுக்கு பெருத்த அவமானமாய் போய் விடும் எனக்கருதி தாங்களே வசியுடன் கிராமத்திற்குச்சென்று அவர்களிடம் நிலைமையைச்சொல்லி வரவைப்பது என முடிவெடுத்தனர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பேருந்து பிடித்து கிராமத்திற்கு புறப்படத் தொடங்கியவர்கள் மாலை 3 மணியளவில் வசியின் வீட்டை வந்தடைந்தனர்.அங்கே பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை அனைவரும் வயலில் வேலைக்குச்சென்றிருந்தனர். மருதப்பனின் பேரக்குழந்தகளுக்கு ஞாயிறு விடுமுறையாதலால் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு இவர்கள் வந்ததும் இருவரும் தாத்தா பாட்டியைக்கூப்பிட இருவரும் வயலுக்கு ஓடிச்சென்றனர்.

“ தாத்தா, தாத்தா வசி சித்தப்பாவோட ரெண்டு விருந்தாடி நம்ம வீட்டுக்கு வந்திருக்காக.. சித்தப்பா உங்கள வீட்டுக்கு வரச்சொன்னாக” இது மாதுரியின் குரல்.

எல்லோரும் வேலையை வேகவேகமாக ,அரைகுறையாக முடித்துவிட்டு வீட்டிற்குத்திரும்பினர். வந்திருந்த பெரியவர்களை வரவேற்றார்கள் மருதப்பனும் முத்தம்மாளும். கலையரசியும் தன் பங்கிற்கு வாங்க என சொல்லிவிட்டு அடுப்பில் உலையை வைத்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே கார்மேகமும் வீடு வந்து சேர்ந்தான். வசியின் பிடிவாதத்தால் தங்களால் திருமண பத்திரிக்கையில் யாருடைய பெயரும் அச்சிடவில்லை என்றும், நிச்சயதார்த்ததிற்கு கூட அழைக்க வில்லை என தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொன்னனர். இவர்களின் பேச்சைக்கேட்டு மருதப்பன் அதிர்ந்து போய் விட்டார். ஆனால் கார்மேகம் ஒரு வித எண்ணத்தோடே ஏளனச்சிரிப்பு சிரித்தார்.

காதில் கேட்டபடியே முத்தம்மாளும், கலையரசியும் சாப்பாடு சமைத்து முடித்தனர். சாப்பிட வருமாறு அனைவரையும் அழைத்தனர். இறுதியாக மருதப்பனும், கார்மேகமும் தாங்கள் அப்புறம் சாப்பிட்டுக்கொள்வதாகவும், முதலில் வந்த விருந்தாளிகளுக்கு உணவு கொடுக்குமாறு கலையரசியிடம் சொன்னார்கள். நளினியின் பெற்றோருடன், வசியும் சாப்பிட அமர்ந்தான். நளினியின் பெற்றோர் கலையரசியின் கை பக்குவததை மெச்சிக்கொண்டே சாப்பிட்டனர்.

மருதப்பனும், கார்மேகமும் இதனைப்பற்றிய சிந்தனையில் இறங்கினர். ”லட்சுமியையும் வரச்சொல்லு; அவள் தன் பங்கிற்கு என்ன சொல்றான்னு பார்ப்போம்” என மருதப்பன் கார்மேகத்திடம் சொன்னார்.

அங்கே லட்சுமியும் வந்து சேர்ந்தார்.

இதற்கிடையில் சாப்பிட்டு முடித்த நளினியின் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் வசியின் வயல்கள், தோட்டம் ஆகியவற்றையும், அங்குள்ள கோயில்களையும் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களோடே வசியும் சுற்றிக்காட்ட சென்றான். லட்சுமி வீட்டிற்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டறிந்து கொண்டார். என்ன செய்யலாம் என அனைவரும் ஒன்று கூடி ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கினார்கள்.

”இதில் யோசனை பண்ண என்ன இருக்கு? நம்மள மதிக்கல, நாம அங்க போனா அவமானப்படுத்தான் வரணும், அதனால நான் சொல்றேன் யாரும் போக வேண்டாம்” என கார்மேகம் சொன்னார்.

“நம்ம யாரும் அங்க போகலைனா நம்ம புள்ளைக்கு அங்க சொந்தமுன்னு சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க. அதனால நாம எல்லோரும் போயிட்டு வரலாம்” இது கலையரசியின் குரல்.

கலையரசியின் குரலை மருதப்பனும், முத்தம்மாளும் கோரஸாக ஆதரித்தனர். ஆனால் தன் பிடியை விடாமல் பேசினார் கார்மேகம்.

“ சரி அண்ணே ! எனக்கோ கல்யாணத்துக்குப்போக மனசில்லை, நீனும் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறீக.. அப்பா , அம்மா மட்டும் போயிட்டு வரட்டும்” என நாட்டாமை போல தீர்ப்பு சொன்னார் நம் லட்சுமி. இது நல்ல முடிவு என அனைவரும் ஒரு சேர ஆதரித்தனர்.

சுற்றிப்பார்க்க போனவர்கள் பொழுதிருட்டும் போது திரும்பி வந்தனர். வந்தவர்கள் பயணக்களைப்பாக இருந்ததால் விரைவிலே தூங்க புறப்பட்டனர். காலையில் பட்டணம் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.அவர்கள் படுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு முத்தம்மாள் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச்சென்று விட்டனர். மறு நாள் காலையில் மருதப்பன், நளினியின் அப்பாவிடம் வயலில் கொஞ்சம் முக்கியமான வேலை இருப்பதால் அனைவரும் வர இயலாது எனவும், யாரேனும் இருவர் வருவார்கள் என சொன்னார், சரி யென சொல்லிவிட்டு அனைவரும் சென்றனர்.

குறித்த நாளில் திருமணம் வெகு ஆடம்பரமாய் நடக்க ஆரம்பித்தது. மருதப்பனும், முத்தம்மாளும் மட்டுமே திருமணத்திற்குச்சென்றிருந்தனர்.அவர்களுக்கு நடக்கும் ஆடம்பர நிகழ்ச்சியை பார்க்க பார்க்க வீட்டிற்கு வந்த வழியே ஓடிப்போய் விடலாம் எனத்தோன்றியது. ஆனால் மாப்பிள்ளை நம் பிள்ளையாயிற்றே என பொறுமைகாட்டி வந்தனர்.

திருமணம் முடிந்து நட்சத்திர விடுதியில் இரவில் விதவிதமான உணவுகள் ப‌ரிமாறப்பட்டன.ஆட்டபாட்டங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கு இந்த மாதிரியான உணவுகள் பிடிக்காது என சொல்லி விட்டு இரவுப்பொழுதை இருவரும் பட்டினியாகவே கழித்தனர். இவர்களின் இந்தபாங்கு குறித்து நளினி வசியின் காதில் “ உங்க அப்பா,அம்மா சரியான பட்டிக்காடுகள், இங்கிதம் தெரியாதவர்கள் “ என முணுமுணுத்தாள்.

அடுத்த நாள் தாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என இருவரும் கிளம்பிவிட்டனர். கிளம்பும் போது வசியிடம் “ தம்பி ..ரெம்ப செலவு செய்து கல்யாணம் நடத்திருப்ப போல தெரியுது. அண்ணன் குடும்பமோ , அக்கா குடும்பமோ வரலைன்னு கோபபடாதே.. கையில செலவுக்கு காசு இருக்கா? ஊருக்கு போயி ஏதாச்சும் அனுப்பி வைக்கவா ?”என மருதப்பன் தன் மகனிடம் கேட்டார்,

அதற்கு வசி “ நீ கொடுக்கிற காச வச்சு இங்கு புண்ணாக்கு வாங்கவா? நீஙக இருவரும் இங்க வந்ததே ரெம்ப அவமானமா நெனக்கிறேன். இதுல அக்காவாம், அண்ணனாம்” என வசி அலட்சியமாய் பதிலளித்தான்.
வசியும் தன் மாமனார் வீட்டில் ஒரு வார காலம் தங்கினான். கல்யாணச்செலவுகளை பொறுத்தவரை தன் பெற்றோரிடம் கேட்டால் தன்னை மதிக்க மாட்டர்கள் என்ற தேவையில்லாத வரட்டு கவுரத்தோடே வெளியில் 10 வட்டிக்கு கடன் வாங்கித்தான் செய்திருந்தான்.

மாமனார் வீடும் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களே. அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், நகை என அனைத்தும் நளினியின் திருமணத்திற்கே செலவழித்தனர்.

நளினி வெளியே தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று வசியிடம் சொன்னாள். வசியும் அதுவும் சரியென்று தனியேஒரு ப்ளாட்டில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தனர். வீட்டையும் தன்னையும் அலங்கரிக்கத்தொடங்கி விட்டாள். வசி திருமணத்திற்கென வாங்கிய கடனோடு கூடுதலாக கடன் சேர்ந்தது.

தன் ஆசைக்காதலிக்கு ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நளினியின் அளவுக்கு மீறிய ஆசைகளை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. தான் வேலை பார்த்த நிறுவனத்தில் தான் புதியவர் என்றபடியாலும் , அனுபவம் குறைவு என்ற காரணத்தாலும் பதவி உயர்வு கிட்டாமல் அதே சம்பளத்தில் வேலையைத்தொடர்ந்து கொண்டிருந்தான்.

இழுத்துப்பிடித்து இவர்களின் வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.. ஒரு வருடம் கழித்து வசிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. எல்லையில்லா மகிழ்வு இருவருக்குமே.. வசி மாமனார் வீட்டில் நளினியை பிரசவத்திற்காக விட்டிருந்தான், அவர்களும் பேரன் பிறந்த செய்தியை மருதப்பன் தம்பதியருக்கு தெரிவித்தனர். தங்கள் பேரப்பிள்ளையை காண வேண்டும் என்னும் ஆவலில் மருதப்பனும்- முத்தம்மாளும் பட்டணம் வந்திருந்தனர். அலுவலகம் முடிந்து விட்டு நேராக நளினியை பார்க்க வந்த வசி தன் பெற்றோரைக்கண்டு ஆத்திரமுற்றான்.

“ இவர்களை யாரு இங்க வரச்சொன்னது? நான் என்ன இவுகளை கூப்பிட்டேனா? எங்கே என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிக்கிறதே வேலையா போச்சு இந்த கிழங்களுக்கு” என எரிச்சலோடே மாமனாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதனைக்கேட்ட மாமனார் தானே அவர்களுக்கு செய்தியை தெரிவித்து வரச்சொன்னதாகச்சொன்னார். இதனைக்கேட்ட வசி ஓரளவு கூலானான். சிறிது நேரத்திற்குப்பின் மருதப்பனும், முத்தம்மாளும் தங்களின் கிராமத்திற்கு கிளம்பிச்சென்றனர்.

எளிமையாய் தான் நளினியின் வளைகாப்பு வைபவம் நடந்தது. அதனால் பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடக்க வேண்டும் என அடம்பிடித்தாள். நளினியின் விருப்பம் போலே ஒரு நன்னாளில் பெயர் சூட்டும் விழா நிகழ்ந்தது. மயூரப்பிரியன் என்ற அழகான பெயரை குழந்தைக்கு வைத்தனர்.

நளினி தன் கணவனிடம் “ நம் வீட்டிற்கு போய் விடுவோம்” எனக்கூறினாள். அதன் படியே அடுத்த இரு நாட்கள் கழித்து வீட்டிற்குச்சென்றனர்.

குழந்தையை வைத்துக்கொண்டு தன்னால் வீட்டு வேலைகளை பார்க்க முடியாது எனவும் ஒரு வேலைக்காரி வேண்டும் எனவும் வசியிடம் சொன்னாள். சொன்னபடியே ஒரு வேலைக்காரியும் பணிக்கு அமர்த்தப்பட்டாள். நாட்கள் செல்லச்செல்ல வேலைக்காரியை நிரந்தரமாக தங்கள் வீட்டிலே வேலை செய்ய வைப்பது என இருவரும் முடிவெடுத்தனர். நளினி தனக்கு வேலைகள் குறைந்து தற்போது தான் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக எண்ணிக்கொண்டாள். இப்போதெல்லாம் நளினிக்கு தற்போது அடுத்த வீட்டு, எதிர் வீட்டுபெண்களுடன் அரட்டை அடிப்பது, அவர்களுடன் கடைகளுக்குச்செல்வது, சினிமாவிற்குச்செல்வது போன்ற வேலைகளே ஆகும். குழந்தை கூட தற்போது வேலைக்காரியின் பராமரிப்பில் தான் அதிக நேரம் இருக்கின்றது.

ஒரு நாள் இரவு சாப்பிடும் பொழுது வசியிடம் “ என்னங்க.. நான் ஒன்று சொல்லட்டுமா?” எனக்கேட்டாள்.

அதற்கு வசி “ என்ன . சொல்லு” என்றான்.

“ எத்தனை நாளைக்குத்தான் நாம் இப்படியே கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, உங்களுக்கும் ப்ரமோஷன் ஆன பாடில்லை, பேசாம நாமகவே ஒரு தொழில் தொடங்கலாம் தானே “ என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

“என்ன.. நம்ம தொழில் தொடங்குறதா? அதுக்கு பணம் வேணுமே.. எங்கே போய் வாங்குறது? ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டி தீர்ந்த பாடில்லை, இனிமேல் நம்மளை நம்பி கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கா என்ன?” இது வசியின் குரல்.


அதற்கு நளினி “ உங்களுத்தான் கிராமத்துல சொத்துக்கள் இருக்குதுன்னு சொன்னீர்களே , அதில உங்க பங்க வாங்கி விற்று நாம் தொழில் தொடங்கலாமே”

“ அதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரிகின்றது, சரி நாம என்ன தொழில் தொடங்கலாம்?” என வசி கேட்டான்.
அதற்கு ஜுஸ் கம்பெனி தொடங்கலாம் என்றாள். “ எனக்கு அந்த துறையில் A,B,C,D யே தெரியாதே. எப்படி தொடங்குவது ?”என்றான்.

"நாம் படும் கஷ்டத்தைப்பார்த்து எதிர்வீட்டு அக்கா தன் தம்பியைப்பற்றியும்,அந்தத்துறையில் நன்கு கைதேர்ந்தவன் என்றும் அவன் தற்போது பிரபல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். நாம் அவனின் உதவியைக்கேட்டால் நிச்சயம் செய்வான் எனவும் சொன்னார்கள்” இது நளினியின் விளக்கம்.

ஒரு நாள் தன் கிராமத்திற்குச்சென்று தன் பங்கை பிரித்துதர வேண்டும் என தந்தையிடம் சண்டை போட்டான் வசி.இதற்கு மருதப்பன் சம்மதிக்க வில்லை. பெரும் பஞ்சாயத்தே நடந்தேறி விட்டது. அதன் பின்பு தன் சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து அதனில் ஒரு பங்கை வசிக்குக்கொடுத்தனர். வசி தன் நிலங்களை விற்கப்போவதாக அப்பொழுதே அறிவித்தான். அறிவித்த படியே அந்த இடங்களை அந்த ஊரில் இருந்த ஒரு பணக்காரருக்கு விற்று பணத்தோடு பட்டணம் வந்தான்.

பட்டணம் வந்து தன் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலையை விட்டு விலகிகொள்வதாக கடிதம் அளித்தான். இதனையறிந்த கடன் காரர்கள் வசியை பணத்தைக்கேட்டு நெருக்கினார்கள். தான் புதிய தொழில் தொடங்கப்போவதாகவும் அதில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு இன்னும் இரண்டு மாதத்தில் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவேன் என்று உறுதியளித்தான்.

அடுத்த வீட்டு அக்காளின் தம்பியான ஆனந்தைக்கொண்டு புதிதாக தொழிற்சாலையை அமைத்தான், அவன் சொன்னபடியெல்லாம் வசி ஆடும் பொம்மையாய் மாறி விட்டான். நளினியின் ஆசைப்படியே புதுக்காரும் வாங்கப்பட்டது. நகைகளும் வாங்கப்பட்டது. தொழிற்சாலையில் நல்ல முறையில் தொழில் போய்க்கொண்டு இருந்தது.

இடையில் ஒரு நாள் ஆனந்த் தமக்கு இங்கு சம்பளம் வேண்டாம். பங்கு தான் வேண்டும், அதிலும் சமபாதியான பங்கு வேண்டும் என வாதிட்டான். தான் இல்லாவிடில் ஒன்றும் அசையாது எனவும் பெருமைபட எடுத்துரைத்தான். ஆனந்த் அனைத்து தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும், நல்ல ஒரு தொடர்பை வைத்திருந்தான்.

வசிக்கு காலம் மாற்றி சுற்ற ஆரம்பித்து விட்டது. ஆனந்தின் செய்தியை அப்படியே நளினியிடம் தெரிவித்தான். அதற்கு நளினி “இவன் போனால் என்ன? நமக்கு இவனைப்போல் ஆயிரம் பேர் பணத்தை அள்ளி வீசினால் கிடைக்கக்கூடும்” என பெருமாப்புடன் பேசினாள்.

நளினியின் சொற்படி ஆனந்தை வேலையை விட்டு நீக்கினான். ஆனந்தோடே சில முக்கிய அதிகாரிகளும் வேலையை விட்டு நின்று கொள்வதாக அறிவித்தனர். அடுத்து புதிதாக தொழில் நுட்ப வல்லுனர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்., அவருக்கு இந்ததுறையில் அனுபவம் மிகக்குறைவு. இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமே என்ற காரணத்திற்காகவே அமர்த்தப்பட்டனர்.

நாட்கள் செல்லசெல்ல ருசி குறைந்து கொண்டே சென்றது. சந்தையில் நல்ல விளம்பரத்தோடு இருந்த இவர்களின் ஜூஸ் மதிப்பிழந்தது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது, கடன்காரர்கள் மறுபடியும் கழுத்தை பிடிக்க வந்தனர். வேறு வழியில்லாமல் ஆனந்திடமே அடிமாட்டு விலைக்கு தம் தொழிற்சாலையை விற்று விட்டான். பெரும் போராட்டத்திற்குப்பின் நளினியின் நகைகளையும் விற்க நேர்ந்தது. காரும் அதற்குரிய தவணையை முழுதாக கட்டாததால் ஏலத்தில் சென்று விட்டது. ஒருவழியாக முக்கால் வாசி கடன்களை அடைத்து விட்டான்.

ஏறக்குறைய அன்றாடங்காய்ச்சிகளின் நிலைக்கு வந்து விட்ட வசி... தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் போனதால் அந்த வீட்டையும் காலி செய்து விட்டு அதனை விட வசிதியில் குறைந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தினர். அவனால் மற்ற வேலைகள் செய்யத்தெரியாததால் அலுவலக வேலைக்காக அலைந்து ஓய்ந்து போனான். வீட்டில் இருந்த பொருட்களும் ஒவ்வொன்றாய் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர்.

நளினிக்கு தற்போது சிந்தனையில் தான் செய்த ஆடம்பரமும், அலட்சிய போக்குமே தங்கள் நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் தாங்கள் கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்தனர்.எல்லாம் இழந்து வெறும் ஆட்களாய் தன் மகன் மயூரப்பிரியனோடு மதியப்பசியோடும் கிராமத்திற்குச்சென்றனர். கிராமத்தில் இவர்களைக்கண்டதும் கார்மேகம் என்ன நடந்தது எனக்கேட்காமல் பாராமுகமாய் தன் வேலையைப்பார்க்க சென்று விட்டார். மருதப்பன் காலையிலே வயலுக்குச்சென்று விட்டார். வீட்டில் இருந்த கலையரசியும், முத்தம்மாளும் வந்தவர்களை உள்ளே வரச்சொன்னார்கள்.

சிறிது நேரத்திலே லட்சுமியும் ஆங்கே வந்தாள். வசி தன் மனைவியோடு வீட்டிற்கு வந்திருப்பதை கார்மேகம் தன் அப்பாவிடம் சொன்னார். இதனைக்கேட்டு மருதப்பன் கார்மேகத்தோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.


நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு விட்டு அமைதியாய் மருதப்பன் “ நாங்களெல்லாம் வேண்டாம் என நீ சென்றாய், இன்று நீ எல்லாத்தையும் இழந்து விட்டு வந்து நிற்கின்றாய், பணம் தானே போச்சு, அதனாலென்ன மறுபடியும் சம்பாதித்து விட வேண்டியது தானே” என்றார்.


அதற்கு வசி தான் நடந்து கொண்டதையெல்லாம் மறந்து மன்னிக்க கோரினான். அனைவரிடம் அழாத குறையாய் வேண்டி நின்றான்.
அதற்கு மருதப்பன் “ நீ என் பிள்ளை , என்ன செய்து விட்டு நீ வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வது தான் பெற்றவர்களின் பாசம் என்றாலும் உன்னை வா என்றழைக்க எங்களில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. இங்கு ஏன் இல்லை என்ற கேள்வியையும் உன்னால் எழுப்ப முடியாது, உங்களுக்கெல்லாம் பாகப்பிரித்தபின்பு எங்களுக்கென்று ஒரு தோட்டமும், 4 வயல்களும் வாங்கினோம்.அதில் அனைவரின் பங்களிப்பும், உழைப்பும் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தை உனக்குத்தருகின்றேன், முடிந்தால் பிழைத்துக்கொள் “ என சொன்னார்.


கார்மேகமும் தன் பங்கிற்கு சரியென ஒத்துக்கொண்டார். இறுதியில் அந்த தோட்டத்தில் வசி தன் நளினியோடும் , மயூரப்பிரியனோடும் அங்கு தங்கினான்.

தனக்கு தெரிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான், கிராமத்து வாசனையில் அவன் வளர்ந்திருந்ததால் அவனால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. ஆனால் நளினிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் படிப்படியாக கற்றுக்கொண்டாள்.

ஒரு நாள் வெளிமுற்றத்தில் இருந்த கயிற்றுக்கட்டிலை சரிசெய்து கொண்டு அதனில் படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே இருந்தான். வானத்தில் முழு நிலவு சுடர் வீசிக்கொண்டிருந்தது. நளினி அருகே அமர்ந்து “ என்னங்க .. அப்படியே பார்த்துக்கிட்டு இருக்கீக.. ” என்றாள்.


தன் நிலைக்குத்திரும்பிய வசிகரன் “ நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கின்றேன்.. கூடவே திருப்பியும் பார்க்கின்றேன். இனியாவது திருத்தப்பார்க்கின்றேன்” என அடுக்கு மொழியிலே அடுக்கினான்.


முற்றியது....


நன்றி
:salute: :salute: :salute:



உயிரோவியம்

உயிரோவியம் ~ சிவஹரி


வசந்தன் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றான் என்றால் அதற்கு வடிவு செய்த தியாகமே காரணம் என்று ஊரார் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் தான் எதுவுமே செய்யவில்லை என்றும் “பெற்றால் தான் தன் பிள்ளையா? ” என்று மறுமொழி சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டே சென்று விடுவார் வடிவாகிய வடிவுக்கரசியாக அம்மாள்.

வசந்தனின் தாயார் கமலாம்பாள் கொள்ளை அழகும், குறிப்பறிந்து நடக்கும் குணமும், ஈகை செரிந்த கையினையும் தன்னகத்தே கொண்டவர். இல்லையென வந்தோர்க்கு 'இது போதுமே' என்று சொல்லும் அளவிற்கு தன் சக்திக்கு அப்பாற்பட்டும் செய்ய முற்படுவர். தனது பள்ளிப்பருவத்திலிருந்தே அவருக்கு இந்த நற்சிந்தனை ஆசிரியர்களின் மூலமாக அவர் மனதில் வித்திடப்பட்டது.

கமலாம்பாளின் பெற்றோரும் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள். அவர்களின் சொத்துக்களில் எல்லாம் வியர்வை சிந்திய தொழிலாளர்களின் புன்னகையும், மகிழ்ச்சியுமே கண்ணாடிப் பிம்பங்களாகப் பிரதிபலிக்கும். பெற்றோருக்கு ஏற்ற மகளாய் அதுவும் ஒற்றைத் தன்னிறைச் செல்வியாய் கமலாம்பாள் பிறந்து வளர்ந்து வந்தார்.

அகவை பதினைந்தை எட்டும் வேளையிலே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட பெற்றோர் முடிவு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்டும் “ பொட்டப் புள்ள படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சு தான் நாங்க சாப்புடணுமா” என்று அங்கே நாப்பிறழும் வகையிலே நாராயணின் விதி நாடகமாடி விட்டது.

தாயை சிறு வயதிலே இழந்து நின்றாலும் தாய்க்குத்தாயாய், தந்தைக்குத் தந்தையாய் நிற்கும் தனது அப்பா எது செய்தாலும் அது தனது நன்மைக்கே என்று எண்ணிக் கொள்ளும் கமலாம்பாளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே திருமணத்தை அவரின் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் மேலக்குறிச்சி ஜமீன்தார் ராமசாமிக்கு முடித்து வைத்தனர்.

ஜமீன்தார் ராமசாமியோ வேலைக்காரர்களின் அழுகையிலும், மனக்குமுறலிலும் சொத்து சேர்த்தவர். அத்தோடன்றி வெளிநாட்டுக்கு மரங்களை கள்ளச் சந்தையில் ஏற்றுமதி செய்து சொத்துச் சேர்த்தார்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது பழமொழி! ஆனால் ராமசாமி எல்லாமே ஐந்தே ஐந்து நாள் தான்.

பணத்தாசை என்னும் பேயின் மடியில் சிக்கிக் கொண்ட ராமசாமிக்கு தன் மனைவியின் அழகையோ அறிவையோ குணத்தையோ ரசிக்க நேரமில்லை. வியாபாரம் வியாபாரம் என்று முழு மூச்சாய் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பது குறித்தே நினைவலைகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருந்தார்.


கமலாம்பாள் தன் குடும்ப வாழ்க்கை நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது என்று வெளியிலேயும் பெற்றோருக்கும் தெரியும்படி அழகாய் வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருந்தார். இல்லையென்று வருவோர்க்கு இயன்ற வரை கொடுக்க தன் சேமிப்பையும், தந்தை இறப்பிற்குப் பின் தந்தை வழியாய் தனக்குக் கிடைத்த சொத்தினையும் ஈந்து கொண்டிருந்தார்.

கைக்கு வந்த சொத்துக்கள் எல்லாம் இப்படி தர்மசாலையில் இருந்து வெளிப்பட்ட பொரி உருண்டை போல இருக்கும் இடம் தெரியாமல் போகுதே என்ற ஆவேசத்திலும், அற்ப ஆசையிலும் "யாருக்கும் என்னைக் கேட்காமல் ஒரு சல்லிக் காசு கூட கொடுக்கக் கூடாது” என்றும் கமலாம்பாளின் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொண்டார் ராமசாமி.

நாட்கள் மாதங்களாக ஓடியது. மாதங்களும் ஆண்டுகளாக நகர்ந்து சென்றது. ஏதேனும் விசேசம் உண்டா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தார் கமலாம்பாள்.

ஐந்தே ஐந்து நாள் மட்டும் மனைவியென்னும் மகத்தான உறவை ரசித்த ராமசாமிக்கு மன ஓய்வு மட்டுமல்ல உடலுக்கும் ஒய்வும், உற்சாகமும் தரும் ஒரு இயந்திரமாக அவ்வப்போது கமலாம்பாள் தெரிந்தார்.

அது இறைவனின் கொடையே என்று அகமகிழ்வினைக் கூட்டிட அழகான கருவொன்று கமலாம்பாளின் வயிற்றில் குடி கொண்டது.!

ஒரு நாள் கரு உருவாகி கனிந்து வரும் வேளையிலே காலச்சனியென உள்ளே வந்தான் ஜோசியனொருவன்.

“ உங்க ரெண்டு பேரு ராசியினையும், நட்சத்திரத்தினையும், இன்ன பிற கணக்குகளையும் வைத்துக் கணிக்கும் போது பெண் குழந்தை தான்” என்று அடித்துச் சொல்லி ராமசாமியின் நெஞ்சில் இடியைப் பாய்ச்சி விட்டான்.

பெண் குழந்தை பிறந்தால் தனது சொத்தினை முழுசாக அடுத்தவனுக்கு கொடுக்க வேண்டுமே.! “பொட்டப் புள்ள பொறந்த செலவு அதிகமா இருக்குமே” என்ற எண்ணமே அவரிடத்தில் அதிமாய் உலவிச் சென்றது.

குழம்பிக் கொண்டு யோசித்தால் கொடூர எண்ணமே மேல் வந்து நிற்கும் என்பது போல ராமசாமிக்கும் ஒரு எண்ணம் உதித்தது. அதன் விளைவாய் கமலாம்பாளை தன் புதிதாக வாங்கிட பண்ணை வீட்டில் ஒரு ஓட்டு வீடு போட்டு அங்கே தங்க வைப்பது என்றும், பிறக்கும் குழந்தை பெண் குழந்தை என்று ஜோசியன் சொன்ன முடிவான வாக்கினைக் கொண்டும் கமலாம்பாளை சரியாகக் கவனிக்காமல் மாட்டுத் தொழுவத்தினை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது முதல் மாடுகளுக்கு தீனி வைப்பது வரை எல்லா வேளைகளையும் செய்யச் சொல்லி துன்புறுத்தினார் ராமசாமி. ஒத்தாசையாக வடிவுக்கரசி என்ற அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணையும் குறைவான சம்பளத்தில் வேலைக்கு வைத்தார்.

ஆனால் கமலாம்பாளோ தன் கணவன் எது செய்தாலும் தன் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டே வாழ்க்கையினை நடத்திச் சென்றார். மனம் தான் என்றுமே இருப்புக் கொள்ளாதே! நடந்த சம்பவங்களை மேலோட்டமாக வடிவிடம் ஒரு நாள் இரவில் நிலவொளியில் காய்ந்தபடி வீட்டு முற்றத்தில் அந்திப் பொழுது தெளித்த நீரின் மணத்தினை உள்வாங்கிக் கொண்டே கூறினார். ஆரம்ப காலத்தில் வாரம் இரு முறை வந்து பார்த்துச் சென்ற ராமசாமி போகப் போக மாதம் ஒரு முறை மட்டுமே வந்தார். கடைசியாக அந்த வரத்தும் வைகைத்தண்ணீர் வராத ராமநாதபுரம் போல காய்ந்து விட்டது.

கமலாம்பாளுக்கு மனதில் இப்போது பயம் குடி கொண்டு விட்டது. எங்கே தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் தன்னையும், தன் குழந்தையும் அழித்து விடுவாரோ என்று தாய்மை யோசிக்க ஆரம்பித்து விட்டது. தனக்கு எது நேர்ந்தாலும் கவலையில்லை. ஆனால் தன் குழந்தைக்கு எதுவுமே நேரக்கூடாது என்று வேண்டாத தெய்வமில்லாமல் எல்லாச் சாமியின் பெயரையும் தினமும் சொல்லிப் புலம்பினார்.

பண்ணையில் இருந்த மாடுகளும் எண்ணிக்கையில் ஒவ்வொன்றாய் குறைய ஆரம்பித்தது. மாடுகளைப் பிடிக்க வந்த ஆட்களிடம் கேட்கும் போது “ ஐயா, மாட்டை விற்று விட்டார்” என்று சொல்லிப் பிடித்துச் சென்றனர். வருமானத்திற்கும் வழியில்லை. எப்போதாவது கொடுக்கும் பணத்திற்காக வடிவு சென்று பலமுறை இரந்து நின்று வாங்கி வருவார்.


மாதம் எட்டைத் தொடும் வேளையிலே வடிவினைக் கூப்பிட்டு கமலாம்பாள், ”முதலாளியிடம் சொல்லி விட்டு இன்றுடன் நீ வேலையினை விட்டு நின்று கொள், நானே சமாளித்துக்கொள்கிறேன், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் நீ வந்து பார்த்துக்கொண்டாலே போதும். இனிமேலும் எனக்கு என் பிள்ளையினைக் காப்பேன் என்று நம்பிக்கையில்லை. ஆகவே எந்தக் குழந்தை பிறந்தாலும் அதனை என் கணவரிடம் காட்ட வேண்டாம்; சொல்லவும் வேண்டாம். அதனை நீயே வளர்த்து ஆளாக்கி விடு. என் தந்தை எனக்காக விட்டுச் சென்றது என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும் மக்களிடம் நல்ல இரக்க மனமுடையவர் என்ற பெயர் மட்டுமே எங்களுக்கு மிஞ்சி இருக்கின்றது. அதே பெயரினை நீ என் பிள்ளையும் எடுக்கும்படி மட்டும் வளர்த்து விடு" என்று அழுது புலம்பி கேட்டுக் கொண்டார்.


வடிவுக்கரசியின் குடும்பம் ஊர் விட்டு ஊர் வந்து ஒரு வாய்க்கஞ்சிக்கூட வழியின்றி கையேந்திய நிலையில் கமலாம்பாள் என்றோ செய்த சிற்றுதவியால் வடிவுக்கரசியின் குடும்பம் இன்று தலை தூக்கி நிற்கின்றது. தன் குடும்பத்தினை ஆதரித்தவர் இன்று நம்மிடமே பிச்சை கேட்பது போல நிற்பதைக் கண்ட வடிவுக்கரசிக்கு நெஞ்சில் யாரோ உலக்கை கொண்டு இடித்த்து போல் உணர்ந்தார்.

“அம்மா, இன்று நாங்கள் இருக்கின்றோம் என்றால் அது அன்று நீங்கள் போட்ட பிச்சை தான்.! உங்கள் சொற்படியே நான் நடந்து கொள்வேன்” என்று வடிவு வாக்களித்தார்.

மாதம் உருண்டோடியது, அழகான ஆண்மகவினை பெற்றெடுத்தார் தாய் கமலாம்பாள். இனியாவது எங்கள் தலைமுறையில் தொடர்ந்து வசந்தம் வீசட்டும் என்றே வசந்தன் என்று பெயர் சூட்டி வடிவின் கையில் கர்ணன் கொண்ட தான தர்மத்தின் பலனை கண்ணனிடம் கொடுத்து போல ஈந்தார்.

சரியாக கவனிக்காமல் குடற் பகுதியில் சீழ் ஏற்பட்டு பரிதாபமாக கமலாம்பாள் இறைவனடி சேர்ந்து விட்டார். பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்று கமலாம்பாளின் பொய்யான தகவலையும், கமலாம்பாள் இறந்த தகவலையும் ராமசாமிக்குத் தெரிவித்தும் அவர் வந்து பார்க்க மனமின்றி 'வேலையாட்களிடம் காசு கொடுத்து அடக்கம் செய்யச் சொன்னார்'.

இது ஒருபுறமிருக்க‌ கையில் இருந்த சொத்துக்களை எல்லாம் பணமாக மாற்றி அதனை மரக்கடத்தலில் முதலீடு செய்ய நண்பர்களோடு கூட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு அதனை செயல்முறைப் படுத்த கூட்டாக ஆயத்தமானார்கள் ராமசாமி நண்பர்கள் குழாம். அவ்வுடன்படிக்கையின்படி முதலீட்டிற்குண்டான பணம் முழுமையும் ராமசாமியைச் சார்ந்தது. சரியான இடத்திற்கு சென்று சேர்ப்பது மட்டும் நண்பர்களுக்குண்டான பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலிரு பரிமாற்றங்கள் சுமூகமாக நடந்தது. ஆனால் அடுத்தடுத்த பரிமாற்றங்களில் பணம் கொடுக்கவில்லை, கஸ்டம்ஸிடம் மாட்டிக் கொண்டோம் என்று பல்வேறு காரணங்களை மாலையாகத் தொடுத்து ராமசாமியில் காதில் சுற்ற ஆரம்பித்து விட்டனர். நிலைமை போகப் போக உடன்படிக்கையினை முறித்துக் கொண்டு தானே களம் இறங்குவதாய் ராமசாமி இறங்கினார்.

ஒரு மாத்தில் பல கோடிகளைக் கண்ட நண்பர்களின் கை சும்மாயிருக்குமா என்ன! எப்படியாவது ராமசாமியினைக் காலி செய்ய வேண்டும் என்று வலிமையான திட்டம் தீட்டி வாகன விபத்தில் இறந்து விட்டதாய் முடித்து விட்டனர். அவரும் சாப்பிடாமல் அடுத்தவருக்கும் கொடுக்காமல் அப்படியே மாண்டு விட்டது.



காலங்கள் இப்போது விரைந்தோடின.. வடிவுக்கரசியோ தனக்கு திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வசந்தனை நல்ல நிலைக்கு கொண்டு வர முழுமூச்சாய்ப் பாடுபட்டார். குறிப்பறிந்து கொடுக்கும் ஈகைக்குணத்தினை வசந்தனுக்கு கற்றுக் கொடுக்க அவர் எள்ளளவும் தவறவில்லை. படித்து நல்ல நிலைக்கு வந்த வசந்தன் கிராமங்களில் இருக்கும் மகளிர்குழு உருவாக்கிடும் கைவினைப் பொருட்களையும் மரச்சாமன்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கினான். நல்ல முன்னேற்றம். ஆணவம் இல்லாத அடக்க குணம். அடுத்தவருக்கு உதவும் மனம் என எல்லாம் அவனை மென்மேலும் உயர்த்தியது. நகரத்தில் அவன் செல்வாக்கு உயர்ந்தது.

தனக்கு பின்புலமாய் நின்ற தாய் வடிவுக்கரசியினை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவரை நகரத்தில் வந்து தங்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டான். வழக்கம் போல ஒருநாள் ஊருக்கு வந்திருக்கும் போது தான் ஊர்க்காரர்களின் புகழாரப் பேச்சினையும் அவன் செவிமெடுக்க நேர்ந்தது. அகம் மகிழ்ந்தே “அம்மா, என்னுடன் வந்து விடுங்களேன்” என்று கேட்டதற்கு வடிவுக்கரசியம்மாள் ”இந்த ஓட்டு வீடு எனது தெய்வம் குடியிருந்த கோவில், இந்த ஓட்டு வீட்டினை விட்டு வேறு எங்கும் உயிர் இருக்கும் வரை செல்லப் போவதில்லை" என்று கட்டாயமாக மறுத்தார் வடிவுக்கரசி.

தன் பிறப்பின் ரகசியம் அறியாத வசந்தன் எதுவுமே சொல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தான். அப்போது தான் வடிவுக்கரசியம்மாள் தன் இரும்புப் பெட்டியில் இத்தனை நாளும் பாதுகாப்பாய் வைத்திருந்த தன் எஜமானியின் உயிரோவியத்தை எடுத்துக் காட்டி ஓட்டு வீட்டின் உயிர்ப்புத் தன்மையினை வசந்தனுக்கு உணர்த்தினார்.



நன்றி

பொன் மொழிகள் - விவேகானந்தர்

ஒவ்வொரு உயிரிலும் கடவுள்
  • சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
  • ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
  • உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
  • தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
  • செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
  • கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

ஆன்மீக வெள்ளத்தில் மூழ்குவோம்

  • அன்பு இருந்தால் உலகில் முடியாதது ஒன்றுமே கிடையாது. அதேபோல் தன்னலத்தையும் துறந்தால், உங்களை எதிர்க்கும் சக்தி உலகில் ஒன்றுமே இல்லை.
  • அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்கு தேவையில்லை, அன்பு தான் வாழ்க்கை.
  • உள்ளத்தை திறந்து வைத்திருந்தால் உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
  • மலைபோன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற பரிசுத்தம், இவை தான் நல்ல செயல்களுக்கான வெற்றியைத் தரும் ரகசியம்.
  • நம் தேசத்தின் முன்னேற்றம் ஆன்மிக எழுச்சியால் தான் ஏற்படும் என்பதால் சமுதாயம், அரசியல் கருத்துக்களைப் பரப்புவதற்கு முன்னால் நாட்டை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்குவியுங்கள்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிறாய்


-விவேகானந்தர்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

வசு அக்காவின் பெற்றோருக்கு

ஜூன் 01, 2011 5:41 am

34ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் நம் வசுப்ரதா மற்றும் ஹேமபாலாஜி அவர்களின் பெற்றோரை வாழ்த்திடுவோமாக..



ஆகாயந் தொட்டிடவே ஆசையோடு நீளும்
வாகாய் சூழ்ந்திட்ட வளம்தரு நல்லாலோடே
மேவாப் புகழ்கொண்டு மென்னையே ஈந்தருளும்
சாவா கற்பகத் தருவாம் நற்பனைபோலே
ஆண்டு பலகடந்து அற்புதமாய் இல்லறமீந்து
அன்பொடு திகட்டா அறப்பொருளும் காட்டி
அதட்டா அன்னையாய் அறிவுதரு தந்தையாய்
திகட்டா வாழ்வு நடாத்தும் நற்தகையீரே.! - தாங்கள்
புகழோடு வாழ புவியரசன் அருள்வானாக....




அன்பொடு நிந்தன் அரசாட்சிக்கு
ஆதரமாய் நான் கேட்டதொரு நினைவு...
இளையோள் கேட்டழுத இனிப்ப முதிற்கு
ஈடுயிணை இயற்கைப் பொருளாயீந்தீரே
உவப்பாய் கேட்டு உள்ளுரே நகைத்தேன்
ஊலகமே கைகொட்ட உயர்தரு சிந்தனையே
எண்ணமே வடிவாக எளிமைதனை உருவாக
ஏற்புடை நலம்தரு இணையொடு பல்லாண்டு
வாழிய நன்னலம் வணங்கிட்டேன் நன்றியோடே.!

வளர்தமிழ்ச் செல்வி வசுப்ரதா அவர்களின் அன்புத்தாயாரின் பிறந்தநாளுக்காய்..!

பிப் 27, 2012 7:12 pm
நம் முத்தமிழ் மன்ற கவிதாயினிகள் திருமதி. ஹேமபாலாஜி மற்றும் வளர்தமிழ்ச் செல்வி வசுப்ரதா அவர்களின் அன்பு தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் இன்று தன்னுடைய(28-பிப்-2012) பிறந்த நாளினை இனிதே தன் குடும்பத்தினருடன், பேரன் பேத்தியரின் அட்டகாசத்தோடு இனிதே கொண்டாடவிருக்கின்றார்கள்.

அன்பு நிறைசால் அம்மாவிற்கு,

என்றும் குறைவிலா மகிழ்வோடு, நோய் நொடி நீங்கி உள்ளம் குறையாத உவகை கொண்டு பல்லாண்டு காலம் இதே நற்குடும்பத்தாரோடு வாழ்வாங்கு வாழ்வீர்களாகவென நான் வணங்கும் செந்தூரானை மனமுருகி வேண்டிக் கொள்கின்றேன்.

படம்


பலருக்குப காரம்செய் தேபரிசளித் தீர்மனதை
பலவையுமென் னில்கடந்தா லும்பழகிய நினைவகலா
பசியெடுத்தோர் பஞ்சிட்டு பறப்ப தான்முயல
புசிதரு தாயாய் புகட்டீர் நல்லுணவே
சொற்சில சுருங்கிடின் சுவையமுது குறையா
பற்பல கருகொண்டு பகர்வீர் நற்கருத்தே
ஆண்டவனடி பால்வேண்டியே நீர்
ஆயுள்மு ழுதும்நற் சுகமெய்து வீரென்று

எங்கே ..! எங்கே..!

எங்கே ..! எங்கே..!படம்படம்

தந்தைக்குமந் திரமாய்தவித் தபிள்ளைக்கொரு ஆகாரமாய்
_____முந்தைமொழி யிலேமுற்றிட யாசித்தான் கந்தன் ‍
தன்செஞ்சோற் றுகடனை தவிடுமின்றி கழித்திடவே
_____தமையனருக் கெதிராய் நடந்திறந்தான் கர்ணன்
மாநிலமாள் வோர்க்கு மதியும் கூடிடவேண்டுமே
_____நானிலெமெங் கும்நல்லாட்சி புரிபவன் மன்னன்
பாசம்பல படைத்திரு வேசம்பல தரித்திரு
_____மோசமாய் போனாலும் முன்னின்று யழைப்பானெமன்
என்னையுமிங் கேயாட்டுவித் தேழில்மிகு நடனங்காட்டி
____இறைவனவன் இருப்பது தானெங்கே..?? படம்படம்படம்

எல்லாமே நான் கண்ட சுவை..

நாலாறு காலமாய் வந்திடாவென் புத்தி
நாளையா வரப்போகுது அதுவும் இல்லையே ‍
நாளையே நாறப் போகுது என்சிவனே!

கடவுளென் போன் கற்சிலை நிற்பவ னல்லதோர்
கற்பின் வடிவமாய் பொருப்பின் பூமுடிச்சாய்
நட்பின் ரீங்காரமாய் நல்லதே நடாத்துபவன்

கருணை மறந்து கவலை தந்தானெனக்கு
அருளை வழங்கிட அயர்ந்திட் டானவனே
தந்த கவலையோ தனித்தனியாய் தந்திடாவே
அலைமொத்தமாய் தலைமிச்சமாய்.

ஒத்தை மகனாய் பிறந்தோன்
ஓயாதே உழைத்தே செத்தான்
தன்னுடன் பிறப்போ தகைசால்
தமையனவன் தருவான் சீரென்றும்
தகப்பனுக்கும் சோறுட்ட தாயவள்
சீராட்ட தம்பியோன் படும்பாடு அப்பப்பா...
என்னிலை இவையில்லை எனினும்
ஏறக்குறைய வந்திடும் கடிதே

நன்றாய் வளர்ந்தோங்க நான்குமறை
கன்றாய் தேறிகரைசேற என்றும்
வென்றாய் நீயென வெறுப்போரும்
சொல்லிடவே அருள்வாய் இறையே!

சித்திரை 1

அந்த நிலையிலே எவ்வாறு படைத்தேனோ அதே நிலையிலே மாற்றங்கள் கொள்ளாமல் பதிய நினைத்தாலும் சில குறைகளும், சொற்கோர்வைகளும் மாற்றம் வேண்டியிருப்பதால் கொஞ்சம் திருத்தி பதிய நினைக்கின்றேன். குறைகளை சுட்டிக்காட்டிடுக.


2006ல் சித்திரை முதல் எங்கள் குடும்ப வாழ்வில் நித்திரை தொலைந்த நாள்.. அந்த நாளினை எண்ணி கிறுக்கிய சில கிறுக்கலில் ஒன்று..



என்னிரு கண்களிலொ ருவனெட்டிய ஈட்டியிரு
பன்னிரு காலமாய்ப றந்தஎங்கள் கொடி - முன்னொரு
பொழுதிலே முழுதாய் சாய்ந்திடவே; கழிவாறாய்
கரைந்திட்ட கணங்களும் வந்திடா, நலிவடைந்தே
கரையோடி நப்பாசை புரையோடி மீண்டெழுமே
எங்களுமோர் நாள் நன்னொரு புதுநாளாய்..

த‌மக்கையரே

தன்னை யறிய‌சொல் நின்றுதா னுணர்த்தும்
அன்னை யரின்பால் அகமகிழ்வும் கொள்நிற்க‌
முன்னைப் பிறந்தே முடிசூடா மன்னவனிவன்
பின்னாலே வருவானென பெருமுரசு கொட்டி
நாறாய் இருந்தாலும் நல்மணமொடு வீசிடவே
ஆறாம் அறிவையும் அதனொடு தெளிவையும்
சீராய் தந்திட்ட சீர்மிகு த‌மக்கையரே! நினக்கு
தேராய் நின்று தெளித்திடவே எம்முழைப்பு

முதியோர் இல்லத்து மாந்தர்கள்

ஒரடி வயித்துக்கு ஓயாத பொழப்பு
நாயடி பட்டு நாளும் நகருது.
பொன்னா முத்தா பூவிதழ் கண்ணா
நாளை நீவளர்ந்து நாடறிய நீநடந்து
ஊரோடு உலகமும் உன்னைத் தேட‌
நானும் வளர்த்தேன் நலமாய் உன்னையே!

பட்டிலே நீயுறங்க பலமரமும் செதுக்கி
கட்டிலே காலுக்காய் கால்கடுக்க‌ நின்றோமே
மொட்டிலே நீயுதைக்க முறுவல் கொண்டதாலோ
எட்டியே உதைத்தாலும் இப்பவும் சிரிக்கின்றோம்

பிஞ்சிலே நீதந்த பெருஞ்சுவை கண்டே
அஞ்சியே நகர்த்திட்டோம் அடுத்தடுத்த பொழுதினையே
நஞ்சாய் நீஉரைக்க நாளும் நின்னொடு
கஞ்சிக்கு வழி தேடி கையேந்தி நிற்காமாலே
நெஞ்சிருக்குமுரங்கொண்டு நிமிர்ந்து நடப்போமே!

யாரிடம் கேட்பேன்?








வரம்தந் தாய்வளம் தந்தாய் விட்டகலா
வரிவரி யாய் உறவுமீந்தாய் நெறியொடு
இன்பமுங் கூடி இசைபட வாழீரென்றோர்
அன்பெனும் உறவை அமைத்திட்ட மென்னிறைவா

சண்டையும் சச்சரவும் சாதீயக் கொடுமையோடு
மண்டையும் உடைந்து மரணமும் நேர்ந்திட‌
விட்டுப்பார்க் கும்பட்டமாய் வேடிக்கையுங்காட்டி
சட்டென்று நீவிறக்கும் சாமர்த்தியந்தான் எங்கே?

வீரவணக்கம் செலுத்த விழுமியே வருமிளைஞர்
ஈரத் தலையொடு செங்குருதியை துவட்டுவதேன்
யாருஞ்சொல் லித்தடுத்திட வேண்டாவோ! இன்னிலை
தானாய் உணரதவழ்ந்து வருங்கால முமெங்கே?



குட்டிக்கவிதை


தினமும் இருமுறை
நானும் உத்தமனாகின்றேன்.!
ஓடாத கடிகாரம்.

பெற்றோருக்காய்

அம்மா:
அறுவரி லொருவராய் பிறந்தீர், நல்லுறவு
ஆறிடா வண்ணமாய் வளந்தீர் ‍‍- அகவை
தேறியே ஆனைமுக நாமமுங் கொண்டு
மாறிடா குணமொ டீகையுங் கொண்டெடுத்
தெறிந்து பேசிடா இயல்போடு பேணிடும்
உறவொடு நல்லோர் ஒருவரை மணந்தீரே!



அப்பா:
இருத்தாரத் திலேஇளை யவரின் முத்தாராமே
ஒருத்தார மக்களை வெறுத் தாருமிலவே
பொறுத்தா பூமியாள்வா ரென்று நின்றீர்
பொறுத்தே! பொழுதுகளும் நலமொடு கழியவே!


இருவருக்கும்:
ஐயாறு ஆண்டோட‌டுத் த‌நான்கு கூட்டி
மெய்யாலே வாழ்வோடு மேன்மையுஞ் சூட்டி
அன்பாலே ஈந்தெடுத்த மக்களோடு நீவிர்
ஆண்டுபல வாழ்ந்திட அவர்களி லொருவனாய்
ஆண்டவன் துணையோ டாயுள்நிறை வேண்டிட்டேன் ..!

113,000- நாயகருக்கு


ஆடுங்கிளை யிலேயாட்டியா டுமட மந்திக்கும்
பாடுங்கிள் ளைக்கோர் பசிதீர கனியீந்து
நாடும் நல்லவர் நலம்பெற வளிதந்து,
ஓடும் உலகிலே ஒய்யார வனப்புமுந்
தேடும் மனிதருக்கு தித்தித்திர வியமாய்

ஆலென பெயரோடு ஆதி தருவாய்
மூலமென நின்றா டுமுனக் கோரொப்பாய்
எம்மன்னை கொள்வரொருவ ரேறுபுகழ் நாயகனாம்
ஏ ஆர் ஆரென இனியநாமமுங் கொண்டு
எம்மிதயத் தேரிலேறி தினமும் வருவாரே.!

தேயுமுன் புகழைதிரட் டிகொடுவிடன்றேல்
தேடவேண்டி நிலைவரும் நாளை சரித்திரத்திலே..!


1,13,000 பதிவுகளுக்கு எந்தன் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


நன்றி : விக்கிபீடியா

சத்திய சோ(சா)தனை


அரிச்சந்திரனும், அவனது மனைவியும், மகனும் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொள்ளல். ரவிவர்மாவின் ஓவியம்.


சத்திய வாழ்விலே சகலமும் நன்மையோடே
நித்தமுங் நெறிகொண்டு நெருடா இடர்கண்டு
வித்தகனாய் நீயாண்டாய் வீரமிகு அரிச்சந்திரனே!
அக்கினியில் புத்திரனை அர்பணிக்க வேண்டினின்
பத்தினியின் தாலியையும் ப‌ணயமாய் நீகேட்க
சத்தியமும் சோதனைக்குள் சரணங்கண்டே
மத்திமமாய் நானும் மனந்தி ரும்பினேனே!



நன்றி :
விக்கிபீடியா

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85% ... 9%E0%AF%8D

கனவோடு சில வரிகள்.!

இந்தக் கிறுக்கலினை ஒரு வரியில் இருக்கும் சொற்களை இரண்டு இரண்டு தொகுப்பாக எடுத்துப் படிக்கும் போது கொஞ்சம் பொருள் (கவிதை போல) விளங்கலாம். தனித்தனியாக வாசிக்கும் உரை நடை போன்ற உணர்வினைத் தந்தாலும் தரலாம்..!



அன்றொரு நாளிரவிலே அயர்ந்து நானுறங்க
காரிருளோடு கண்டேன் ஓர் கனவு...!

என்னோடு தமக்கையாரும் எப்போதுமே சண்டை தான்
முன்பகையுமில்லை மூத்தவரென்ற பவ்யமுமில்லை
தம்பி இவனென்று தாங்கிய பொழுதுகளுண்டு-ஆனால்
தமக்கை இவரென்று அன்பொழுத பொழுதுண்டோ.? :pale:

வந்த கனவிலும் வம்பிழுக்க நானிருந்தேன் :argue:
வாங்கிக் கொள்ள அவரிருந்தாரே..! :hello1: :hello1:
சமாச்சாரம் இல்லாமலே சண்டையும் நடக்குதாங்கே
சமரசம் செய்வதற்கு சாமீ கூட வரலீயே!! :shaking: :shaking:

சண்டை போடுகையிலே சட்டென்று ஓர்குரல்
திகிலோடு நான் திரும்ப திட்டியபடி அம்மாவுமங்கே!
தரிசனம் கண்டமென்கால் தகதிதத்தோம் போட்டனவே

வயலுக்குப் போடா தம்பி.! வரப்பிலே உட்காரு
ஆடு மாடு வந்திடாமே அடிச்சி விரட்டிக்கிட்டு
வெயிலும் படாம வேம்பு நிழலியேயிரு :glasses9: :glasses9:

அக்காவும் நானும் அப்புறமா வந்துடுவோம்
அன்பாய் அம்மா சொல்ல ஆட்டினேன் தலையை மறுத்தே.!

அக்கா வராம அடியேனும் போகமாட்டேன்
முக்காலமும் சத்தியமாய் மூணுமுறை சொல்லிட்டேன்
இவனோடு நானா போக, அது என்னாலே முடியாது
என்னாளும் முடியாதம்மா..- இது அக்கா :spiderman: :spiderman:

சண்டை போடாம சமத்தாப் போங்கடா
பின்னாலே நான் வாரேன் பொறுத்த நேரத்திலே
சொல்லி நின்ற அம்மாகுரலே சுவரோடு எதிரொலிக்க
அன்பாய் வந்த குரல் அம்பாய் மாறுமுன்னே
சண்டை போட்ட நாங்கள் சமாதானமாகிக் கொண்டு
சுட்டு வச்ச பணியாராத்தை சுருட்டிக்கிட்டு ஓடிட்டோமே!! :thumbright:

ஓடிப்பிடிச்சிக்கிட்டு ஒருத்தரையொருத்தர் அடிச்சிக்கிட்டு
காட்டுப் புறாவுக்கும் கையிலேயே தீனி கொடுத்துக்கிட்டு
பத்தே நிமிசத்துல பனங்காட்டை கடந்திட்டோம்

பனங்காட்டு எல்லையிலே பத்தடியாழக் கண்மாயிருக்கு
கண்மாய்க்கரையோரம் காளிக்கு கோயில் ஒன்று
கோயில் பூசாரியோ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாராம்
ஆளரவம் இல்லாமலே அப்படியொரு நிசப்தம்
அக்கா காதுல மட்டும் ஏனோ சத்தம்..! :idea1: :idea1:

ஒளிஞ்சிக்கிட்டு யாரோ ஒய்யாராமாய்ச் சிரிக்குதுடா
அழுகிட்டே அக்கா சொல்ல அரண்டுட்டேனே நானுந்தான்

சாமி சிலையோடு சன்னிதியே நகரக் கண்டேன்
ஓடி வந்த மூச்சும் ஓய்வெடுக்கப் பார்த்திருச்சு.
பின்னங்கால் பிடறியடிக்க பிச்சுக்கிட்டு வந்துட்டோம்

வயலுக்குப் போகாமலே வழியிலே திரும்பிடவே
காட்டமாய் திட்டுமுன்னே கலங்கிய எம்மைக் கண்டு
என்னடா ஆச்சுன்னு எப்படியெப்படியோ கேட்டாலும்
திடகாத்திரமாய் சொல்லுவதற்கு திராணியில்லை என்னிடமும்
அழுகாச்சி காவியமாய் அம்மாவிடம் ஒப்புவிக்க :crybaby: :crybaby: :crybaby:

கண்முழிச்சிப் பார்க்கையிலே கட்டிலுக்கு மேலே நானிருக்க
கனவா இதுவென கலகலன்னு சிரிச்சிட்டேன்.!! :sad1: :sad1:

ஹேமா அக்காவின் திருமண நாளுக்கான வாழ்த்தாக..

நாறொடு இணையும் நல்மலரனைய தேன்
சாறொடு புரளும் தெவிட்டா சுளைப்பலா,
பாரொடு புகழும் பைந்தமிழ் மொழிபோல
வேரொடு தளையும் வெள்ளருகு கொடியாகி
ஊரொடு ஒழுக உயர்புகழ் அடைந்தே -நீவிர்
சீரோடு வாழ சீர்மிகு வேலவனை வேண்டிட்டே..!




சூரியனும் சந்திரனுமாய் சுடர்விடும் நல்விளக்காய்
மாறிவரும் உலகினிலே மதிகொண்டு வென்றிடவே
சபையொடு புகழும் சரித்திரச் சொல்லோடு
சலிக்காவின் பமுசம ரசமிலா நற்தீகையுங்
நலியா நலனொடு குறையா செல்வங்கொண்டு
பெற்ற உறவுகளோடு பெருமைபட வாழ்ந்திடவே
உற்ற தம்பியாய் உம்மை வாழ்த்திடுவேனே..!

சனி, 17 மார்ச், 2012

உண்மைக்காதல்

நேரம் பார்த்து வருவதில்லை
நேர பார்க்க விடுவதுமில்லை..!

அங்கமுத்துவுக்கு ஓராசை

அனுதினமும் இரந்தேவாழும்
அங்கமுத்துவுக்கு ஓராசை
ஆக்கித்தான் சாப்பிட்டுப் பார்ப்போமேவென்று.!

சரியென முடிவு செய்து
சட்டியுடன் சென்றான் அடுக்களைக்கு
அங்கே,
அடுப்பெது,சமைப்பது தெரியாமல்
ஆலையிட்ட கரும்பாய் நின்றான்..!










மோதிப்பார்க்கலாம் தப்பில்லை ஆனால்
முட்ட வேண்டுமே திறமும் நம்மிடத்தே..

ஔவை அவர்களின்பிறந்தநாள்.!!

அறிவுசார் கருத்தூன்றியே ஆற்றல்தரு பதிவோடே
அழகுசால் கவிகொண்டு ஆள்ந்திடுமோர் தனிமதியே!
தெளிவுதருவி ளநீராயீந் தெள்ளுதமிழ்ப் புலமைசூடி
தெவிட்டாத கேள்வியோடு திகட்டா பதிலுமீந்து
மிரட்டா வன்புங்காட் டிடுமன்ற வித்தகியாம்
மெங்கள் ஔவை யம்மேநீ வாழியவே..!!



ஆதியவன் வகுந்தீந்த அழகுசேர் கல்வியு
மாநுந்தை யாயோடு அருள்தருவறி வுங்கூட்டி
ஆறாக் கல்வி அகலாவன்பு மீறாநெறியுங்
மேவாப் புகழோடு மெலியா நலனொடு
என்னாளும் நன்னாளாய் ஏற்றந் தருமோர்
பொன்னாளாய் நினக்கே விளங்கிடுகவே!



ஆறொடு புகழை அறியார் உளரோ தேன்
சாறொடு புரண்ட தென்பொதிகை வேர்பலா
நாதன்னி லூறும் நற்சுவை யொப்ப‌
ஆலுக்கு நிகராயத னையுந்தாண் டியே
தன்பலன் பாரா தந்திடும் கருத்தினில்
சிந்தையி லூறும் சிலகன‌வுக் கவியும்
செழுமையாய் மின்னுமோர்நட் சத்திரமாமே!
இன்னமும் கூட்டி ஈகையு ட‌னீந்து
நன்னெறி காட்டிட நாங்களும் வேண்டவே

பரஞ்சோதியாருக்காய்..!! - 2

காயத்தின் மீதேறியே காயங்கள் கவரும்போது
சாயமில்லா தொருள்ளம் சட்டென்று உதவியதே
மாயமாய் வந்ததோ என்றெண்ணி மனக்கவலை
ஓயுமொரு நாளில் உண்மையும் அறிந்திட்டேனே.

நானெல்லாம் வளம்பெற நல்ல நிலைதெளிபெற‌
நாளெல்லாம் தருநல்போத னையுமே மதில்விளை
ந‌ல்சாதனை யாய்மலரநீ யுழைத்தீரே நன்றெனக்கு
நான்மறவேன் மென்னாளும் நல்லதொரு நன்றியினை

பரஞ்சோதியாருக்காய்..!!

வள்ளி மணாளனாம் வடிவேலன் பார்வைபட்டு
அள்ளி யீந்தருளும் அணிசேர் செல்வவளமும்
வெள்ளிப் பனித்தலைய ரோடு விரும்பியே
பரவையுறங் குமரங்கநா தனுநன்னருள் புரியவே..!!

மஞ்சு அக்காவிற்காக‌!!

தன்னம்பிக் கைதந்தோருயி ரைகாத்திருத்தி
நன்னம்பிக் கைகொளச் செய்தீரே நின்
சிந்தையிலூறி யசிறப்புற செய்கை கண்டிங்கு
நிந்தையா யுமகிழ்வர் நித்தி னமுமே!
எந்தன் தமக்கையென தன்கை கொடுத்தே
மென்னாளும்பொன் னாளாய் வாழ்த்திடவே
வழிநெடுக மலரிறைத் திடுவேனே மகிழ்வோடே!!

என் பெற்றோரை நினைத்து சில கிறுக்கல்கள்..

பிப் 01, 2011 8:20 அம

இன்று எனக்குப் பிறந்த நாளாகையால் என் பெற்றோரை நினைத்து சில கிறுக்கல்கள்..



காட்டோடும் போரிட்டு களர்நிலனோடு பயிரிட்டு
மாட்டோடுமு ழன்று மகனை வளர்த்தீரே
வாடைக்கும் கோடைக்கும் வசந்தந்தருங் வேளைக்கு
மாடையாயி ருந்தென்னை நன்றே வளர
நலிந்தீரே நின்சுகமே; நற்றமிழ் பெற்றோரே


அணி : சிலேடையணி

*+*+*+*+*+*+*+*+*+*+*+* *+*+*+*+*+*+*+*+*+*+*+* *+*+*+*+*+*+*+*+*+*+*+*

அகவையோ திங்கள் மூன்றினிலே பெற்ற
மகவையோ பருகிட்டுயர் மடிப் பாலைத்தள்ள
நடுங்கிய குலையுயிரின் நகரவே தனைய‌தனை
ஒடுங்கிய பின்னொரு வேளையோதினீர் எமக்குமே!
அன்றே செய்வித்த அருந்தவச் செயலேல்
ஆகி நிற்கின்றேன் அகவை ஐந்தைதாய்..

அன்றேல் என்றோ நானே தடமறியா
செம்மறியாய் செத்துத்தான் போயிருப்பேன்
வாழும் வாழ்வதனில் வகையெடுக்க முடியா
தேவனின் பார்வையோடே தேர்ந்திருப்பர் சிலரே

ஆதியுஞ் சொல்லி அழகுற ஓதி
சாதியுஞ் சொல்லி சபையேற மெனக்கு
பாதியாய் ஈந்த பறைசாற் றுயிரே
நாதியாய் நானிருக்க நிம்மையே
நானுங் காப்பேன் எக்கணமு மருள்வீரே!!

எங்கள் நட்பின் வயதொன்றே!! - 2

ஊடலும் வரும் உளறலும் வருமாங்கே
ஆடலும் வரும் ‘ஆ’வென அலறலுமுண்டே
நாடே இயக்குங் நல்லதொரு நட்பே
வாடலிலா வளம் சேர்ப்பாயே எங்களுக்கும் :bounce: :bounce:


பொருள்கோள் : பூட்டுவிற் பொருள்கோள்

எங்கள் நட்பின் வயதொன்றே!!

அன்பின் உறவுகளே!

இன்றைய நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்.. ஆம்...என் ஆருயிர் தோழி வளர்தமிழ்ச்செல்வி யுவா அவர்களோடு நான் கொண்ட நட்பின் வயதுக் காலம் ஒன்று. நம் மன்றத்தில் பிப்ரவரி மூன்றாம் நாள் 2010ல் சேர்ந்த யுவா அவர்கள் இன்று மலை போல மாமணிப் பதிவுகளை நல்ல பயன் தரும் பதிவுகளாக நல்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் இணையத்தின் வழியே சந்தித்த அன்றே நம் மன்றத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறிய பொழுது தனக்கும் மிகவும் பிடித்திருக்கின்றது என்றும், எளிமையான மன்ற அழகும், அறிவு சார் கருத்துக்களைக் கொண்ட பதிவுகளும் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்த இரு நாட்களுக்குள்ளே நம் மன்றத்திலிணைந்து என்னை மகிழ்வு கொள்ளச் செய்தார்கள்..

நான் வணங்கும் இறையிடம் இந்த நல்லதொரு நட்பை என்னாளும் என்னை விட்டகலா வண்ணம் சிறப்புற சேவிக்க வேண்டுமென்பதே!!


எங்களின் நட்பிற்கு ஒரு வயதாகிவிட்ட படியால் சில கிறுக்கல்கள்..


அறிவே அழகே அசலின் ஒளியே
தெளிவே வடிவே தெள்ளுதமிழ் வேந்தே
கத்துங் கடலோடு காவியம் பாடி
சத்தமெடு சங்கொடு சரணமுஞ் சொல்லி
நெஞ்சிலே நின்றாடுங் நெடுபுகழ்செந் தூரழகனே
நின்னருள் வேண்டியே நிற்கின்றேன் இத்தருணமே


*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+

அன்பெனும் நட்பால் அழகுற சேர்த்திட்டாய்
மெந்தன் நட்பெடுங்கா லைநலமோடே தொடர
அன்றலர்ந்த மலரால் அடியோடு பற்றி
நன்றாகத் தொழுவேனே நான்வணங் கிறையையே


*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+

இன்பத்தையே யிரண்டாக்கி துன்பத்தையோ தூளாக்கி
அன்பெனு நாரோடழ குறகோர்த்தெடுக் கவரொளி
மன்னவ மார்பிலாடும் மாசில்லா நல்முத்தொப்ப
நன்றாய் தொடருமென் நட்பிற்கு வயதொன்றே(று)!!

உழவனுக்காய்..

அனைவருக்கும் என் சார்பில் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்....!!!





காடுவெட்டி நற்கழனி திருத்தியே
நாடுபோற்ற நற்மணி யீந்த
நாயகராங்கே நல்ல வராம்
நம்முழவ ரெனநானு மென்பேன்.


கட்டாந் தரையதனை நற்கழனி யாக்கியே
மொட்டாய் கரையுங்கொடி முல்லை மலரொப்ப
பட்டாய் அரும்பாடு பகலவனுந் தானறிவான்
சிட்டாய் நீசேர்த்த சிறுமணியை ஈந்தெமக்கு
விட்டாய் உயர்ந்தே விண்ணவர்க்கு மேலே..








மாகாணிப் படிஅரிசி மந்திரஞ் சொல்லியே
நோகாமல் வரமழைக் குமோவிவ் வுலகே;
சேற்று மண்னோடு நீபுரண்டு
செருப்பிலா காலோடு நன்னடந்து
ஊற்றிலே நீரெடுத்து உலகோர் உய்ய
நாற்றங் காலிலே நயமாய் நீகிடந்தாய்!



தன்னலம் கருதினால் தமக்கே போதுமென
பின்னலம் பாராது பெருவிளைச்சல் கொடாமலே
அண்ணலே நீயிருப்பின் அடியவனுக்கேது அடிசில்?




அந்தக் கலப்பையை நீபிடிக்க மெந்தன்
அகப்பையில் வருமே அன்னம் - அன்றில்
சுப்பனே சும்மாயிருந் தால்
சுருண்டொ டுங்கும் இவ்வுலகே
அப்பனே நீயிலை யேல்
அறுந்த நீரிலையே நான்!!



அடுத்து..

விவரமறியா குழந்தையின் குதலைமொழியில்...

“ஏப்பூ.. எங்க அப்பாவும் ஏர்க் கலப்பை புடிச்சிருக்காங்களே.. அதுக்காக இந்த பாட்டு..”



எப்பாடு பட்டாவது எம்மைக் கரையேத்த
சாப்பாடு போட்டே சாதனை யீந்தீர்
கூப்பாடு இலா குளிர் வாழ்வதனைக்
கூட்டித் தந்தீரே மெனக்கு; நாளை
நலம் மாமலரும் நன்னாளிலே
நானும் வேண்டுவேனே நின் நலமே!!

என் ஐயன் ராஜாவிற்காய்....- 3

12)

நலிவு காணின் நகைக்குங் கூட்டம்
நாணிலமெங்கும் நாணிலாவரும் உண்டே
நிந்தன் கருணை மென்நிம்மதி யளிக்க
நிதானமாய் அருள்வீர் நெடுங்கிடையாய் வேண்டியே!!

என் ஐயன் ராஜாவிற்காய்.... - 2

2)

அன்புற்ற ணைக்கும் அறிவொடு கைகூட்டி
இன்புற்று றவேங்கிய மென்னை - மண்புற்றிலோர்
மச்சுக் கொள்ளுறையுங் நல்லதொரு நாகம்
உச்சந்தலை கொள்ளொளிர் யுயர்மாணிக் கமொப்ப
மிச்சமறக் காட்டி மேன்மையுறச் செய்தீர்!!


(3)

நகர்ந்த நாட்களில் நல்லவை யெலாம்
பகர்ந்த நின்சொல் பக்குவப் படுத்த
பழகிய நானோ பாவல னானேன்
அழகிய பாதை அன்பொடு ஈந்தீர்


(4)

கட்டழகு வீரனின் காவியன் தன்னில்
மொட்டுமலர் போல மொழிந்தீர் அனுபவமாய்
பட்டிக் காட்டுப் பையனுக்கும் பாடஞ்சொல்லும்
விட்டில்புழு போல வெளிர்தரும் அமுதசுரபி


(5)

அன்னை மொழியாம் அழகுத் தமிழாம்
மன்னை ஈந்த மாணிக்கக் குன்றில்
தமிழோடும் நானும் தரமோடு பழக முத்
தமிழன்னை தந்த தாகம்தீர் தாடகம்..


(6)

ஆயிரமு மாயிரமாய் அழகுதரு நூறாயிரம்
பாயிரமோ டேபல் சுவையுங் கலப்ப
பகட்டெனும் பேயும் பயந்தோடிட வேயுந்தன்
நித்தியப் பதிவும் நிம்மதியைத் தந்தனவே!


(7)

இலட்ச பதிவென்னும் இலட்சிய பயணத்திலே
இலட்சினை பொறித்தமென் இருதயமே - லட்சணமாய்
நீமிளிர லட்சோப லட்சம் வேண்டுதலையே
அலட்சியமின்றியே ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்

என் ஐயன் ராஜாவிற்காய்....

என் அன்பு மன்ற உறவுகளே,

நம் அன்னைத் தமிழின்பால் அளவிலா பற்றும், அழகுத்தாயாம் முத்தமிழ் மன்றத்தில் முடிவிலாப் புகழும் பெற்று, இலட்சப் பதிவுகள் என்னும் இலட்சியக் கல்லின் மீதேறி இலட்சினை பொறிக்கவிருக்கும் எந்தன் மதிப்பிற்குரிய ஐயன், பெருமன்றம் சகோதரம் ஏ. ஆர். ஆர் அவர்களை எண்ணி என்னுள மகிழ்வு கொள்வதோடு அவர்களுக்காய் நான் கிறுக்கிய கிறுக்கல்களை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.


ஐயாவின், சொற்திறமையும், மொழி ஆளுமையையும் கண்டு நான் பன்முறை வியந்ததுண்டு. அப்பேர்ப் பட்ட கோ மகனுக்கே மகுடம் புனைய முயற்சிப்பது மா மலையின் கீழ் நின்றாடும் மயூரத்தைப் போன்றது. ஆதலின் பொறுத்தருள்கவே!!

(1)

முதலான வனேமுடிவா னவனேமுத லின்பொருளாய்
தெளிவான வனேதெள்ளு தமிழ்வளர் திருமுருகனே
நின்னை யேத்தியே நெடுங்குறை யிலாபா
வொன்றை பரிவுடன் பூட்டியே
மன்னைவாழ் மகாராசாவிற் கோர்மகுடம் புனைவேனே

என் பாசமிகு அண்ணனுக்காக... (ம‌ன்ற‌த்தையும் கூட்டிக் கொண்டே!!!)

ஓரிடமா யோடியாடி சேரிடமாய் சேர்ந்துனின்று
நாரிடமாய் வந்திணையும் நல்மலர்போல- வேறிடம்
தேடாது வெறுமனே வீழ்ந்தேனுன் மடியிலே!!


தத்தித்தத் திநடைபயின்று தடுக்கி விழுந்தெழுந்து
திக்கிக்திக் கிமொழிபேசியே திரிந்தேன் ஒரு பொழுதே!
மாதாவே னுனைக் கண்டு மடிமீது ஆசைகொண்டு
நின்மடிதே டியேநித்தமும் நாடியே வந்தேன்
வீழ்ந்தமென் னையேவீறிட் டழுகுமுன்னமே வாரி
யணைத் தெடுத்து வகையுடன் புராணங் கேட்டே
வரிசையோடு நிற்க வைத்தார் ஓர் உறவு..

செந்தூரா னைக்கண்டொரு கணம் சேவித்து
சீரழகன்தாள் பணிந்து செம்மையாய் வணங்கிவர
சிறப்புடன் நீ பணிக்க சென்றிட்டேன் அப்பொழுதே

கண்ட வேலவனின் காட்சி மறையுமுன்னே
கருத்தோடு அலைபேசி கத்தியது நற்செய்தி!!
பரமன்குறிச்சி பங்காளனின் வார்த்தையிலே
சிரமின்றி செயல்படவே சிந்தித்தேன் அப்பொழுதே

ஊட்டிவிடினும் சிறப்புற உண்ணக்கற் கச்செய்தலே
உண்மையான திறமெயன ஓதினார் எனக்குமே;
நான்கற்ற பாதைதனிலே நழுவும் காலங்கண்டே
நறுக்கென்று குட்டிநல்வழி காட்டியே பயணிக்க
வெறுப்பின்றி நடந்தேன் வெம்மையான பாலையிலே!

நன்றிச் சொல்லி நகரவும் மாட்டேன்
மன்றில் நின்று மருகவும் மாட்டேன்
அன்புடனே உன்னோடு அடுத்த பிறப்பிலாவது
அகவை பிந்தியேத் அம்பியாய் பிறப்பேனா
நன்றே சொல்லீர் நயமிகு என்னிறையே!!!

மன்றத்தாயின் மடியில்... 1

தீந்தமிழ் அன்னையாம்
தெளிவுறு முத்தமிழ் மன்றமே
ஓங்குபுகழ் உன்னில் ஒருதுரும்பாய் கூடி
அடம் பிடிக்காமலே ஆட்டம் போடாமலே
திடமாய் முடித்தேன் இரண்டாமாண்டு!!!.
ஓரிடமாய் இங்கு உண்டென நிரூபிக்கும்
உளம்கொள் ஒப்பிலா தமிழ் மாந்தர்களோடு
திண்டாட்டமின்றியே கொண்டாட்டம் போட்டு
குடிபுகுந்தேன் என்னவர்களின் மனதிலே!!!




தன்னாட்சி இணைய உலகினிலே
தமிழ் வலைகள் பற்பல!
தாய்த் தமிழை வளப்படுத்தியே
தழுவி நிற்பது சிற்சில!

நான் கண்ட வலைதனிலே
நச்சென்று வந்துனின்ற
நல்லதொரு என் உயிரே!

நினக்கு நானடிமை யென
நிறுத்தி விட்டேன் அப்பொழுதே

கற்றிட பலவுண்டு கருத்துச் செறிவுமுண்டு
சிற்றறிவை விலக்கி சிறப்பாய் மேன்மையுற
கற்றறிந்த அறிஞர்கள் களங்காணும் இடமுண்டு!

ஆத்திகமும் அறிவியலும் நாத்திகமும் நகைச்சுவையும்
அன்னைத் தமிழுக்கெழுதும், ஆரமாய்க் கவிதையும்
அடுத்தடுமையும் கதைகளும் இங்குண்டு

வெற்றி கொண்டோருக்கும் வேண்டி நிற்போருக்கும்
நட்புக் கரங்கொண்டு நலமாக பிராத்திக்க
நாங்கள் உண்டென வேண்டும் உறவுகளுண்டு!!!!


வாடிக்கையான செய்திகளும் வேடிக்கையான விளையாட்டும்
நன்னெறி புகட்டும் நல்லதொரு சிறுவர் பூங்காவும்
வேலை வாய்ப்புத் தகவலும், விவாத மன்றமுண்டு!!

அடுப்பங்களைத் தாண்டி ஆகாயந்தன்னிலே
சிறப்பாய் நடைபோடும் சீர்மைமிகு மகளிருக்கென
புதிதான தகவல்தரும் புதுமைப் பெண்கள் பகுதியும்
கண்ணுங் கருத்துமாய் கடமையென வளர்க்கும்
கற்பூர முல்லையாம் கவின்மிகு குழந்தை வளர்ப்பும்,
ஆண்டுகள் கழிந்தாலும் அசையாமல் நிற்கும்
அருமை மிகு மன்னையரின் அமுதமொழியும்
புகைப்படமும், பொழுதுபோக்கும் இங்குண்டு!

சாப்பிடத் தெரிந்த நம்மையே சமைக்கவும் கற்க
சரிநிகராய்ப் போட்டிபோடும் சமையல் பகுதியும்
கருப்பு வெள்ளையுமாய் கலந்த வண்ணமுமாய்
தெளிவாய் கண்டுனர காணொளிப்படமுமுண்டு!

இன்னும் சொல்லலாம் எடுத்தெழுத நேரமில்லை
நன்றே சொல்லிட்டேன் நயமிகு எந்தாய் பற்றி





அருமைமிகு உறவுகளை அடுக்கடுக்கி வைத்தாற்போல
பெருமைமிகு மன்றத்திலே பெரியவர்கள் பலருண்டு
சிறியேனின் சேட்டைகளை சேவித்தே வண்ணம்
சீருறச் செய்வீரே செயல்மிகு வேந்தர்களே!!


எழு நூற்றாயிரம் நொள்ளையிலாப் பதிவுகளும்
ஒருநூற்றா யிரந்தாண்டிய உரிமையான பதிவர்களுமே
ஒப்பிலா என்னன் னைக்கு ஓய்யாரமாய்
ஓர் மகுடம் சூட்டிட்ட உறவுகளுக்கு வந்தனமே!!

பெயர் பிரித்துச் சொல்லிடுனும் ஆங்கே
பேதமை வந்திடுமென அஞ்சியே பெருமன்றம்
சகோதரமென பெருமை பொங்கிட அழைப்பேனே!!

மன்றத்தாயின் மடியில்...

அன்பழனகே முருகனே அருந்தமிழ்த் தலைவனே
நின்னருள் வேண்டியே நித்தமும் பிராத்தித்தே
கிறுக்கியமென் வரிகளோடே கீழ்படிந்து வேண்டிட்டே
மென்னோடு வருவாய் எழில்மிகு செந்தூரானே!!!

ராஜா ஐயாவின் 80,000க்காக‌

1)

கொட்டு கொட்டு கொட்டென மென்முரசே
நட்டுச் செல்லும் நாயகனின் சாதனையையே
எட்டுப் பத்தாயிர மேதாண்டி யழகுப்பதி
விட்டுச் செல்லும் இமயமே நீ வாழியவே

2)

பண்போடே பாசவலையும் பகட்டிலா நகையும்
உள்ளன்போ டேயுன்னில மைந்த மெய்கண்டே
என்னையுமே யானும் ஏழுமுறை கேட்டதுண்டு
எப்படி யிப்படி இருக்கின்றார் களென்று

3)

அன்பகலாத மன்றபாசமும் அழுக்கிலா உறவும்
இன்றுவ‌ரை நான்க‌ண்ட‌ இனிமைத‌ரு ப‌திவுக‌ளும்
ந‌ன்றாய் தொடரீர் நாய‌கரே! ஐயா
என்னாளும் மலர இருகை கொண்டேந்தியே!!
4)

நாடோடும் வேகத்தில் நல்வளரும் இணையமே
நினக்கே போட்டியிட நிலவுலகில் உண்டொருவர்
அன்னைத் தமிழோடு அழகுறக் கொஞ்சியாடும்
இன்பத்தமிழனாம் எங்கள் ஐயா வாழியவே

புத்தனை நாடியே..

அலரிலா வாழ்வதனைத்தேடி அறிவோடு பயணிக்க
சிலரிலா ரிவாய்முகமேந் தியசிரிப்போடே - பலருள்
பகைமைகொள் நெஞ்சோடே பரிவறக் குழாவ
கடைந்தேமென் நெஞ்சம் கரையுருகி யோடியதோர்
காட்டாற்று வெள்ளமொப்ப போதிமர புத்தனுக்கே
புரிந்தேவிவ் வழியத்தனை யும்வேரறுக் கமர்ந்தானோ
பரிதவிக்குமெ னக்கோ பகர ஆளில்லை
தெளிவாய் நானும் சரணமடைய வேனுன்னிடமே!


துன்ப‌மில்லா வாழ்வ‌த‌னைத்தேடி அறிவு கொண்டு நான் ப‌ய‌ணித்தேன். சில‌ரிலார் (எதிர்மறையாக: பலரது) வாயிலும், முக‌த்திலுமே சிரிப்பைக் க‌ண்டேன். இன்னும் ப‌லரது ப‌கைமையைக் கொண்டாடும் நெஞ்சோடே என்னோடு ப‌ரிவில்லாம‌ல் ப‌ழ‌குவ‌தையும் க‌ண்டேன். க‌ண்ட‌ என் நெஞ்ச‌ம் க‌ரை உடைந்து க‌ட்டுப்பாடு இல்லாம‌ல் ஓடும் காட்டாற்றைப் போல‌ ம‌ன‌ம் ஒருமைப்ப‌டாம‌ல் இருந்து விட்ட‌து.

போதி ம‌ர‌த்த‌டியின் கீழ் இருக்கும்/ இருந்த‌ புத்த‌னுக்கும் இவ்வ‌ழி புரிந்திருக்குமோ? அத‌னால் தான் ஞான‌ம் தேடிச்சென்றாரோ? அத்த‌னையும் வேர‌றுத்து விட‌ வேண்டும் என்று ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்து விட்டாரோ? ப‌ரித‌விக்கும் என‌க்கும் கூட‌ பக‌ர‌ (சொல்ல‌) ச‌ரியான‌ ஆளில்லை. ஆகையால் புத்த‌பிரானே நானும் உன்னிட‌மே ச‌ர‌ண‌ம‌டைகின்றேன்.

திருமண நாள் வாழ்த்து..

இன்று தங்களுடைய 25 ஆவது திருமண நாளினைக்கொண்டாடும் என் அருமைத்தோழி வளர்தமிழ்ச்செல்வி யுவா அவர்களின் தாய் தந்தையருக்கு மகன் என்ற நிலையிலே என் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.




பொங்கு வீழருவி பொழில்வரு புதுப்புனலோடு
தங்குதடையற தவழ்ந்தாடும் கயல்போல - சங்கோடே
வளர்சதை திரண்ட சன்னதொரு உயிரியொப்ப‌
வளர்முக நன்னாளாய் வளர்பொழுது அமையவே
நன்றாய் வாழ்த்துகிறேன் நலமிக்க மென்னுறவுகளே...!!

கிளை முறிந்த மரங்கள்

பாலூட்டி சீராட்டி பக்குவமாய் குளிப்பாட்டி
தேனும் திணைமாவும் தெள்ளுதமிழும் புகட்டி
நாம்பெற்ற மைந்தன் நலமாய் வாழ் வேண்டி
இளநங்கையெனும் மங்கை யொருத்தியைக்கூட்டி
இல்லறம் நல்லறமாய் வாழ வாழ்த்தினோமே!!

வந்த மகராசி வருசம் முடிவதற்குள்ளே
வார்த்தைகொண்டு வதைத்தெடுக்க; மனதை துளைத்தெடுக்க
நேரமெடுக்காமல் நெடுந்துயர் கொடுக்காமல்
வந்த மனகலக்கத்தையே வலிமையான ஆயுதமாய் பாவிக்க
என்னவள் என்னை விட்டு பிரிந்தாள் அவள்..
மண்ணுலக வாழ்வில் மறக்காத நினைவுகளோடு
விண்ணுலகில் எனக்காய் வீடுகட்டச்சென்றாள்.

கால்வயிற்றுக் கஞ்சியேனும் என் மகன்
கட்டிய மனைவி தருவாளென்று
நித்தமும் ஏங்கியே நிம்மதியைத்தொலைத்தேன்
வேலைக்கு அவன் செல்ல வெளியில் மிடுக்காய் இவள் உலாவ
கோலம் போடுவது முதல் கொழம்புச்சட்டி கழுவுவது வரை
பொறுப்பாய் நான் கற்றேன் ..
எல்லாம் நம் பிள்ளைக்காகத்தானே என்று..

தேற்றிய மனதிற்கு திடமாய் வந்தது
தித்திக்கும் ஒரு செய்தி
மாத பட்ஜெட்டில் விழும் துண்டை
மதிகொண்டு அகற்றிடவே மெனக்கு
மத்தியான சோத்தை போடா மென
நீளமான கதையொன்றை நித்தியரசியிடம் மகன் சொல்ல…

விடுவாளா சண்டாளி வேகம் பூட்டிய
வேட்டொன்றை வைத்தாள் எனக்கு
முழு நேர சோத்தையுமொரு நேரமே சாப்பிடுங்கள் மாமாவென்று
முற்றும் துறந்த முனிவனுக்குப் போலவே
மூன்று கரண்டி சாதம் மட்டும் தந்தாளே!!
பெற்றோரும் வேண்டாவே சுற்றத்தாரும் வேண்டாவே
தங்களாய் வாழ்ந்த நாங்களில் இன்று நான் மட்டும் நிற்க
என்னவள் என்னை விட்டுச்சென்றதன் காரணமேனோ??

யாரிடம் போய் எப்படி அழுவேன்?
எவரிடம் போய் என்னவென்று சொல்வேன்?
காலங்கள் நகர்த்தவே கடினமான வேளையினிலே
கால்களை நகர்த்தியே கடிதூரம் சென்றிற்றேன்
கிழக்கு வீதியினிலே கிழடுகளுக்கு இல்லமொன்று இருப்பதாய்
கில்லி விளையாடிய சிறுவன் சொல்ல ஆங்கே
கண்டேன் கருத்தொற்றிய பலபேரை
நலமாய் விசாரித்து பலமாய் வரவேற்க
நானும் கலந்திட்டேன்


சொந்தக்கதை சோகக்கதை சொல்லி அழப்போக
நாங்களும் அப்படியேமென்று
நகைத்துக்கொண்டே அவர்கள் கேட்க
கடவுளை கணநேரம் கருத்தில் வைத்தேன்
கிளை முறிந்த மரமாய் விடாமல்
கிளை முறிந்த மரங்களைக்கொண்டே
வனமொன்று உருவாக்கியதேனோ வென்று!!!

ஒரு தாயின் மகிழ்வு..

உந்தன் விழியோரம் வழியும்நீர்கண்டு
நானும் சிலிர்த்திட்டேன் சில நொடிகள்...

உந்த‌ன் ப‌வ‌ள‌வாய் வருகுள‌றல் க‌ண்டு
நானும் சிலாகித்தேன் ப‌ல‌ நொடிக‌ள்...

கால்க‌டுக்க‌ க‌ழ‌னியிலிற‌ங்கி
க‌திர‌வ‌ன் ம‌றைபொழுது வேலை முடித்து

காட்டோடு போட்டி போட்டு
க‌ருவேல‌ ம‌ர‌க்க‌ட்டோடு த‌லை சும‌ந்து

நித்த‌முமுழைத்து ப‌ஞ்சு மெத்த‌மாய் வ‌ள‌ர்த்த‌
அழ‌கான‌ நின் ம‌க‌ளிட்ட‌ கோல‌ம்
அம்ச‌மாய் இருப்ப‌து க‌ண்டோ...

அன்றேல்

நேர்த்தியாய் நின் புத‌ல்வ‌ன்
ஒன்றாம் வ‌குப்பிலிருந்து
ஒய்யார‌மாய் இரெண்டாம் வ‌குப்பு
பாசாயிட்டேன‌ம்மா வென்று
ப‌க‌ர்ந்த‌ மொழி க‌ண்டோ...

ஏறிவ‌ந்த‌ ஆன‌ந்த‌ம் எதுவாக‌யிருப்பினும்
என்றுமுங்க‌ளோடு நீடித்திருக்க‌
எளிமையாய் வாழ்த்துகிறேன் சீரிள‌ம் தாயே...


திருமண நாள் வாழ்த்து..

செப் 01, 2010 4:25 am திருமண நாள் வாழ்த்து..

கரும்பனையோ டேகட்டிப் பிடித்து மழை
காணாகழ னியோடுவெட்டி விதைத்து - கருவேல
மரக்கரியை கரிசனமாய் சுட்டு எடுத்து
கண்ணே, மைந்தா, காரிருள் வண்ணா
நின்னிலை மாறநித்த முழைப்பே னென்று
நித்திரை குறைய மெனக்காய் பட்ட
பாட்டை எண்ணியே எந்தையின்தாள் பற்றியே..

கட்டிய மணாளனோடு கரம் கோர்த்து
காட்டிய வழிதனில் கால்பதித்து – தட்டிய
தடைதனை தகர்ந்தெறிந்து இல்லற வாழ்விலே
பெற்ற குஞ்சுகளை பெருமைபட வளர்த்து
தனக்காய் வாழாமெனக்காய் வாழ்ந்தே
வருமெந்தன் அரசியே என்னையீந்தாயே!!

இருபதினாறோடு மொன்றைக் கூட்டியே
இளமைமாறா அந்நாள்தனில் சுற்றஞ்சூழ
சுடர் விடும் சோதியை நிறுத்தி
ஆண்டாண்டு காலம் வாழ்வீரென
அவையோர் மனமுவந்து வாழ்த்த
நல்லறமாய் நீங்கள் வாழ்வீரென
நாதங்களும் இன்னிசையாய் முழங்க
இருவரும் இணைந்ததாய்
இயம்பினீர் ஓர் நாள்…

அந்நாளையே இன்னாளிலே அழகாய் நினைவுகூற
ஆண்டவனை பிராத்திக்கின்றேமென்
ஆயுள் முழுக்க வரவேண்டி

பொருட்செல்வம் வந்தே சென்றாலும் உங்கள்
அருட்செல்வம் அடியேனுக்கு வேண்டுமென்னாளும்…

எந்தன் உயிரே!!

உந்தன்மடியில் தலைவைத்து
வயிற்றில் முகம்புதைத்து
என்னிலை மறந்த விருஇமைதனை மூடியே
சிலமணித்துளிகள் சிறப்பாய் நானுறங்க
சீராட்டிடுவதாய் நானுணர்ந்தேன்…

கண்ட உணர்வதனை களிப்புடன் செய்திடவே
நனவிலே நீயும் நடத்துவது எப்போது??..
கருத்தறிந்து படித்தவர்களே காரணம் சொல்வீரே
பொருளறிந்து படித்தவர்களே புது விளக்கம் தருவீரே...


நன்றி...

என் உயிருக்குயிரானவளே/ உயிருக்குயிரானவரே,

உனது மடியில் தலை வைத்து, உந்தன் வயிற்றில் என் முகம் பதித்த வண்ணம் என் இயல்பான கடமைகள், அலுவல்கள்,இன்ன பிற இவையெல்லாம் மறந்து என் இமைகள் மூடியே சில மணித்துணிகள் நான் உறங்குதல் வேண்டும். அந்த உறக்கத்தை நீங்கள் சீராட்டிடுவதாகவும் உணர்ந்தேன்.

நான் கண்ட கனவினை நனவாக்கச் செய்திடல் எப்போது?

ஏன் இவ்வாறு எனக்குத்தோன்றியது என்று இந்த வரிகளை கருத்து அறிந்து படித்தவர்களே காரணம் சொல்லுங்களேன்..

இதன் உட்பொருள் அறிந்து கொண்ட பெருமக்களே புதுமையான விளக்கம் தாருங்களேன்.


இப்படி எழுதிய கவிதை இது.

நன்றி
:salute: :salute: :salute:
Related Posts Plugin for WordPress, Blogger...