வெள்ளி, 21 அக்டோபர், 2011

எப்போது தருவாய்

பால வயதினிலே பருக உயர்மடி தந்தாய்
பள்ளி வயதினிலே பாலமாய் நீ வந்தாய்
ருசியை நான் காண பசியை நீ உண்டாய் !!

தேனும் தினைமாவும் தெள்ளுதமிழ் முத்தமும்
தெவிட்டா நின் சிரிப்பினூடே...
பெற்ற கடமையென பேருக்காய் வளர்க்காமல்
உற்ற புத்திரென உள்ளுணர்வோடே ஊட்டி வளர்த்தாய்

கண்ட பலகலையும் கற்றிடவே
கற்போனாய் நான் வளர்ந்தேன்

தென்னைமரம் போல தெவிட்டாத பலசுவையும்
பனை மரம் போல பதமான நல் நீரும்
புன்னை மரம் போல பொழிவுதரு நல்நிழலும்
அருகு போல அகலாத உறவுக்கொடியும்
நல்விதமாய் நீ ஈந்தாய் நலமாய் நான் வளர

பாய்பின்னும் போதே பக்குவமாய் நீ அமர்ந்து
டைப் ரைட்டர் போல தட்டச்சு செய்கையிலே
திடிரென நான் புகுந்து தினமும் உன் மடியிலே
திருமாலின் சயனமாய் தூங்கிய நினைவோடே
திக்குத்தெரியாத காட்டினிலே
திண்டாடி முழிக்கும் போது
திரும்பி பார்க்கின்றேன் என் நினைவை
எப்போது நீ தருவாய் எழில்மிகு உன் மடியை....


நன்றி

:salute: :salute: :salute:
Related Posts Plugin for WordPress, Blogger...