வெள்ளி, 22 ஜூன், 2012

பூமி வெப்பமயமாதலை விளக்கும் காணொளி.



 

சுற்றுலாப் பயணிகள் கடளுக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பனி மலை உருகி கடலோடு கலந்து விட்டதை நேரடியாக தங்கள் வீடியோவில் பதிவு செய்திருக்கும் காட்சி இது.

பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கின்றது. பிளாஸ்டிக் உபயோகத்தினை குறைத்து மக்கும் பொருட்களை உபயோகிக்கச் சொல்லி அரசே சொல்லி சொல்லிப் பார்த்தாலும் கேட்பாரெவர்? அதனால் தான் இறைவனே சதிராட்டத்தை தொடங்கி விட்டார்/ன்/ள்.

வீட்டிற்கு ஒரிரு மரங்களாவது வளர்ப்போம்! நம் பங்கிற்கென புவி வெப்பமயமாதலைக் குறைப்போம்.

நன்றி

youtube

புதன், 20 ஜூன், 2012

பொன் மொழிகள் - விவேகானந்தர் - 1

  • இறைவன் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கின்றார்.
  •  பரபரப்பைக் காட்டிலும் சுறுசுறுப்பே சிறப்பானது.
  • வீண் விவாதம் செய்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
  • வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம் ஒழுக்கம் மட்டுமே.
  • கீழ்ப்படியும் குணம் கொண்டவன் கட்டளையிடும் தகுதி பெறுவான்.
  • நன்மை செய்வது ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்கட்டும்.
  • தளராத மன உறுதியுடன் குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள்.
  • உண்மையும் தூய்மையும் என்றும் இணைந்தே இருக்கும்.
  • உண்மை எப்போதும் பொய்யுடன் சேர்வதில்லை.
  • எதிலும் சுயபுத்தியுடன் தீர்வு காண்பதே சரியான வழிமுறை.
  • துணிவுடைய வெற்றி வீரருக்கே இவ்வுலகம் சொந்தமாகும்.

வியாழன், 14 ஜூன், 2012

மஞ்சு அக்காவின் பிறந்த நாளுக்காய்..! - 1

  மஞ்சு அக்காவின் பிறந்த நாளுக்காய்..! - தொடர்ச்சி

 

 

 வலியீந்த வாழ்வோ வசமாகு முந்தன்
கிலியிலா செய்கை கண்டே - வலியீயும்
மாதவர்நெஞ் சோந்தமர துடியுங்கொள் ளன்பால்
மாதவஞ்செய் தேமகவாக வேண்டியே
செந்தூரான் தளொற்றி செருகிறேன் கண்மணி!

சனி, 9 ஜூன், 2012

மஞ்சு அக்காவின் பிறந்த நாளுக்காய்..!

அன்பின் உறவுகளே!

எனதருமை அக்காமார்களில் ஒருவரானாவரும், மழலைச் சிரிப்பினை எப்பொழுது தன்னிலும் தன்னிடத்தே வைத்துக் கொண்டு அனைவரையும் மகிழ்வித்து கவலை மறக்கச் செய்வதில் மூதாட்டிகளையும் மிஞ்சி நிற்கும், அதே சமயத்தில் கோபம் வந்தால் வந்த வேகத்திலே சொர்ணா அக்காவாக உருவெடுக்கும், தலை சிறந்த முத்தமிழ் மன்றத்தின் முத்தான பதிவர்களின் நெஞ்சினில் இன்னும் அன்பையும், பொறுமை குணத்தினையும் விதைத்து வரும் எந்தம் மஞ்சுபாஷிணி அக்கா இன்று தன்னுடைய பிறந்த நாளினை (10/6/****) தன்னுடைய தாய் மண்ணிலே குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..!

அவர்களுக்கு என் சார்பில் மன மகிழ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு என் கிறுக்கலில் விளைந்த ஓர் மணியினை இன்னும் கொஞ்சக் காலத்திற்குள்ளாகவும், கை வரிசை காட்டிய  வரைகலையினை இப்போதே பதிந்து கொள்கின்றேன்.



அன்பெனுந் தறியில் அடுக்கிய நூலென்று
         அறுத்திட்ட மாந்தர் அழுகுறி கேட்பினுங்
பின்செல் எம்மனமே பிறருடை யாதெனவே
         நன்செய் காணியி லோர்நட்டிய விதையன்ன
நல்லுள் கொண்டே நடப்பன உற்றுழி!
        ஆயிரஞ் சொல்லிடுங் கடுகடுக்கு மோரிக்கணம்
வெல்லாய் தாயே வீறுகொண்டே நற்சிலையாய்
        எங்காலம் கூட்டியே எழிலோடு வாழ்ந்திடவே
அகிலங் கொண்ட அன்புடை செந்தூரான்
        அருளொடு பரவ அடித்தொழ வேண்டிட்டே!


நன்றி.

ப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)

இனிய வலைப்பூ நண்பர் அப்துல் பாஸித் அவர்களின் வலைப்பூ மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது..!!

அச்சாதனைக்காய் இச்சிறு  முயற்சி..

மேலும் விரிவான தகவலுக்கு:

ப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)

 தரங்கா  ணுங்மெப் பதிவு தந்திடின்
தயங்கா தேவந்தி டுமோர்நற்கிழி! - தரமுடை
மயங்கா தெனெவெல் லாங்மதி சால்
அரங்க னொப்ப! தந்திடுமின் பல்கீற்று
தனங்க ருதாவளர் திருநற்சிந் தையாளே!

வாழ்த்துகள் நண்பரே!

 நன்றி

ஞாயிறு, 3 ஜூன், 2012

குவைத்தின் இன்றைய கால நிலை.. எப்படியெல்லாம் இருக்குதுன்னு பாருங்க.



இது குவைத்தின் ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.. கடுமையான மணற்மழை பொழிவு இங்கு நடக்கின்றது. சாலைகளில் பார்க்கும் போது ஆற்றில் வெள்ளம் எப்படிச் செல்லுமோ அது போல மண் பயணிக்கின்றது.



வெள்ளி, 1 ஜூன், 2012

வசு அக்காவின் பெற்றோருக்காய்..!

எனது உடன் பிறவா சகோதரி வசுப்ரதா அவர்களின் பெற்றோர் திருவாளர். திருவேங்கடம் - திருமதி. சுலோச்சனா அம்மையார் இன்று தனது பேரக் குழந்தைகளுடன் இனிதே திருமண நாளினைக் கொண்டாடியிருக்கின்றார்கள்..!

அவர்களுக்கு என் சார்பில் இனிய நல்வாழ்த்துகளுடன் கூடிய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு நல்லாசியினையும் வேண்டி நிற்கின்றேன்..

படமும் கவிதையும் விரைவில் அளிக்கின்றேன்.




நகைப்பா ரிவரென்று நசிங்கிட்டுச் சென்றிடா
பகைப்பா ரிவென்று பதுங்கிடா - நகைப்பால்
உளமறி மாந்தர் உறவொன்றைப் பெரிதாய்
அளவறி மாந்தர் அடிப்பொடி யுமேறாய்


திறனோடு குடும்பம் திறம்பட நடாத்தி
அறனொடு மகவுங் அற்புதமா யீந்து
சிறப்பிடச் செயுஞ்சீர்தகைப் பெரியரே
நின்னடித் துளியடைய ருந்தவ மேற்பேனே!

வாழுங் கலையொடு வையமுந் தழைக்க
நாளும் சொல்லிடுங் நற்பொருள் யாவும்
தீஞ்சுவை யெனதெளி வாயு ணர்த்தி
மாபிஞ் சுவாழ்வில் மகிழ்வதனை சேர்
நன்னாள் தன்னிலே நல்லுள் வாழ்த்தியே!



நன்றியுடன்,
சிவஹரி

அரச இலையில் ஆனை முகத்தோன்..!


அரச இலையிலே அற்புதமா யமர்ந்தருளும்
ஆனை முகத்தோனே! எங்கள் அரசே!
இன்ப முந்துன்பமுந் தருவாயி டையிடையே
ஈகையே பெரிதென இயம்பிடஞ் செய்வாய்

உயிர் வலியிலும் உறவுதனை யகலா
ஊரார் வழிசெல் உரைத்திடச் செய்வாய்
எறும்பிற் முதலாய் ஏற்றமொரு பொருளீறாய்
ஏர் பூட்டி வாழும் இறைவன் கையில்

ஐந்திணை கொடுத்து அபயமுந் தளித்தாய்
ஒப்பிலா இலக்கணமே உயிரின் முழுமுடிச்சே
ஓதுவார் பொருளே உயர்தனிச் செம்மலே
ஔவை வழிகண்டு அகிலந்தளிர்த் திடவே
கரைபுரண் டவெள்ளமாய் கண்ணீரோடு வேண்டியே!
காத்தருள் வாய்எங்கள் மூல கணபதியே!!

வலிகள் சொல்லும் வரிகள்..






நன்றி: இணையம்
Related Posts Plugin for WordPress, Blogger...