சனி, 25 பிப்ரவரி, 2012

4 கைகள்இ 4 கால்களுடன் அதிசய குழந்தை.!(படம் இணைப்பு)

கைகள்இ 4 கால்களுடன் அதிசய குழந்தை.!(படம் இணைப்பு)பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் 2 தலை, 4 கால்களுடன் பிறந்த அதிசயப் பெண்குழந்தது. பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. முகம்மது ஆலம் என்பவரின் மனைவி நஹிதா என்பவருக்குப் பிறந்த, அந்தக்குழந்தையின் மற்ற உடல் உறுப்புகள் இயல்பாகவே இருந்திருக்கின்றன...

இளகிய மனமுடையோர் கட்டாயம் படத்தினை பார்க்க வேண்டாம்.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்:வயதானோர் அரவணைப்பில் கேள்விக்குறியான எதிர்காலம்



படம்

தந்தை இல்லை, தாயுமில்லை; தெய்வம் அன்றி யாருமில்லை' என, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக கொண்ட குழந்தைகள், அரசின் உதவியை எதிர்பார்த்து, வயதானோர் அரவணைப்புடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

பிறக்கும் போதே, தாய், தந்தை யாரென தெரியாமல், ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். சேலத்தில், வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில், வாழும் மூன்று குழந்தைகள், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். எவ்வித ஆதரவும் இல்லாமல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக கொண்ட ராஜேஸ்வரி(16), திவ்யபாரதி(15), மணிகண்டன்(10), மூன்று பேரும் நேற்று, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, உதவி கோரி மனு அளித்தனர். ராஜேஸ்வரி எஸ்.எஸ்.எல்.ஸி., முடிக்கப்போகிறார். திவ்யபாரதி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மணிகண்டன், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

அந்த குழந்தைகள் கூறியதாவது:அப்பா சவுந்திரராஜன், அம்மா தேவகி. நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போதே, அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டனர். எங்களுடைய தாத்தா ராமாச்சாரி, பாட்டி பத்மாவதி ஆகியோர், நெசவுத் தொழில் செய்து எங்களை காப்பாற்றி வருகின்றனர். பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கிறோம். தாத்தாவுக்கு, 72 வயதாகிறது. வயதான தாத்தா, பாட்டிக்கு அவ்வப்போது உடல் நலம் மோசமாகிறது. அவர்களுக்கு பின், எங்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.நாங்கள், பாவடியில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். மேல்படிப்பு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் மூன்று பேரும், நன்றாக படித்து வருகிறோம். தாத்தா, பாட்டிக்கு பின், எங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் உள்ளது. அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளோம். அதிகாரிகள், மனுவை வாங்கிக் கொண்டு, போய் வாருங்கள், எனக் கூறுகின்றனர். எங்கள் வாழ்க்கைக்கு, அரசுதான் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாத்தா ராமாச்சாரி கூறுகையில்,""
சிறு வயதிலேயே, மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து விட்டனர். எனக்கு பின், அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற பயம் எனக்குள்ளது. அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்,'
' என்றார்.

பெற்றோரை இழந்து வாழும் இக்குழந்தைகளுக்கு, உதவ விரும்புவோர், 90951- 63698 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முதியோர் அரணைப்பில் இருக்கும் மூவருக்கும், கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற வாசகம் உயிர்பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பரிதாபம் கொள்ளச் செய்யும் நிலையிலே கடவுள் வைத்துப் பார்க்கின்றானே

பொன்மொழிகள்

    • பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் பெரிய பஞ்சு மூட்டையைப் போன்றது.
      யார் அதனைப் பார்க்கின்றார்களோ அவர்களுக்கு அது பெரியதாகத் தோன்றும். ஆனால் யார் அதனை தூக்கிச் சமாளிக்கின்றார்களோ அவர்களுக்கு அது எளிதான பொருளாகத் தோன்றும்.

    • திறமை வாழ்வில் உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். ஆனால் நற்பண்பு அந்த உயர்நிலையினை தொடர்ந்து கடைபிடிக்க உதவி செய்கின்றது. எப்போதுமே உத்தமமாய் இருப்போம்.


      இரும்பு, அதனை சிதைக்க மற்ற பொருளை விட அதன் துருவே தான் காரணம் அதனைப் போல மனிதன் தன்னிலையினை இழக்க அவனுடைய பொறாமை தான் மூல காரணமாக இருக்கும்.
    • இருமுறையேனும் சிந்தித்து செயலில் இறங்குங்கள்.

சோகம்

என்னிரு கண்களிலொ ருவனெட்டிய ஈட்டியிரு
பன்னிரு காலமாய்ப றந்தஎங்கள் கொடி - முன்னொரு
பொழுதிலே முழுதாய் சாய்ந்திடவே; கழிவாறாய்
கரைந்திட்ட கணங்களும் வந்திடா, நலிவடைந்தே
கரையோடி நப்பாசை புரையோடி மீண்டெழுமே
எங்களுமோர் நாள் நன்னொரு புதுநாளாய்..

அக்கா

தன்னை யறிய‌சொல் நின்றுதா னுணர்த்தும்
அன்னை யரின்பால் அகமகிழ்வும் கொள்நிற்க‌
முன்னைப் பிறந்தே முடிசூடா மன்னவனிவன்
பின்னாலே வருவானென பெருமுரசு கொட்டி
நாறாய் இருந்தாலும் நல்மணமொடு வீசிடவே
ஆறாம் அறிவையும் அதனொடு தெளிவையும்
சீராய் தந்திட்ட சீர்மிகு த‌மக்கையரே! நினக்கு
தேராய் நின்று தெளித்திடவே எம்முழைப்பு

சாப்பாடு ரெடி நெஞ்சை நெகிழவைத்த குறும்படம்!



ஒரடி வயித்துக்கு ஓயாத பொழப்பு
நாயடி பட்டு நாளும் நகருது.
பொன்னா முத்தா பூவிதழ் கண்ணா
நாளை நீவளர்ந்து நாடறிய நீநடந்து
ஊரோடு உலகமும் உன்னைத் தேட‌
நானும் வளர்த்தேன் நலமாய் உன்னையே!

பட்டிலே நீயுறங்க பலமரமும் செதுக்கி
கட்டிலே காலுக்காய் கால்கடுக்க‌ நின்றோமே
மொட்டிலே நீயுதைக்க முறுவல் கொண்டதாலோ
எட்டியே உதைத்தாலும் இப்பவும் சிரிக்கின்றோம்

பிஞ்சிலே நீதந்த பெருஞ்சுவை கண்டே
அஞ்சியே நகர்த்திட்டோம் அடுத்தடுத்த பொழுதினையே
நஞ்சாய் நீஉரைக்க நாளும் நின்னொடு
கஞ்சிக்கு வழி தேடி கையேந்தி நிற்காமாலே
நெஞ்சிருக்குமுரங்கொண்டு நிமிர்ந்து நடப்போமே!

யாரிடம் கேட்பேன்?

பரமக்குடியில் திடீர் கலவரம் : தீ வைப்பு ; துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி; டி.ஐ.ஜி., காயம்

படம்
படம்
படம்
படம்

வரம்தந் தாய்வளம் தந்தாய் விட்டகலா
வரிவரி யாய் உறவுமீந்தாய் நெறியொடு
இன்பமுங் கூடி இசைபட வாழீரென்றோர்
அன்பெனும் உறவை அமைத்திட்ட மென்னிறைவா

சண்டையும் சச்சரவும் சாதீயக் கொடுமையோடு
மண்டையும் உடைந்து மரணமும் நேர்ந்திட‌
விட்டுப்பார்க் கும்பட்டமாய் வேடிக்கையுங்காட்டி
சட்டென்று நீவிறக்கும் சாமர்த்தியந்தான் எங்கே?

வீரவணக்கம் செலுத்த விழுமியே வருமிளைஞர்
ஈரத் தலையொடு செங்குருதியை துவட்டுவதேன்
யாருஞ்சொல் லித்தடுத்திட வேண்டாவோ! இன்னிலை
தானாய் உணரதவழ்ந்து வருங்கால முமெங்கே?

சனி, 18 பிப்ரவரி, 2012

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் தனது தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !!

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.
கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.
5.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.
உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network

Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).
CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.
உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.
நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com
http://www.kousalyaraj.com/2012/01/blog-post_03.html
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில் பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு அனுமதி அளித்த சங்கரலிங்கம் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பொன்மொழிகள்

  • அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
  • மணலிக்கீரையை (?) உண்டு வர நுண்புழுக்கள் அழியும். (மணத்தக்காளிக் கீரை தானோ?)
  • அலை ஓய்ந்த போது தலை மூழ்க முடியாது
  • புளிக்கீரையினை சாப்பிட்டு வர சதை நரம்புகள் சுருங்கும்.
  • அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும். ___இதழில் படித்தவை
Related Posts Plugin for WordPress, Blogger...