சனி, 28 ஜூலை, 2012

எது உங்கள் சீட் பெல்ட் - கனகலட்சுமி


எது உங்கள் சீட் பெல்ட்
- கனகலட்சுமி
காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது என்று கேட்டார்

அதற்கு அந்த வழிகாட்டி மிக அலட்சியமாக சொன்ன பதில், ”யார் ஒருவர் அவர் கனவின் தூரத்தையும் அதை அடைவதற்கான பாதையையும் சரியாக தேர்வு செய்கிறார்களோ அவர்கள் எந்தத் துறையிலும் எளிதாக ஜெயித்து விடுவார்கள்

 அதைப் போலவே இந்தக் காட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற கனவை அடைந்த நாள் முதல் அதை தெரிந்து கொள்வதற்காக அத்தனை வழிகளையும் தேடித்தேடி பயணித்தேன். அதுவே என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்றார்.

அந்த வழிகாட்டி சொன்னதைப்போல் வெற்றிகளை வசப்படுத்த, நாம் உறுதியாக இருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று நாம் நம் வாழ்வில் எதை அடைய வேண்டும். மற்றொன்று, அதை நோக்கிய நம் பாதை சரியானதாக இருக்க வேண்டும்

உலகில் உள்ள மனிதர்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். ஒன்று வெற்றியாளர்கள், இவர்கள் தனக்கு என்ன தேவை என்பதை முழுமையாக அறிந்தவர்கள். அவர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள்.  

இரண்டாவது ஏன் தோற்கிறோம் என்ற கேள்விகளே இன்று தோற்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களின் அடையாளத்தை அவரை சுற்றியுள்ள சமூகம் தான் செதுக்கிக் கொண்டிருக்கும்

இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது வகையான மனிதர்கள் உண்டு. அவர்கள் மனம் போன போக்கில் சென்று எப்போதாவது ஒரு சில வெற்றிகளை எதிர்பாராமல் பெற்றவர்கள், ஆற்றலும், ஆளுமையும் அவர்களுக்குள் வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாதவர்கள்

மூன்றாம் வகையை சேர்ந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. நம்மில் பலர் இன்று இந்த மூன்றாம் வகையான ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை அவர்களை சுற்றியுள்ள உறவுகள் தரும் எழுச்சி, வெற்றி முனைப்பை கூட்டும் சில நம்பிக்கை வரிகள், அவர்களின் திறனை இயக்கும் உத்வேகம், இவர்கள் முதல்வகை மனிதர்களைப்போல் தொடர் வெற்றிகளை தர தவறுவதன் காரணம், அவர்களுக்குள் ஒடுக்கப்பட்டுள்ள ஆளுமையை உணர்ந்து கொள்ளாதது கனவுகளுடன் இலக்குகளுடனும் சமரசம் கொள்வதும்தான்

எதிர்பாராமல் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முறிந்த சில உறவுகள், தொலைந்து விட்ட சில நல்ல வேலை வாய்ப்புகள், பண நெருக்கடி, திட்டமிட்ட இலக்குகள், உற்சாகம் தராத சொந்தங்கள் என ஏதோ ஒன்று அவர்கள் வெற்றியை தடுத்திருக்கக் கூடும்.

உதாரணமாக விமானத்தில் பயணிக்கும் போது முதல் அறிவிப்பே, ”ஆபத்துகள் வர வாய்ப்புள்ளது. சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்என்பதுதான். அதுபோல் வரவிருக்கும் தோல்வியை ஆபத்தை தடுப்பதற்காக நம் கடந்த கால துயரங்களில் இருந்து துவண்டு விடாமல் நமக்குள் எழும் உத்வேகம்தான் காக்கும் கவசம்

 அதுவே இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயர நினைக்கும்போது இடையூறுகள் ஏற்பட்டாலும் பயணம் இனிமை யானதாக அமைய தெளிந்த மன நிலையுடன் நம்பிக்கை என்னும் சீல்பெல்ட் அணிந்து கொள்வோம்

நன்றி: நமது நம்பிக்கை

படித்த சில பொன்மொழிகள் - 7


1.      ஒரு நகரத்தின் வாலாயிருப்பதை விட ஒரு கிராமத்தின் தலையாயிருப்பது மேல்.
2.      வியாபாரம் சில சமயங்களில் தாயாயிருக்கும்; சில சமயங்களில் மாற்றாந்தாயாய் இருக்கும்.
3.      ஆயிரம் எதிரிகளை விட ஒரு போலி நண்பனால் தான் அதிகத் தீமை.
4.      பொன்னில் இழப்பதை விட தவிட்டில் ஆதாயம் தேடு.
5.      கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கின்றவன் கௌரவம் இல்லாமல் சாவான்.
6.      செல்வம் என்பது பணம் மட்டுமல்ல
7.      உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப் பற்றியும் வம்பளப்பான்.
8.      உன் அன்பை மனைவியிடம் காட்டு; உன் இரக்கத்தை தாயிடம் காட்டு.
9.      சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன.
10.     தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவிகளில் மூன்றில் ஒரு பங்கு.

வெள்ளி, 27 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 6

1.      கூஜாவிலிருந்து வெளியே வந்து மது மிக உரக்கப் பேசுகின்றது.
2.      உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் போது அறியலாம்.
3.      சத்தியத்திற்கு மற்றொரு பெயர் மனசாட்சி.
4.      விற்க முடியாத பொருளுக்குத்தான் விளம்பரம் தேவை.
5.      அன்புள்ள தோழனை ஆபத்தில் அறிந்து கொள்.
6.      அச்சத்தை விட மோசமானதொரு ஆலோசகனில்லை.
7.      அரசு அன்று கொள்ளும், தெய்வம் நின்று கொல்லும்.
8.      எதுவும் தெரியாதவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
9.      அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே.
10.     அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடிக்கலாம்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

வளர்தமிழ்ச் செல்வி யுவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

இன்றைய தினத்திலே (25 ஜூலை) தன் பிறந்த நாளினை தம் உறவுகளுடன் கொண்டாடும் என் உயிர்த் தோழி வளர்தமிழ்ச் செல்வி யுவா அவர்களை மென்மேலும் வாழ்வில் உயர்ந்திட வாழ்த்துகின்றேன்.. எல்லாம் வல்ல செந்தூரானின் நன்னருள் என்றென்றும் என் தோழிக்கு கிட்டிடவே நான் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

படம்

அறத்தொடு யீகையழி யாதோர்நற் திறனே
புறத்தொடு வாழ்விலேபொற் சிலையன்ன - அறமொடு
பொருள்தரு அதற்கிசை யின்பமீந்தெளிதரு முப்பால்
தெள்ளுதமிழ் குறள்வழி தெவிட்டே
நற்குடியுயர நானென்றும் வாழ்த்திட மெந்தோழீ


ஊறிவரு நன்னீர் ஒருதிரட்டுச் சேருங்கால்
மாறிவரு முலகிலே மாப்பொருளா மென்தோழி
நீர்சேரு மிடந்தனிலே நித்த முயரதுவே
நீர்சேரு மிடமதுவும் நிறைந்திடவே மெந்தோழீ


புன்னை மரமொப்ப புதுச்சுவையும் தந்திட்டே
அன்னை மடியமர்ந்து ஆச்சிகதையுங் கேட்டிட்டே
மண்ணை நீயாள மனத்திடமுங் கொண்டிங்கே
விண்ணை யுமீவெல்வாய் வெற்றி தளிர்மகளே!


ஊக்கமுங் கொடுத்தே உயர்வுங் கொடுப்பாய்
ஆக்கமுங் கொடுத்தே அன்பையு மீய்வாய்
தேக்கமிலா பெருவாழ்வு தெளிவடை கிட்டிடவே
நீக்கமற வாழ்த்திடுவே மென்னுயிர் தோழியையே
!

நன்றி

சனி, 21 ஜூலை, 2012

அறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா

ராபின் ஷர்மா

கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. "The Monk Who Sold His Ferrari" என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் வளர்ந்து வளம் பெறத் தொடங்கினாலும், வாழ்வில் மனநிறைவு கிடைக்கவில்லை. ”வெளியே பார்க்காதே. உள்ளே பார்” என்று உள்ளே கேட்ட குரலை மதித்ததால் ராபின் ஷர்மா உள்ளே பார்க்கத் தொடங்கினார்.

ராபின் ஷர்மா தன் முதல் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது தான் உலகத்தை ஈர்க்கப் போவதாக நம்பினாரோ என்னவோ? ஆனால், அவர் சொந்தமாக அச்சடித்த 2000 பிரதிகளும், அவர் வீட்டு சமையலறையை ஆக்கிரமித்துக் கொண்டது.

சுலபத்தவணையில் இல்லாமல் சிரமத் தவணையில் மெல்லமெல்ல விற்பனையாகத் தொடங்கியது.

அதேபோல, அவர் நிகழ்த்திய முதல் பயிலரங்கில், பங்கேற்பாளர்களாக முதலில் கலந்து கொண்டவர்கள் 23 பேர்கள். அதில் 21பேர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

நகைச்சுவைக் காணொளி- 2

அடுத்த கூத்தைப் பாருங்களேன்...




நன்றி: இணையம்

நகைச்சுவைக் காணொளி- 1



எனக்கென்னமோ இது நன்கு முறைப்படுத்தி இயக்கியிருப்பதாகத்தான் தோன்றுகின்றது..


நீங்களும் பாருங்களேன்.


நன்றி: இணையம்

வியாழன், 19 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 5

1.   மனம் கடல் போன்றது, பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.
2.   நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடி வரும்.
3.   ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு லாடம் அடிக்க முடியாது.
4.   செழுமையில் கவனமும்ஏழ்மையில் பொறுமையும் தேவை.
5.   உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கின்றது.
6.   பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோசம் தொடங்குகின்றது.
7.   கணவன் தலைவன், மனைவி அவன் தலையில் இருக்கும் மகுடம்.
8.   ஒரு பாவத்தை பலர் செய்தாலும் அது பாவமே.
9.   நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி.
10. குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றிய பயமில்லை.

செவ்வாய், 17 ஜூலை, 2012

கலங்கச் செய்த காணொளி - தந்தை மகன் பாசம்

சொல்வதை விட பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.. அதுவே இக்காணொளியின் சிறப்பு.



தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
- - - (குறள். 67)


மகன்தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
- - - (குறள். 70)

நன்றி : இணையம்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெருந்தலைவரின் காவியம்

அன்பின் உறவுகளே!

இன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். இந்திய அரசியலிலும், தமிழக ஆட்சியும் ஒரு திறமை மிக்க நாயகனை இத்தரணி கண்ட தினம்.

அன்னை சிவகாமியின் வயிற்றிலே உதித்த அற்புதச் செம்மல், அனைவருக்கும் கல்வி என்ற அடைப்படையினை வழியினை இன்னோர்க்காய் முன்னோராய் வழிவகுத்த, தன் எளிமையான ஆளுமையினால் பட்டி தொட்டி பாமர மக்களின் உள்ளத்திலும் இடம் பிடித்து, இன்னாளில் ஆளுமையாளர்கள் திறன்மிகு ஆட்சியமைப்போம் என்று  வாய்சவடாலில் வடித்துக் கொட்டும் மாமேதைகளுக்கு அன்றே ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய செம்மல் பாரத ரத்னா கல்விக் கோமகன் கர்ம வீரர் காமராசர் அவர்கள் அவதரித்த தினம்.

அவரின் ஆட்சிக் காலத்தில் அடித் தட்டு மக்களில் ஒருவனாகக் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கா விடிலும் இன்றைய நாளில் அவர் வகுத்த/வடித்த நற்பயன்களின் விளை முத்தை அனுபவிக்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் என்றும் பெருமிதம் கொண்டு ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் நல்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.




மிதிவண்டியில் பின்னர் அமர்ந்திருப்பவர் நம் தலைவர்.
(நன்றி : முக நூலில் பகிர்ந்த நண்பருக்கு)



 அன்னை சிவகாமி

 நன்றி :  http://kamarajar.blogspot.com/



பெருந்தலைவரின் பேச்சு:





நன்றி யூ டியூப்

வெள்ளி, 13 ஜூலை, 2012

நகைச்சுவைக் காணொளி



நாம நடந்து போனால் நமக்கு முன்னாடி நம் விதி ஆட்டோ புடிச்சு போகுமுன்னு சொல்றது இது தானோ!


நன்றி: இணையம்

படித்த சில பொன்மொழிகள் - 4

  1. எல்லாப் புண்களுக்கும் காலம் தான் நல்ல களிம்பு!
  2. வறுமையில் நிறைவு காண்பவனே மிகப் பெரிய பணக்காரன்.
  3. குதிரை சாதுவானாலும் சண்டி என்றாலும் சாட்டையடி அவசியமே.
  4. சுத்தமான காற்று - ஒரு காற்று ஏழையாக்குகிறது.
  5. பேசுகிறவனை விட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும்.
  6. மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
  7.  தீபம் அதன் அடிப்பாகத்திற்கு ஒளி தருவதில்லை.
  8. உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது தான்.
  9. பெண்ணில்லாத வீடு - வாளி இல்லாத கிணறு போன்றது.
  10. விசாரித்து அறிவது நஷ்டமும் அல்ல கேவலமும் அல்ல.

வியாழன், 12 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 3

  1. ஆசைப்பட்டு மையிட்டுக் கொண்டாளாம்; கண் குருடாகிப் போனதாம்.
  2. இடம் பார்த்து உட்கார்; நிலம் பார்த்து பயிர் செய்.
  3. உண்மை பேசுபவர் இருவர் - குழந்தையும், முட்டாளும்.
  4. கங்கையில் குப்பையை எரிந்தாலும் கங்கையின் பெருமை குன்றாது.
  5. இளமையில் சூதாடுபவர்கள் முதுமையில் பிச்சை எடுப்பார்கள்.
  6. இதயம் சாவதை விட கண்கள் சாவது மேலானது.
  7. பணமில்லாத வியாபாரி - நிலமில்லாத விவசாயைப் போன்றவன்.
  8. உலகிற்கு வெட்கப்படாதவன் கடவுளுக்கும் பயப்படமாட்டான்.
  9. கொடுப்பதற்கும் சேமிப்பதற்கும் அறிவு வேண்டும்.
  10. நண்பர்களே மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள்.

படித்த சில பொன்மொழிகள் - 2

  1. ஒருவனால் செய்ய முடிந்ததை எல்லோராலும் செய்ய முடியும். (?)
  2. காதலும் குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்.
  3. அவசரப்படுவது ஈக்களை அடிக்க மட்டுமே உதவும்.
  4. கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு உட்காருவான்.
  5. பார்ப்பதற்கு ஆள் திரட்டாமல் நாடகம் போடுபவன் முட்டாள்.
  6. காதல் என்பது ஒருவகை போர்முறையாகும்.
  7. நண்பர்கள் இருந்தால் நேரம் போவது தெரியாது.
  8. கன்னிப் பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.
  9. மனைவி உள்ள கட்டில் சண்டை இல்லாமல் இராது.
  10. அம்மாவும் பெண்ணும் உள்ள இடத்தில் மருமகளுக்கு சோறில்லை.

படித்த சில பொன்மொழிகள் - 1

  1. அநியாமாய் அடைந்த பொருள் மற்ற பொருட்களை அழிக்கின்றது.
  2. காதல் செய்யும் பெண்;  நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி.
  3. எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை.
  4. வாக்குறுதி கொடுப்பவன் அவற்றிற்கு கடனாளியாகின்றான்.
  5. பூமிக்கு உணவளி; அது உனக்கு உணவளிக்கும்.
  6. மெதுவாகச் சாப்பிட்டால் வயிறு வலி வராது.
  7. செல்வம் எப்படி வந்ததோ அப்படியே போகும்.
  8. உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.
  9. அந்நியர்கள் மன்னிக்கின்றார்கள், நண்பர்கள் மறக்கின்றார்கள்.
  10. பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன்.
Related Posts Plugin for WordPress, Blogger...