- எல்லாப் புண்களுக்கும் காலம் தான் நல்ல களிம்பு!
- வறுமையில் நிறைவு காண்பவனே மிகப் பெரிய பணக்காரன்.
- குதிரை சாதுவானாலும் சண்டி என்றாலும் சாட்டையடி அவசியமே.
- சுத்தமான காற்று - ஒரு காற்று ஏழையாக்குகிறது.
- பேசுகிறவனை விட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும்.
- மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
- தீபம் அதன் அடிப்பாகத்திற்கு ஒளி தருவதில்லை.
- உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது தான்.
- பெண்ணில்லாத வீடு - வாளி இல்லாத கிணறு போன்றது.
- விசாரித்து அறிவது நஷ்டமும் அல்ல கேவலமும் அல்ல.
வெள்ளி, 13 ஜூலை, 2012
படித்த சில பொன்மொழிகள் - 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தங்கள் கருத்துகள் அனைத்தும் மிக அழகாகவும், ஆழமாகும் உள்ளது... அதிலும் உங்கள் பொன்மொழிகள் மிகவும் நேர்த்தியாக உள்ளது...
பதிலளிநீக்குநண்பரே இந்த word verificationஐ எடுத்து விடுங்கள், இது கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்கிறது, அதுமட்டுமில்லாமல் இது சிறு எரிச்சல் ஊட்டுவதாகவும் உள்ளது...
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே! மேலே கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாம் நான் கூறப்பட்டதல்ல :). தினசரி நாட்காட்டியில் வந்ததன் ஒரு தொகுப்பினை தட்டச்சிட்டு மற்றவர்களும் படித்து பயன் பெறட்டும் என்ற நோக்கினிலே பதிவிட்டேன்.
பதிலளிநீக்குநன்றி மீண்டும்.
தாங்கள் கூறியபடி நான் கருத்துரை வழங்குதலின் போது செயல்பாட்டில் இருக்கும் வார்த்தை உறுதிபடுத்துதல் பகுதியினை செயல் நீக்கம் செய்து விட்டேன்.
பதிலளிநீக்குஅதே சமயத்தில் தங்களுக்கு இது எந்த வகையில் எரிச்சலைத் தந்தது என்று கூறினால் அது குறித்து நோக்க முயற்சிப்பேன்.
நன்றி
நண்பரே, சில நேரங்களில் நான் wordஐ தட்டச்சி சியும் போது, சில நேரங்களில் அது தவறாக ஆகிவிட்டு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏனோ எனக்கு அது சிறு எரிச்சலை அளித்தது போல் உணர்ந்தேன், மற்ற வலையுலக நண்பர்கள் எப்படி நினைப்பார்கள் என்று எனக்கு தெரியாது, நான் உணர்ந்தேன் ஆதலால் நான் கருத்து தேர்வித்தேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பரே...
பதிலளிநீக்குWord Verificationஐ எடுத்ததற்கு மிக்க நன்றி...
தவறு என்றெண்ணிட ஏதுமிலவே!
பதிலளிநீக்குஎனினும் தங்கள் நற்கருத்தை தெரிந்திடவே வினவினேன். விடையும் கிட்டியது.
நன்றி பற்பல,