வெள்ளி, 28 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 17

  1. அதிகம் பேசுபவர்கள் பெரிய புளுகர்கள்.
  2. அரிசி ஆளாக்கு ஆனாலும் அடுப்பு நெருப்பு அவசியம்.
  3. அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
  4. அலை ஓய்ந்த போது தலை முழுக முடியாது.
  5. அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.
  6. அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.
  7. அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு
  8. அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
  9. அன்ன நடைநடக்கப் போய் தன் நடையும் கெட்டான்.
  10. அறுக்க மாட்டான் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தன்னம்பிக்கை வரிகள் - படங்கள் 2


படித்த சில பொன்மொழிகள் - 16

  1. கடன் கேட்க வருபவரைப் பலரும் வரவேற்க மாட்டார்.  
  2. சொந்தக் குழந்தையில்லாதவன் பெரும் அதிர்ஷ்டமில்லாதாவன்.
  3. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவமில்லாம சாவான். 
  4. காவலுக்கு ஆள் இருந்தாலும் பூட்டுப் போட தவறமாட்டான்.
  5. புத்திசாலி. போதுமென்ற மனமுடையவன்முன்னேறமாட்டான். (??)
  6. புத்திசாலி, ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக ஆக்கிக் கொள்வான். 
  7. பணக்காரர்களின் பார்வை மங்கலாக இருக்கும்.  
  8. தொடக்கத்தை விட முடிவைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.  
  9. அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்  
  10. அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

நாசியொடு யோசி

நம்மில் சிலர் நினைவுக்கு வர வேண்டிய முக்கியமான செய்தி மறந்து விட்டால்,  இரு புருவங்களும் சந்திக்குமிடமான நெற்றியின் கீழ் பகுதி அதாவது மூக்கு ஆரம்பிக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு தட்டுவார்கள். அதுபோல பொட்டு என்று சொல்லப்படும் நெற்றியின் இரண்டு முனைகளில் ஏதாவது ஒரு முனையில் விரலைக் கொண்டு தட்டி நினைவூட்ட முயற்சிப்பார்கள்.

இது நினைவுத்திறனை மீளெழுப்பும் என்று கூட படித்திருக்கின்றேன்.

ஆனால் நம்ம வாண்டூஸ் நினைவுத் திறனை வளர்ப்பதற்காக சின்ன வயசுலே எவ்வளவு எளிதாய் பயிற்சி எடுக்கின்றார்கள் என்று பாருங்களேன்..

 1)
 

 நேத்து அம்மா எதைக் கொண்டு வந்து தின்னச் சொல்லி அடியோ அடின்னு அடிச்சாங்க.. அது என்ன??


2)
ஹே..., நான் நெனைக்கிறேன் அது ஹெலாக்ஸூன்னு..!

3)


 இல்லவே இல்லை.., நான் கரீகிட்டா சொல்றேன் பாருங்கப்பா.. அது கம்மங்கஞ்சி..!

இப்படியே யோசிக்கிறாங்க மத்தவங்களும்... அவங்க யோசிக்கிற ஸ்டில்லை மட்டும் தாரேனுங்க..
 
4)

5)

6)

7)

இன்னும் யோசிப்போர் பட்டியலைப் பார்க்கணுமா...! சரி உங்களுக்காக மூணு படம் காட்டுறேன்...

துணையுடன் தொடரும் துணிவு

சதையொடு மனமுஞ் சரிநிக ரீந்து
குலஞ்செழி திருபுகழ் செருகிட தன்னில்
சுதையொடு வரவே சூளுரை மெடுத்த
சிலைநிக ருமையே சீராய் போற்றி;இவ்
வாழிகொள் வையமனந் தகொண் டாண்டே
அடுத்தோ ருலவரு குதுநல னேயம்
ஊழிற் பயணமொரு நாள்நிற்ப நினைமென்
தோளில மர்த்தி துணிவுடன் நடப்பேனே!

திங்கள், 17 செப்டம்பர், 2012

இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே!




ஆதவன் ஓய்ந்திட அவணியில் தழைத்திரு
மாதவப் பொழுதாம் மனமயக்குஞ் செம்மாலை;
உறவின் உளமதனை ஒட்டறிய தூதுஞ்செல்
இரவின் நாயகியாம் வெம்மலர் முல்லையே!

பாற்கடல் சங்கெடுத்து பதமாய் சுட்டெடுத்து
நீறுபூத் திடநெடிமல ருஞ்சுண்ணஞ் சாந்து
ஆவின் பாலெடு அன்னநிறமுங் கூட்டிபுவி
தேடித் திரிந்திடின் திகட்டுமோவ் வெண்மை


ஊரெங் குமுரைத்திட ஒருக்காலுங் தயங்கா
கலநீர் குதித்தோடு காய்வார்ப்பு ரன்ன
பலமொடு தெறிமின் பச்சிள நற்பறையே!!


படித்த சில பொன்மொழிகள் - 15

  1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
  2. செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
  3. மூடின வாயில் நுழையாது. மரணமே உலகின் முதலாளி.
  4. பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும். செயலே புகழ் பேசும்.
  5. நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
  6. நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
  7. இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
  8. வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
  9. தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.
  10. கவனமாயிருந்தால் துரதிர்ஷ்டத்தையும் தூக்கி விடலாம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

லிப்ஸ்டர் விருதினைப் பகிர்ந்து கொள்கின்றேன்


அன்பின் உறவுகளே!,

எம்மைப் பற்றிய சிறு குறிப்பு:‍‍

எந்தன் வலை வாழ்க்கையானது  ஏறக்குறைய 8 வருடங்களாக தொட்டும் தொடாமலும் என்னுடன் தவழ்ந்து வருகின்றது. இதனுள் பல நல்ல விசயங்களை நான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கற்றுக் கொண்டே வருகின்றேன். இன்னும் கற்றுக் கொண்டேதானிருக்கின்றேன். அந்த வகையிலே தனது கருத்தினை, அனுபவத்தினை, எண்ணக் கீறல்களை பிறருக்கும் பயன்படும் என்ற உயர் நோக்கில் பகிர்ந்து கொண்டு வரும் அனைவருக்கும் என் நன்றியினை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வலைப்பூ வாழ்க்கையானது ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்ததே! அதன் பின்பு அதீத ஈடுபாடு காட்ட முடியாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் இந்த வருடத்தின் முற்பகுதியிலே தான் மீண்டும் ஏறெடுத்துப் பார்த்தேன், அதன் பின்னர் இணைய நண்பர்களின் கருத்திற்படி சிறிது சிறிதாய் என் வலைப்பூவினை மெருகேற்றிக் கொண்டும் என் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட துளிகளை பகிர்ந்து கொண்டும் வருகின்றேன்.

என் வலை வாழ்க்கைக்கு ஆணிவேர் என் தாய் மன்றமாம் முத்தமிழ் மன்றமே.! அங்கு தான் நான் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். அத்தாயின் கனிவால் தான் என் வாழ்க்கைப் பயணமும் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வலைப்பூவிற்கென வரும் அனைத்து வாழ்த்துகளுமே என் தாய் மன்றத்திற்கே உரித்தானது.

லிப்ஸ்டர் விருது:




சகோதரர் ரமணி அவர்களின் வலைப்பூவான தீதும் நன்றும் பிறர் தர வாரா வில் லிப்ச்டர் விருது குறித்த விளக்கத்தினையும் அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தினையும் படித்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...