துணையுடன் தொடரும் துணிவு
சதையொடு மனமுஞ் சரிநிக ரீந்து
குலஞ்செழி திருபுகழ் செருகிட தன்னில்
சுதையொடு வரவே சூளுரை மெடுத்த
சிலைநிக ருமையே சீராய் போற்றி;இவ்
வாழிகொள் வையமனந் தகொண் டாண்டே
அடுத்தோ ருலவரு குதுநல னேயம்
ஊழிற் பயணமொரு நாள்நிற்ப நினைமென்
தோளில மர்த்தி துணிவுடன் நடப்பேனே!
இந்த படங்கள் சொல்ல வரும் கருத்து....
பதிலளிநீக்குபெற்று வளர்த்த பிள்ளைகள் பெற்றோரை சுமை என்று நினைத்து தவிக்க விட்டாலும்.... தன் இணையை இறுதிவரை தன் மூச்சிருக்கும்வரை தன் தோளில் சுமந்தாவது காப்பார் என்பதை சொல்கிறது....
கவிதை வரிகள் வழி வந்தாலோ....
ஏழடி நடந்து அக்னி சாட்சியாக இருமனம் திருமணத்தில் இணைந்தப்பின் இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நலம் முடியாமல் போனால் தன் இணை தன் உயிர் உள்ளவரை தன் இணையை காக்கும் என்பது போல் முடித்திருப்பது மிக சிறப்பு தம்பி.....
அன்பை பிணைக்கும் வாழ்வு....
காதல் நிலைக்கும் வாழ்வு.....
உயிர் உள்ளவரை இணைந்தே இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லிச்செல்கிறது வரிகள்....
அன்புவாழ்த்துகள் தம்பி....
இரண்டு விதமான நோக்கினில் கருத்துரையாய் வழங்கியிருக்கும் வரிகள் கவிக்கு சேர்க்குமோர் வனப்பு அக்கா.!
நீக்குஅற்புத மறுமொழிக்கு நன்றி அக்கா.!
superb...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.!
நீக்குஆஹா... அழகுத் தமிழை அன்னைத் தமிழை ருசித்ததில் மிகமிக மகிழ்வெனக்கு. அசத்தறீங்க சிவஹரி. கவிதை எழுத வராத எனக்கு படிக்கையில் மிகமிக ஆனந்தம் எப்போதும். தொடர்கிறேன் நான். வலைச்சரத்துக்கும் உங்களை அங்கே குறிப்பிட்ட மஞ்சுபாஷிணிக்கும் மனம் நிறைந்த நன்றி.
பதிலளிநீக்குதங்களுக்கு என்னுடைய இனிய வரவேற்புகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.!
நீக்குஅழகுத் தமிழும், அன்னைத் தமிழும் நம்முடைய சொத்து தானே சகோ.! நம் அன்னையின்பால் எனக்கு அளவுகடந்த அன்பு அதனின் காரணமாகத்தான் என் பதிவுகளிலெல்லாம் முழுமையும் தமிழ்காற்றோடே வெளியிட்டும் / முயற்சித்தும் வருகின்றேன்.
வலைச்சரத்திற்கும் என் அக்காவிற்கும், தங்களுக்கும் என் சார்பிலும் நன்றிதனை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்பாராத இனிய அதிர்வு.
பதிலளிநீக்குகவிதை மிக நன்று சிவஹரி.
தங்களுக்கு என்னுடைய இனிய வரவேற்புகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.!
நீக்குஎதிர்பாராத இனிய அதிர்வா? மகிழ்ச்சி
கருத்திட்டமை கண்டு மனமகிழ்வு சகோ.!
நன்றி