ஆதவன் ஓய்ந்திட அவணியில் தழைத்திரு
மாதவப் பொழுதாம் மனமயக்குஞ் செம்மாலை;
உறவின் உளமதனை ஒட்டறிய தூதுஞ்செல்
இரவின் நாயகியாம் வெம்மலர் முல்லையே!
பாற்கடல் சங்கெடுத்து பதமாய் சுட்டெடுத்து
நீறுபூத் திடநெடிமல ருஞ்சுண்ணஞ் சாந்து
ஆவின் பாலெடு அன்னநிறமுங் கூட்டிபுவி
தேடித் திரிந்திடின் திகட்டுமோவ் வெண்மை
ஊரெங் குமுரைத்திட ஒருக்காலுங் தயங்கா
கலநீர் குதித்தோடு காய்வார்ப்பு ரன்ன
பலமொடு தெறிமின் பச்சிள நற்பறையே!!
அருமை (படங்களும்)... நன்றி...
பதிலளிநீக்குசுடச்சுட கருத்துரையினைச் சேர்த்த தங்களுக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகள் பற்பல சகோ.!
நீக்குகருத்திற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.!
பதிலளிநீக்குதங்களால் வழங்கப்பட்ட இந்தக் கருத்துரை நான் பதிந்த பதிவோடு ஒத்துப் போகவில்லையென உணர்கின்றேன். காரணம் தாங்கள் இதே கருத்தினை சிற்சில வலைப்பூக்களிலும் பதிந்திருக்கின்றீர்கள். இதன் முக்கிய நோக்கம் தமிழ் மணத்தினைப் பற்றி சொல்வதாகக் கூட இருக்கலாம்.
எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தால் எல்லாம் சரியே!
நன்றி
கவிதையின் வரிகள் மிக அழகு.....
பதிலளிநீக்குஅன்னம், ஆவின்பால், பாற்கடல் சங்கு என இத்தனையும் ஒப்புமைக்கொடுத்து இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே தலைப்பும் இட்டு, சூரியகாந்தி பூவுக்குள் பற்கள் என்ற ஒரு வித்தியாசமான படம் அருமை தம்பி.....
அசத்தலான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள்.... தலைப்பு அருமை.. இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே....
அக்காவின் மனமுவந்த கருத்திற்கு நன்றிகள் பற்பல..
பதிலளிநீக்கு