அன்பின் உறவுகளே!,
எம்மைப் பற்றிய சிறு குறிப்பு:
எந்தன் வலை வாழ்க்கையானது ஏறக்குறைய 8 வருடங்களாக தொட்டும் தொடாமலும் என்னுடன் தவழ்ந்து வருகின்றது. இதனுள் பல நல்ல விசயங்களை நான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கற்றுக் கொண்டே வருகின்றேன். இன்னும் கற்றுக் கொண்டேதானிருக்கின்றேன். அந்த வகையிலே தனது கருத்தினை, அனுபவத்தினை, எண்ணக் கீறல்களை பிறருக்கும் பயன்படும் என்ற உயர் நோக்கில் பகிர்ந்து கொண்டு வரும் அனைவருக்கும் என் நன்றியினை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த வலைப்பூ வாழ்க்கையானது ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்ததே! அதன் பின்பு அதீத ஈடுபாடு காட்ட முடியாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் இந்த வருடத்தின் முற்பகுதியிலே தான் மீண்டும் ஏறெடுத்துப் பார்த்தேன், அதன் பின்னர் இணைய நண்பர்களின் கருத்திற்படி சிறிது சிறிதாய் என் வலைப்பூவினை மெருகேற்றிக் கொண்டும் என் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட துளிகளை பகிர்ந்து கொண்டும் வருகின்றேன்.
என் வலை வாழ்க்கைக்கு ஆணிவேர் என் தாய் மன்றமாம் முத்தமிழ் மன்றமே.! அங்கு தான் நான் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். அத்தாயின் கனிவால் தான் என் வாழ்க்கைப் பயணமும் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வலைப்பூவிற்கென வரும் அனைத்து வாழ்த்துகளுமே என் தாய் மன்றத்திற்கே உரித்தானது.
லிப்ஸ்டர் விருது:
சகோதரர் ரமணி அவர்களின் வலைப்பூவான தீதும் நன்றும் பிறர் தர வாரா வில் லிப்ச்டர் விருது குறித்த விளக்கத்தினையும் அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தினையும் படித்தேன்.
லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்
இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அதன் படத்தை தங்கள் தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்.
அந்த வகையில் என் அருமை அக்கா மஞ்சுபாஷிணி அவர்களுக்கு
கதம்ப உணர்வுகள்
கிடைத்த முதல் விருதினை எனக்கு அளித்திருக்கின்றார்கள். எனக்கும் இது தான் வலைப்பூ வாழ்க்கையில் முதல் விருது.முதல் என்ற சொல் இங்கே பல இடத்தில் சிறப்பாய் பணியாற்றியிருக்கின்றது. ஆம்.. எனக்கு இது தான் முதல் விருது, அக்காவிற்கும் இது தான் முதல் விருது. அக்கா முதன் முதலாக பகிர்ந்து கொண்டது என்னிடமே :) (மத்தவங்க எல்லாம் திட்டாதீங்க). ஆக முதன் முதலாய் கிடைத்த விருதினை கீழே குறிப்பிட்ட வலைப்பூக்களுக்கு வழங்குகின்றேன்.
1) என் நிலவின் மறுபக்கம் - நிறுவனர்: செல்வி வசுப்ரதா அக்கா.
உணர்வுப் பூர்வமான சொந்தக்கவிதைகளும், கதைகளும் ஆங்கே படிப்பவர் மனதினை அப்படியே லயிக்கச் செய்வன. தன்னம்பிக்கை விதைகளும் தாரளமாய் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது செய்திகள் என பற்பல நோக்கில் தனது கருத்தினைத் தாங்கி பயணிக்கும் இவ்வலைப்பூவிற்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
2) மௌனத்தின் சப்தங்கள் - நிறுவனர்: திருமதி ஹேமாபாலாஜி அவர்கள்.
விரிவாய் எழுதிடும்படி என் கையில் சரக்கு இல்லை :) முழுவதுமே சொந்தக் கவிதைகளை தாங்கி நிற்கும் இவ்வலைப்பூவானது புதுக்கவிதைகளின் பொற்குவியல் என்றே சொல்லலாம். கவிதை வரிகளை ஒரு மனதாய் படித்திட்டாங்கே மறுமொழியிடாமல் திரும்புவர் அரிதே.! அவ்வகையில் இவ்வலைப்பூவிற்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
3) நானும் என் சமூகமும்.. - நிறுவனர்: திருவாளர் அ. அப்துல்காதர் அவர்கள்.
சிந்தனைக் கவிதைகளின் கருவூலம்.! லயித்துப் படிப்போரின் சிந்தனை வியாபிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வகையில் இவ்வலைப்பூவிற்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
4) ஔவையின் உளறல்கள் - நிறுவனர்: மதிப்புமிகு ஔவை அவர்கள்
செறிவுமிகு அறிவுசார் கவிதைகள். உலகை புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலே ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் அற்புதத் திறமை. மற்றவர்களுக்கும் பயன்படும்வண்ணம் அழகிய வடிவிலே அமைந்திருக்கும் இந்த வலைப்பூவிற்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
5) சும்மாவின் அம்மா - நிறுவனர்: திருமதி முத்துசபாரெத்தினம்
கிராமத்து மணம் பரப்பும் கீர்த்தனைகள். பக்தி மணம் தழுவும் வரிகள் அடங்கிய இந்த வலைப்பூவிற்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
நன்றி
விருதினைப்பகிர்ந்த தம்பிக்கும்... விருது பெற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும்....
பதிலளிநீக்குஅருமையான தேர்வு தம்பி....
பாசத்துக்குரிய வசு, ஹேமா, ஔவை, நட்புக்கு அப்துல்காதர், சாதிக்க வயது ஒரு தடை அல்ல என்று நிரூபித்த சாதனை அரசி...
இவர்கள் எல்லோருமே விருதினைப்பெற தகுதி பெற்றவர்....
அன்புவாழ்த்துகள் மீண்டுமொருமுறை அனைவருக்கும்...
வாங்க வாங்க.. வாங்கவாங்க அக்கா.!
நீக்குவந்து நல்லவாக்கு சொன்னீங்க.
அப்படியே சாதனை அரசி குறித்த இப்பதிவினையும் பாருங்களேன்.
http://honeylaksh.blogspot.com/2012/09/blog-post_18.html
நன்றி
மிக்க நன்றி சிவஹரி.. தன்யளானேன். :) என் அம்மாவின் வலைப்பதிவுக்கு விருது அளித்து சிறப்பித்தமைக்கு நன்றி.:)
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி சகோ.
நீக்குஅவர்கள் தங்களின் தாயார் என்பதனையே நான் இப்போது தான் அறிந்து கொண்டேன்.
நன்றி
நன்றி சிவஹரி. என் அம்மாவின் வலைப்பூவிற்கு விருது அளித்தமைக்கு நன்றி..:)
பதிலளிநீக்குஅம்மாவும் (தாங்களும்) மற்றவர்களுக்கு அவ்விருதினைப் பகிர்ந்து தொடர் சங்கிலியை மேலும் வலுப்படுத்தலாமே சகோ.
நீக்குநன்றி