வெள்ளி, 1 ஜூன், 2012

அரச இலையில் ஆனை முகத்தோன்..!


அரச இலையிலே அற்புதமா யமர்ந்தருளும்
ஆனை முகத்தோனே! எங்கள் அரசே!
இன்ப முந்துன்பமுந் தருவாயி டையிடையே
ஈகையே பெரிதென இயம்பிடஞ் செய்வாய்

உயிர் வலியிலும் உறவுதனை யகலா
ஊரார் வழிசெல் உரைத்திடச் செய்வாய்
எறும்பிற் முதலாய் ஏற்றமொரு பொருளீறாய்
ஏர் பூட்டி வாழும் இறைவன் கையில்

ஐந்திணை கொடுத்து அபயமுந் தளித்தாய்
ஒப்பிலா இலக்கணமே உயிரின் முழுமுடிச்சே
ஓதுவார் பொருளே உயர்தனிச் செம்மலே
ஔவை வழிகண்டு அகிலந்தளிர்த் திடவே
கரைபுரண் டவெள்ளமாய் கண்ணீரோடு வேண்டியே!
காத்தருள் வாய்எங்கள் மூல கணபதியே!!

கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

2 கருத்துகள்:

 1. அருமையான அரச இலையில் ஆனை முகத்தோன்..!மூல கணபதியே!!

  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திட்டமை கண்டு மட்டற்ற மகிழ்வு சகோ.!

   நன்றிகள் பற்பலவே.!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...