வியாழன், 5 ஏப்ரல், 2012

அறிஞர்களின் பொன் மொழிகள்

  • வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்தமுடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். - Napoleon Hill. 
  • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.- Martin Luther King Jr. 
  • வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். - Will Rogers. 
  • ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார்.நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும். 
  • செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.- Dr. David Schwart

    3 கருத்துகள்:

    1. அனைத்தும் ஊக்கம் கொடுக்கும் வரிகள். மனதிற்கு இதம் அளித்தது சிவா நன்றி!

      பதிலளிநீக்கு
    2. அனைத்தும் ஊக்கம் கொடுக்கும் வரிகள். மனதிற்கு இதம் அளித்தது புது வேகம் பிறக்கிறது நனறி சிவா!

      பதிலளிநீக்கு
    3. புதுவேகம் பிறந்து புயலாய் மாறி தென்றல் தரும் இதத்தினை அளிக்கட்டுமே!

      நன்றி அக்கா.

      பதிலளிநீக்கு

    Related Posts Plugin for WordPress, Blogger...