வியாழன், 25 அக்டோபர், 2012

வலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக்தி


தூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் சஹஸ்ராரம்.

மனதை ஒரு முகப் படுத்தி ஒவ்வொரு ஆத்ம பீடத்திலும் கரையேறி ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை நிலையான சஹஸ்ராரத்தினை அடைவது இறைவனின் பாதகமலங்களில் சரணடைவதாக கொள்ளப்படுவதாக சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நமக்கு தெரிவிக்கின்றார்கள்.

அந்த ஏழு சக்தி மையங்களைக் குறித்தும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி வலைத்தளத்தில் ஒவ்வொரு நிலைக்கும் தெளிவான விளக்கங்கள் கொடுத்து நமக்கு அளித்திருக்கின்றார்கள்.

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

மணிபூரகம்
 
அனாகதம் (இதய கமலம் )

விசுத்தி
 
ஆக்ஞை

 நல்லவையையே எப்போதும் எழுத முயலும் சுந்தரவடிவேலு அவர்களின் தன்னைப்பற்றிய அறிமுகத்தில் சில நேரங்களில் அதீத புத்திசாலியாகவும், சில நேரங்களில் வடிகட்டிய முட்டாளாகவும், இரட்டை நிலையில் இருப்பதாகவும் சொல்லுகின்றார்கள்.

அவரது வலைப்பூவில் கவிதை ஏதேனும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கையில் அபத்தத்தில் நம்மைச் சிரிக்க வைத்து விட்டார்கள்.

அத்தோடு காதலின் அடுத்ததளம் என்ற பதிவில் சில அபிப்ராயங்களாக வெளிப்படுத்துகின்றார்கள்.பாப்பாவின் குறும்பு கவிதையில் மழலையின் அன்பை நமக்கு வரிகளாக வடித்திருக்கின்றார்கள்.

கணினியின் தற்போது அதிகமாக விண்டோஸ் இயக்கு தளத்தினை தான் நாம் உபயோகின்றோம்.

ஆனால் விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது என்று லினக்ஸ் சார்பில் நம்மோடு அதன் சிறப்பம்சங்களை சொல்லிட வரும் சரவணன் அவர்களின் லினக்ஸ் தமிழன் வெல்வான் வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை பார்ப்போமாக.

உபுண்டு 12.04இன் கணினி முகத்திரைகள்

உபுண்டுவில் புதிய VLC-2.0 ஊடக இயக்கியை நிறுவது எவ்வாறு?

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு தகவல்....


காலதேவனின் கைக்குழந்தையாக, பூமித்தாயின் மடியில் தமிழ் தேடி தவமிருக்கும் தமிழ்க் காதலன் அவர்களின் இதயச் சாரல் வலைப்பூவில் ”இனிய தாகம்..!” நம் தாகத்தை தணிக்கின்றது.விடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தைகளின் வழியே ”நதி மூலம்...!” பார்க்கச் சொல்கின்றார்கள்.

 ”புதிராகும் மலர்..!” பதிவில் நம்மிடம் மலரோடு பேசி கண்ட முடிவினை கவிதை வழியாக அறியத் தருகின்றார்கள்.

நிச்சயம் நாமும் இத்தளத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து மேலும் இவ்வலைப்பதிவரை ஊக்குவிப்போமே.!

குட்டிக் கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதிக்கதைகள் தந்திடும் ந.உதயகுமார் அவர்களின் சில கதைகளை இங்கே பகிர்கின்றேன்.

பச்சோந்திக் கல்
 
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது
 
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
 
நாவினால் சுட்ட வடு
 

இந்த வலைப்பதிவின் ஆசிரியர் பாட்டி ருக்மணி சேஷாசாயி அவர்களின் வலைப்பூவினில் இருக்கும் கதைகளை அனுமதியோடு மற்றொரு இடத்தில் வணிக நோக்கமின்றி பகிர்வதற்காக அனுமதி முகநூலின் வழியே கடந்த ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தேன்.

ஏதோ ஒரு சூழலினால் அவர்களது பதில் எனக்கும் இன்னும் வந்தபாடில்லை. இது என் புறமேயிருக்க எதிர்கால சமுதாயம் பண்போடும், வரலாற்றினை அறிந்தவர்களாக விளங்கச் செய்வதே தன்னுடைய குறிக்கோள் என்று பாட்டியார் வலைப்பூவினில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வலைப்பதிவில் சில.

96 - தந்தையின் பெருமை.

92-நம்பிக்கையின் சிறப்பு.

87-சிறந்த நீதிபதி


பாட்டியின் நீதிக்கதைகளைப் படித்த நாம் கங்கா அவர்களின் தினமும் ஒரு ஜென்கதைகள் வலைப்பூவிற்கு தேனுறிஞ்சிடும் தும்பியாய்ப் பறந்திடுவோமே! இந்தக் கதைகளானது எதிர்கால சமுதாயத்தினை நல்வழிப்படுத்திட நல்லதொரு தூண்டுகோலாய் அமைந்திடும் என்பதிலும் விதிவிலக்கில்லை.

இந்த வலைப்பூவானது பல ஜென் கதைகளை பகிர்ந்தளித்திருக்கின்றது. அவற்றில் சில

ஒன்பது திருடர்கள் - தினம் ஒரு ஸென் கதை

விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு துளி நீர் - தினம் ஒரு ஸென் கதை

நம் வலைப்பூவின் வாசகர்கள் வெளியிடும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யாமல் வெளியிட்டால் எதிர்கொள்ளவிருக்கும் சங்கடங்களை நேரில் கண்டு கொள்ளுங்கள். நல்ல ஒரு தளம் இப்போது கதைகளைத் தொடர்ந்து தரமுடியாமல் நின்று விட்டது போல எனக்குத் தெரிகின்றது.


கணினி அறிவு குறித்தும், சுதந்திர மென்பொருட்கள் நிறுவல் குறித்தும் பயனுள்ள பல தகவல்களை கொண்டிருக்கும் இத்தளத்தினை இங்கே அறிமுகப் படுத்திட விரும்புகின்றேன்.

பார்த்தவைகளில் சில.
Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips

உபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி?
 
வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி?
 
ஓப்பன் ஆபீஸ் 3.1 - என்ன புதுசு?


சிறில் அலெக்ஸ் அவர்களின் பைபிள் கதைகள் வலைப்பூவினை நான் கடந்த மூன்று வருடங்களாக தேவைப்படும் சமயத்தில் எல்லாம் பைபிள் கதைகளைப் படித்துக் கொண்டு வருகின்றேன்.

அவர்கள் இத்தளத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுமாய் வாசகர்களின் சார்பிலே கேட்டுக் கொள்கின்றேன். சில கதைகள் உங்களின் பார்வைக்கு.

ஆபிரகாமின் பலி

மூன்று வழிப்போக்கர்கள்"

பயணம் துவங்கியது


நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்து போக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்று போக மறுக்கும் “நானும் உள்பட” என்று தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும் மதுரன் அவர்களின் சிறகுகள் வலைப்பூவினில் பல கட்டுரைகள் தன் சுய சிந்தனையுடன் வடித்திருக்கின்றார்கள்.

நான் படித்த சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்

தமிழனின் பின்னடைவுக்கு காரணம் தெரியுமா?

வழிதேடும் சுவடுகள் - பாகம்1



“அன்பை விட ஆயுதம் எதுவுமே இல்லை” என்று அன்பாலே ஒரு வலைப்பூவினை வடிவமைத்திருக்கின்றார்கள் மன்னையின் செல்வன் சிவா அவர்கள்.

கற்பனையில் வரைந்த மீண்டும் அடுத்த கடிதத்தில்..  நகைச்சுவை ததும்ப அவரது சிந்தனையை நம்மோடு பகிர்ந்திருக்கின்றார்கள். அவசரமான இவ்வுலகிலே நாம் எவ்வளவு வேகமான இயந்திரத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனையும் அதனுடைய முடிவுப் பொருளையும் நமக்கு தனியே ஒரு நடைப்பயணம். வழியே வழங்குகின்றார்கள்.

 இதயம் இடம் மாற்றி .... என்ற கவிதைப் பதிவிலே அன்பானவர்களின் இதயத்தின் அருகே தன் இதயத்தினை பத்திரமாய் வைக்கும் வரிகள் பல்நோக்கில் சிந்திக்க தக்கன.

மனதில் தோன்றும் எண்ணங்களே எழுத்துகளின் வடிவமாய் நாம் கண்டு ரசிக்கின்றோம் என்று என் சகோதரியிடம் பல முறை கலந்துரையாடியிருக்கின்றேன். 

அதனை மெய்பிக்கும் விதமாக ஈழமண்ணின் இலக்கிய ரசனையாளர் திருவாளர் வந்தியத் தேவன் அவர்களின் என் உளறல்கள் வலைப்பூவானது நமக்கு பல ரசிப்பிற்குகந்த வரிகளை நமக்கு தருகின்றன.

நான் படித்து ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வெனக்கு.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ
 
ஐ மிஸ் யூடா!
 
வாழ்நாள் சாதனையாளர் செங்கைஆழியான்

கிராமத்து விதையாய் பாலை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாணி சே.குமார் அவர்களின் சிறகில்லா பறவையோடு நாமும் பறந்திடுவோமே! தண்டவாளப் பூக்களின் நாயகி நந்தினியின் எண்ண அலைகளையும், எடுத்திருக்கும் சிறப்பான முடிவையும் படித்த பின்பு நாம் எழுத்தாளரை பாராட்டமல் இருக்க மனம் வருவதில்லை.

ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். இங்கு பங்காளிச் சண்டை யில் இளம்பிராயத்து நிகழ்வுகளையும் சமாதானம் சொல்ல இப்போது நம்மோடு அந்த உறவுகள் இல்லையே என்ற ஏக்கத்தினையும் நமக்கு வடித்து தந்திருக்கின்றார்கள்.


இணைய உலகிலே தொழில் நுட்பச் சக்கரவர்த்திகள் நமக்கு இலவச தொழில் நுட்ப உதவிகளை செய்து தருபவர்கள் எண்ணில் சிலரே.! அவர்களில் நம் தங்கம் பழனி அவர்களும் ஒருவரே!

இவர்களைப் பற்றிய அறிமுகத்தினை வலைச்சரத்தில் பலர் சிறப்பாசிரியர்கள் எடுத்துரைந்திருக்கின்றபடியால் நான் பார்த்த சில ஆக்கங்களை உங்களோடு பகிர்கின்றேன்.

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!
 
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பொன்மொழிகள் !

அலெக்சா ரேங்க் உயர வழிகள்..

"எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள" தொடருக்கு "அழகி"யின் அங்கீகாரம்..!!

Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!


அடுத்த தொகுப்போடு பின்னர் வருகின்றேன்.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...