செவ்வாய், 23 அக்டோபர், 2012

வலைச்சரம் - இரண்டாம் நாள் பதிவு - செயல்களே மூலாதாரம்.

இருப்பதைக் கொண்டு இல்லாதவர்க்கும் ஈந்து தனது ஈகைக் குணத்தினை வெளிப்படுத்திடும் மாந்தரை வள்ளல் என்றும் கொடையாளி என்றும் அழைக்கின்றோம். பொருட் செல்வம் மட்டுமின்றி எல்லா வகையிலும் ஈந்து வாழ்பவர் வாழ்க்கை என்றுமே போற்றுதற்குரியது.

அத்தகைய மாந்தர் வழியிலே நாம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதியினை என்றும் மறந்திடக் கூடாது.

இது ஒரு புறமிருக்க பண்டைய தமிழ் மன்னர்களில் மூவேழு வள்ளல்களைப் பற்றிய சிறு குறிப்பினைக் காண இங்கே சொடுக்கிடுங்கள்.


இவர்களில் நமக்கு கடையேழு வள்ளல்களான 1. பாரி, 2. ஓரி, 3. காரி, 4. பேகன், 5. நள்ளி, 6. அதியமான், 7. ஆய் – ஆகியோரைப் பற்றி தான் அதிக அளவில் அறிந்திருப்போம்.

இன்றும் சிறப்பாக சொல்லப்படுவை:

முல்லை கொடி படர்ந்து வளர தன் தேரையே  கொடுத்த பாரி

குளிர் காலத்தில் மயில் அகவ, அது குளிரால் தான் நடுங்குகின்றதோ என்றெண்ணி தன்னுடைய பகுத்தறிவின் எல்லைக்குள் நுழையாமல் கொடை மடத்தோடு மயிலுக்குப் போர்வை தந்த பேகன்

வாழ் நாள் அதிகரிக்கச் செய்திடும் அரிய நெல்லிக்கனியினை தான் உண்ணாது ஔவைக்கு அகமகிழ்வோடு ஈந்த அதியமான்

துன்பங் கொண்டு துவண்டிரும் மாந்தருக்கு நல்ல குதிரைகளைக் கொடுத்து அவர்களின் வாழ்வில் வெளிச்சமடையச் செய்தவரும், கலங்கிய மனத்தோரின் கவலை நீக்கும் அருமருந்தாகவும் செயல்பட்ட காரி வள்ளல்.

ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்க ஆடையையும் இரவலர்க்கு கொடுத்து உன்னத இடத்திலமர்ந்தவர் ஆய் வள்ளல்.

பசிப்பிணியை தன் மக்களிடமிருந்து ஓடச் செய்த நள்ளி வள்ளல்.

கலைஞர்களின் கலைத்திறனை பாராட்டி அவர்களுக்கு நிலங்கள் வழங்கி பெருமையடைந்த ஓரி வள்ளல்

மேலும் சிறப்பாய் அறிந்திட சொடுக்கிடுக:
1 & 2

ஆக, நம் வாழ்வு நம்மில் வசப்பட நாம் செய்யும் செயல்களே மூலாதாரம். அத்தகைய ஆதாரத்தினை நாம் பல்வேறு வழிகளின் மூலமாக தினமும் பெற்றுக் கொண்டே தான் வருகின்றோம். தினமும் ஏதேனும் ஒரு விதமான படிப்பினைகள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கின்றது.

அவை எத்தன்மையன என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் நம்மோடு வசப்படும்.



 இணைய உலகில் நான் காலுதைத்து, தவழ்ந்து, குப்புறமாய் விழுந்து, தத்தித் தத்தி நடந்து இன்று ஏதோ ஒரு விதமான வேகத்தில் முன்னோக்கிய பயணத்தை தொடர்கின்றேனில் அதற்கு காரணமாக விளங்கியது/விளங்குவது/விளங்கிக் கொண்டிருப்பது  முத்தமிழ் மன்றம் என்ற என் தாயே!


நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இத்தளமானது அன்பையும், பாசத்தையும், நட்பையும், அறிவுத்திறனையும் பெருக்கிட வல்லது. தாய் மொழியான தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தக்க ஆவணங்களை ஆணவமின்றி தன்னுள் வைத்திருப்பதோடு சீரிய நெறிமுறைகளையும் பயிற்றுவிக்கின்றது.

இத்தளத்தின் பல பதிவுகள் எனக்குப் பிடித்திருந்தாலும் சில பதிவுகளை இங்கே எடுத்துக் காட்டிட கடமைப்பட்டிருக்கின்றேன்.

கதைப்பகுதி 
  1. ஆண்டாளுக்குக் கல்யாணம்
  2. ஜென் கதைகள்
  3. மஞ்சு அக்காவின் கதைகள்
  4. நுனிப்புல் பாகம் - 2
  5. இரும்புக்கோட்டை மர்ம யோகி- நகைச்சுவைதொடர்கதை
  6. உயிரை மறந்த உடல்கள்
  7. ப‌சுமை வேட்டை....!! 
  8. ஒரு நிமிடக் கதை= உதவி
  9. பதியம்
  10. இரவில் வந்தவள்..!
  11. கடலோரக் குற்றங்கள் 
கவிதைப் பகுதி

  1. நானும் நீயும்
  2. ஆதியந்தக் கவிதை- சவாலுக்குத் தயாரா?
  3. அடுத்த வரி எழுதுங்க! - கவிதைவிளையாட்டு!
  4. முத்தமிழ்மன்றக் கவியரங்கம்.
  5. சமையல் வெண்பாக்கள் 
  6. சூஃபி கவிதைகள்
  7. கலைவேந்தனின்நல்வழி வெண்பாக்கள்..!
  8. தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது
  9. நாவிஷ் செந்தில்குமாரின்கவிதைகள்
  10. சுந்தராவின் கவிதைச் சிதறல்கள்
  11. வாலைக் கும்மி (நம்ம வாலுப் பொண்ணுக்கு சமர்ப்பணம்)
  12. காதல்என்பது!
  13. மெளன யுத்தம் !!
  14. இளவரசியின் எண்ணச்சிதறல்கள்!
  15. காகிதனின் கலைவாணி துதிகள்
  16. சுடர்க்கொடியின்கனவுகள்
  17. மகுடதீபன் கவிதைகள்
  18. இரும்பிலே ஒரு சேலை
  19. கனவுகள்
  20. மாலைமாற்று - கிரியின் முயற்சிகள்
  21. அருட்பனுவல் ஆயிரம் ( மகுடதீபன் )
  22. கதம்பப் பூ(பா)க்கள் - முத்தமிழ் மன்றம்
  23. என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை) 
  24. "இயற்கையின் மடியில்" -சுந்தரா
  25. எனக்கும் எனக்கும்
  26. மனதின்ஏக்கம்
  27. ப்ரியன் கவிதைகள்
  28. மழலைக் கிறுக்கல்கள்
  29. இலக்கியனின் கவிதைகள்
  30. என்னில்லம்
கல்வி, இலக்கியம், கட்டுரை மற்றும் பிற ஆக்கங்கள்
  1. ஈசாப்பின் குட்டிக் கதைகள்:மொழிபெயர்ப்பு வை கோவிந்தன்
  2. ஒரு சொல் இரு பொருள்
  3. சொல்லுக்குள் சொல் - கண்டறிவோம்வாருங்கள்
  4. நிஷா அத்தை சொல்லும் புத்திபுகட்டும் கோக்குமாக்கான கதைகள்
  5. கழுகுவீரன் - (வி)சித்திரக்கதை
  6. தெனாலி ராமன் கதைகள்
  7. மஞ்சு அக்காவுக்கு பிறந்தநாள் பரிசு கதை
  8. குறுக்கெழுத்துப் போட்டி
  9. எண்ணைக் கண்டுபிடியுங்க -மூளைக்கு வேலை
  10. சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை
  11. குறுந்தகவல் - தத்துவங்கள்
  12. மகுடதீபனின் எண்ணக் கலாபம்
  13. கருத்தை கவர்ந்த கருத்துகள்
  14. எளிதாய்ப் படிக்க முன்னோர்கூறும் வழிமுறைகள்
  15. நிர்வாக பாடங்கள்
  16. விட்டுத் தள்ளு கவலையை....
  17. ஐந்தாவது தூண்
  18. புரட்சியாளன் சேகுவேரா!!!!
  19. சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு-பாகம் 1
  20. சீற வேண்டிய நேரத்தில் சீறவேண்டும்!
  21. நான் கண்டதும் கேட்டதும்
  22. எல்லோரும் விளையாட ஒரு விளையாட்டு
  23. இசைக் கருவிகள்(புகைப்படங்கள்)
  24. ராஜா WIN தன்னம்பிக்கைப் பக்கம்...!
  25. மஞ்சு அக்காவின் சுவையான சமையல்கூடம்
  26. ப‌்த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க‌சில தகவ‌ல்க‌ள்
  27. புவனா அக்காவின் சமையல் அறைகுறிப்புகள்
  28. என் சமையலறை
  29. சமையல் பரிமாறும் முறை
  30. பனங்கழி இல்லாமல் பனங்காய்ப்பனியாரம்
  31. கருவாட்டுத் தொக்கு!
  32. அண்டத்தின் அற்புதங்கள்
  33. உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்
  34. அறிவியல் தத்துவங்கள் - எளியவிளக்கங்கள் - படங்களுடன்
  35. விஞ்ஞானக் கருவூலம்!
  36. மிதிவண்டி அற்புதம்
  37. சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.
  38. தகவல் பாதுகாப்பு மேலாண்மை- அறிவோம் வாரீகளா?
  39. அசைபட வரைகலை தெரிவோமா?
  40. GIMPல் கலக்குவோம் வாருங்கள்!
  41. மின்விரிதாள் (Spreadsheet)விரிப்போம் வாரீகளா?
  42. இராவணன், தமிழர்கள், சிந்துச் சமவெளி
  43. இலக்கியத் தேன் சொட்டு
  44. கம்பன் காட்டும் காப்பிய திறம்
  45. தமிழ் வரலாற்றுப் புதினங்களின்பட்டியல்
  46. குறிஞ்சிப்பாட்டில் கபிலர்குறிப்பிடும் 99 மலர்கள்
  47. சிலேடை வெண்பா வரைவோம்
  48. சொல்லோவியம்
  49. தமிழகத்தை ஆண்ட அரசர்கள்- காலப்பட்டியல்
  50. ஆராய்ந்தறிவோம்
  51. கடவுள் யாருக்குச் சொந்தம்?
  52. திருக்-குர்ஆன் தமிழாக்கம்
  53. கச்சியப்ப முனிவர் வரலாறு
  54. இன்று பிரதோஷம்
  55. சுந்தர காண்டம்
  56. ராஜாவின் தமிழ் இனிமைப் பக்கம்...!
  57. சிவபரத்துவ நிச்சயம்
  58. பைபிள் சிந்தனை
  59. சிரிச்சா நல்லது...
  60. கணக்குப் பதிவியல் படிக்கவாரீகளா?


அடுத்த பதிவனாது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு வாழ்க்கை நெறிகளை அவ்வப்போது சொல்லாலும், செயலாலும் கற்றுத் தரும் குருமார்களைப் பற்றியது.

நன்றி

2 கருத்துகள்:

  1. மிகவும் நல்லதொரு பயனுள்ள தொகுப்பு...

    நன்றி... (வலைச்சரத்திலும் கருத்திட்டேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயனுள்ள தொகுப்பாக இதனைக் கருதி பயன்மிகு கருத்துரை இரு இடங்களிலும் வழங்கியமைக்கு நன்றி சகோ.!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...