புதன், 27 ஜூலை, 2011

எடியூரப்பா குற்றவாளி: லோக்ஆயுக்தா அறிக்கை; மாநிலத்திற்கு16,085 கோடி ரூபாய் இழப்பு- சந்தோஷ் ஹெக்டே

எடியூரப்பா குற்றவாளி: லோக்ஆயுக்தா அறிக்கை; மாநிலத்திற்கு16,085 கோடி ரூபாய் இழப்பு- சந்தோஷ் ஹெக்டே

பெங்களூரு: சுரங்க முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா தயாரித்த அறிக்கை இன்று வெளியானது. இந்த முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் பேசிய லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மாநிலத்திற்கு 16,085 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கர்நாடக அரசுக்கு ரூ. 1800 கோடி வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் சட்டவிரோத சுரங்க மோசடி, கர்நாடக அரசியலை கலக்கி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, அரசு இந்த அறிக்கையை செயல்படுத்தும் என தான் நம்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானது. 25,228 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தலைமைச்செயலாளர் எஸ் வி ரங்கநாத்திடம் லோக் ஆயுக்தா பதிவாளர் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில், சுரங்க முறைகேடுகளில் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமார சாமி, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., அனில் லாட் ஆகியோர்களும் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை தாக்கலுக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்தோஷ் ஹெக்டே, சட்டவிரோத சு‌ரங்கங்கள் பெல்லாரி,சித்ராதுர்கா மற்றும் டும்குர் பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. சட்டவிரோத சுரங்கங்களால் பெல்லாரி மாவட்டத்தில் மோசமான செயல்பாடுகள் நடந்துள்ளது. பெலிகேரி மற்றும் கர்வார் பகுதிகளில் 5 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு தாதுக்கள் காணாமல்போயுள்ளன. சடடவிரோத சுரங்கங்களுக்கு எதிராக பா.ஜ., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அறிக்கையை கவர்னருக்கும் அனுப்பியுள்ளேன். முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. சுரங்க முறைகேட்டில் தொடர்புடையவர்கள் முதல்வர் குடும்பத்திற்கு சொந்தமான டிரஸ்ட்களுக்கு காசோலை மூலம் 10 கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.

லோக் ஆயுக்தா அனுப்பிய முதல் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டவிரோத சுரங்கங்களுக்காக எடியூரப்பா லாபம் பெற்றுள்ளார். 2006-2010ம் ஆண்டு காலகட்டத்தில் மாநிலத்திற்கு 16,085 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . அறிக்கையில் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமலு, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுஎன கூறினார்.

எடியூரப்பாவிற்கு பா.ஜ., மேலிடம் அவசர அழைப்பு : லோக் ஆயுக்தா அறிக்கையில் எடியூரப்பா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உடனடியாக டில்லி வர பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்களுடன் கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா, மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டார், லோக்சபா உறுப்பினர் சதான்ந்த கவுடா உள்ளிட்டோர் உடனடியாக டில்லிக்கு வருமாறு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...