செவ்வாய், 27 மார்ச், 2012
99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்
வெள்ளி, 16 மார்ச், 2012
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,?
இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பார்லிமென்டில் நடந்த விவாதத்தில், கனிமொழி பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றிவிடுவர் என்றும், இலங்கை அரசு மீது, வெளியுறவு அமைச்சர் நிறைய நம்பிக்கை வைத்திருப்பது, அவரது அறிக்கையிலிருந்து தெரிகிறது. ஆனால், எதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு இந்த நம்பிக்கையும், உறுதியும் வந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமர் இங்கு வந்த போது, அங்குள்ள தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அறிக்கையில், 300 வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்குள்ள தமிழர்களுக்காக, 50 வீடுகளாவது கட்டித் தரப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
கிருஷ்ணா இலங்கை சென்று திரும்பியபோது, "30வது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்படும்' என, பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடுத்த சில நாட்களிலேயே இலங்கை பிரதமர், "அது நடக்காது' என, மறுத்து விட்டார். "இந்தியாவுக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை' எனக் கூறிவிட்டார்.
நமது வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, இலங்கை பிரதமர் அளித்த வாக்குறுதியை அவரே மீறும்போது, அந்நாட்டு அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்ப்பது? அவர்களுடைய வார்த்தைகளிலோ, இலங்கைத் தமிழர் வாழ்க்கையிலோ நீதி பிறக்கும் என எப்படி நம்ப முடியும்? மேலும், "இலங்கையில் ஏற்கனவே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது; அதன் இறுதியில் நீதி கிடைக்கும்' என நம்புவதாக அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நாட்டு விசாரணை அறிக்கை, அங்கு எந்த போர்க் குற்றமும் நடக்கவில்லை என அறிவித்துவிட்டது.
அந்த அறிக்கையில், "குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும், எப்படி இலங்கையை மத்திய அரசு நம்புகிறது எனத் தெரியவில்லை. வழக்கமாக நாம் அண்டை நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவதில்லை என பேசுகிறோம். ஆனால், 1971ம் ஆண்டு வங்கதேசப் போரில் நமது பங்களிப்பு பற்றி நாம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அறியும்.
காசாவில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2009ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதை, தென் ஆப்ரிக்காவுக்கு நமது பிரதமர் சென்றிருந்தபோது, ரொம்பப் பெருமையாகக் குறிப்பிட்டார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் என வரும் போது, தென் மாநில மற்றும் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என வரும்போது மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? நாங்கள், அதிகப்படியாக எதையும் கேட்கவில்லை. இலங்கையில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதை மட்டுமே அறிய விரும்புகிறோம். உலகத்தில் உள்ள யாருமே, அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூற முடியாது. 40 ஆயிரம் மக்கள் காணவில்லை; 40 ஆயிரம் மக்களின் உயிர் போய்விட்டது அல்லது எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகும் நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்? எல்லாரும், தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு என்கின்றனர். இது, தமிழ் உணர்வு இல்லை. இது மனித உரிமை மீறல் விவகாரம். தமிழகம், இன்னமும் இந்தியாவின் ஓர் அங்கம் தான் என நம்புகிறோம். இந்தப் பிரச்னையை எழுப்பும் போதெல்லாம், என்னவோ பிரிவினைவாதிகள் போல எங்களைப் பற்றி பேசுகின்றனர். இது தமிழர்களின் பிரச்னை இல்லை. இது, இந்தியா கவனிக்க வேண்டிய பிரச்னை; மனித உரிமை பிரச்னை. இதை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்திய அரசும் இதை உணர்ந்து, செயல்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
"தமிழகம், இந்தியாவின் அங்கம் தானா' என்ற அளவுக்கு ஆவேசமாக கனிமொழி பேசியிருப்பது, கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்றே நடந்திருக்க வேண்டும். எனவே, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் மீது கோபத்தில் இருக்கும் தி.மு.க., தலைமை, இலங்கை விவகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறும் அல்லது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
நக்சல் போல ஹசாரே அணி: சுப்பிரமணியசாமி விமர்சனம்
புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் பலமான லோக் ஆயுக்தாவை அமைக்கக் கோரியும், சுரங்க ஊழலை விசாரிக்கக் கோரியும் அன்னா ஹசாரே அணியில் உள்ள சரத்சிங் கும்ரி தலைமையில், கடந்த 13 மற்றும் 14ம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையடுத்து, லோக் ஆயுக்தாவை அமைப்பது குறித்து விவாதிக்க, அன்னா ஹசாரே அணிக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார். அன்னா ஹசாரே அணியில் உள்ளவர்களுடன் இன்று, மத்திய பிரதேச அரசு, லோக் ஆயுக்தா குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறது.
சுப்பிரமணியசாமி பாய்ச்சல்: ""ஊழலை ஒழிப்பதற்காக அன்னா ஹசாரே இயக்கம் நடத்தினாலும், அவரது அணியில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளை போல செயல்படுகின்றனர்,'' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "பிரச்னைக்குத் தீர்வு காண முயலாமல், அதைப் பெரிதுபடுத்தத்தான் ஹசாரே அணியினர் முயற்சிக்கின்றனர். கற்பழிப்பு, கொலை போன்றவை போன்று ஸ்பெக்ட்ரம் வழக்கு, இந்திய குற்றவியல் சட்டத்தைச் சார்ந்ததல்ல. ஆனால், இந்த விஷயத்தில் சிதம்பரம் கிரிமினல் மூளையுடன் செயல்பட்டுள்ளார். எனவே தான், நான் சுப்ரீம் கோர்ட்டை அணுக நேர்ந்தது. அடுத்த கட்டமாக ஏர் இந்தியாவில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்த உள்ளேன்,'' என்றார்
விட மாட்டோம் - தி மு க
ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்காக, தனது சொந்தக் கட்சி அமைச்சரையே பதவி நீக்கச் சொல்கிறார், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் போராடுவதாகச் சொல்லும் தி.மு.க.,வோ, இலங்கை விவகாரத்தில் வீடியோ ஆதாரமே வெளியான பின்னும், அமைச்சர் பதவியையோ, மத்திய அரசையோ விடுவதாக இல்லை என அறிவித்துள்ளது. நாளொரு பிரச்னை; பொழுதொரு போராட்டமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசின் நிலை. இதில், "லேட்டஸ்டாக' இரு பிரச்னைகள் எழுந்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரம், ஒன்று. இலங்கை மீதான ஐ.நா., மனித உரிமை கமிஷன் தீர்மானம், இரண்டு.
முதல் பிரச்னை, நாட்டு மக்களை பாதித்ததைவிட, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அதிகம் பாதித்துவிட்டது. சொந்தக் கட்சி அமைச்சர் என்றும் பாராமல், "கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்; பட்ஜெட் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ய வேண்டும்' என, போர்க் குரல் எழுப்பியுள்ளார். குரல் என்றால், பிரதமருக்கு எழுதப்படும் வழக்கமான கடிதங்கள் போல் அல்ல. ஒரே வீச்சில், ஒட்டுமொத்த மத்திய அரசையும் ஆட்டுவிக்கும் குரல். இவரது எதிர்ப்பு கிளம்பிய மறுநிமிடம், ரயில்வே அமைச்சர் கோல்கட்டாவுக்கு பறக்கிறார். பிரதமர், உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார். திரிவேதியின் அமைச்சர் பதவி, "முடிந்து போன' விஷயமாகிவிட்டது. மறுபுறம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானம். இலங்கையின் போர்க் குற்றம் பற்றி விசாரிக்க வலியுறுத்தும் இத் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என பெருங்குரல் எழுந்துள்ளது. எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல், இலங்கைக்கு வாலையும், தமிழகத்துக்கு தலையையும் காட்டி நிற்கிறது மத்திய அரசு. அவர்களுடைய இந்த இயலாமையைப் பார்த்த தி.மு.க., கொதித்து எழுந்துவிட்டது. ஜனாதிபதி முன்னரே கோஷம் போட்டது. சபாநாயகரை முற்றுகையிட்டது. கனிமொழி, திருச்சி சிவா என, கழக எம்.பி.,க் கள் வீரமுழக்கமிட்டனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியே கூட, "ஆதரவு வாபஸ் பற்றி, உயர்மட்டக் குழு முடிவெடுக்கும்' எனக் கூறிவிட்டார். இதற்கிடையில், "சேனல் 4' நேற்று வெளியிட்ட வீடியோ காட்சிகள், எரிகிற கொள்ளியில் ண்ணெய் ஊற்றியது போல், தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை பற்றவைத்து விட்டது. "அவ்வளவு தான்! மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றிவிட்டது' என, அரசியல் வல்லுனர்கள் அத்தனை பேரும், அரசின் ஆயுட்காலத்தை எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம், ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் தி.மு.க., இந்த முறையும் அந்தர் பல்டி அடித்துவிட்டது. டில்லியில் நேற்று தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், "இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., விலக்கிக் கொள்ளுமா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பாலு கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தி.மு.க., முழு ஆதரவை அளிக்கும். இந்தக் கூட்டணியின் முக்கிய அங்கமாக தி.மு.க., உள்ளது. இந்த அரசாங்கம் எவ்வளவு நாள் நீடிக்குமோ, அதுவரை நாங்களும் அங்கம் வகிப்போம்' என, ஒரே போடாகப் போட்டுவிட்டார். தி.மு.க.,வை விட ஒரே ஒரு எம்.பி., அதிகம் வைத்துள்ள திரிணமுல் காட்டும் ஆவேசம் என்ன, தி.மு.க., கடைபிடிக்கும் மென்மையான போக்கு என்ன என்பது, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. டில்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியது போல, "இலங்கை விவகாரத்தில் தி.மு.க., கடுமையான நிலைப்பாடு எடுக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. சம்பவம் நடந்தபோதே விலகாதவர்கள், வீடியோ வெளியானதற்கா விலகுவர்'.
ராஜினாமாவா: செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்கிறார் கருணாநிதி: ""ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கமுடியாது எனக்கூறிவிட்ட நிலையில், மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து, கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்'', என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த கருணாநிதி நேற்று மாலை நெல்லையில் பேட்டியளித்தார்.
* கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காரணம் போராட்டக்காரர்களா? அல்லது தமிழக அரசா?
பணம்.
* ஐ.நா.,சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடியாது எனக்கூறிவிட்ட நிலையில், அதற்காக, மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய நீங்கள் வலியுறுத்துவீர்களா?
அதுகுறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
* தமிழகத்தில் தொடர்மின்வெட்டிற்கு முந்தைய தி.மு.க., அரசுதான் காரணம் என முதல்வர் ஜெ., குற்றம் சாட்டுகிறாரே.
முதல்வரின் பேச்சு அது. இவ்வாறு கூறினார். டெம்போ டிராவலரில் பயணம் செய்த கருணாநிதி, தேவர்குளம், வன்னிக் கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட இடங்களில் பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் பேசவில்லை.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்
சனி, 25 பிப்ரவரி, 2012
4 கைகள்இ 4 கால்களுடன் அதிசய குழந்தை.!(படம் இணைப்பு)
இளகிய மனமுடையோர் கட்டாயம் படத்தினை பார்க்க வேண்டாம்.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்:வயதானோர் அரவணைப்பில் கேள்விக்குறியான எதிர்காலம்
தந்தை இல்லை, தாயுமில்லை; தெய்வம் அன்றி யாருமில்லை' என, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக கொண்ட குழந்தைகள், அரசின் உதவியை எதிர்பார்த்து, வயதானோர் அரவணைப்புடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.
பிறக்கும் போதே, தாய், தந்தை யாரென தெரியாமல், ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். சேலத்தில், வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில், வாழும் மூன்று குழந்தைகள், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். எவ்வித ஆதரவும் இல்லாமல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக கொண்ட ராஜேஸ்வரி(16), திவ்யபாரதி(15), மணிகண்டன்(10), மூன்று பேரும் நேற்று, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, உதவி கோரி மனு அளித்தனர். ராஜேஸ்வரி எஸ்.எஸ்.எல்.ஸி., முடிக்கப்போகிறார். திவ்யபாரதி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மணிகண்டன், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
அந்த குழந்தைகள் கூறியதாவது:அப்பா சவுந்திரராஜன், அம்மா தேவகி. நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போதே, அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டனர். எங்களுடைய தாத்தா ராமாச்சாரி, பாட்டி பத்மாவதி ஆகியோர், நெசவுத் தொழில் செய்து எங்களை காப்பாற்றி வருகின்றனர். பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கிறோம். தாத்தாவுக்கு, 72 வயதாகிறது. வயதான தாத்தா, பாட்டிக்கு அவ்வப்போது உடல் நலம் மோசமாகிறது. அவர்களுக்கு பின், எங்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.நாங்கள், பாவடியில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். மேல்படிப்பு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் மூன்று பேரும், நன்றாக படித்து வருகிறோம். தாத்தா, பாட்டிக்கு பின், எங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் உள்ளது. அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளோம். அதிகாரிகள், மனுவை வாங்கிக் கொண்டு, போய் வாருங்கள், எனக் கூறுகின்றனர். எங்கள் வாழ்க்கைக்கு, அரசுதான் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாத்தா ராமாச்சாரி கூறுகையில்,""
' என்றார்.சிறு வயதிலேயே, மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து விட்டனர். எனக்கு பின், அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற பயம் எனக்குள்ளது. அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்,'
பெற்றோரை இழந்து வாழும் இக்குழந்தைகளுக்கு, உதவ விரும்புவோர், 90951- 63698 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முதியோர் அரணைப்பில் இருக்கும் மூவருக்கும், கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற வாசகம் உயிர்பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பரிதாபம் கொள்ளச் செய்யும் நிலையிலே கடவுள் வைத்துப் பார்க்கின்றானே