பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 அக்டோபர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 19

  1. உழைப்பின் வேரோ கசப்பு, கனியோ இனிப்பு.
  2. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது. 
  3. கத்தும் பூனை எலிகளைப் பிடிக்காது.
  4. நீரில் மூழ்குபவன் அதன் நுரையைக் கூட பற்றிக் கொள்வான்.
  5. கடன் படாத ஏழ்மை பெரும் செல்வம்.
  6. அறிஞர்கள் கூட்டம் ஒரு உயிருள்ள வாசக சாலை.
  7. அறிவாளியின் ஒரு நாள் முட்டாளின் முழுவாழ்வுக்குச் சமம்.
  8. அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
  9. உள்ளத்தோடு போராடுவதே உயர்ந்த போராட்டம்.
  10. பிரயாணம் செய்யாதவனுக்கு மனிதர்களின் மதிப்பு தெரியாது.

வியாழன், 11 அக்டோபர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 18

  1. அவனே இவனே என்பதை விடச் சிவனே என்பது மேல்.
  2. சுட்டாலும் பால் சுவையிலும் குறையாது
  3. அழுதாலும் அந்தஸ்து வேண்டும், சிரித்தாலும் சீர் வேண்டும்.
  4. அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
  5. ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
  6. ஆசையுள்ளவனுக்கு அலைச்சலும் உண்டு.
  7. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.
  8. இல்லாமல் போனாலும் சொல்லாமல் போகாதே!
  9. உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும்.
  10. உயிர் இருக்கும் வரை தைரியத்தைக் கை விடலாமா?

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 17

  1. அதிகம் பேசுபவர்கள் பெரிய புளுகர்கள்.
  2. அரிசி ஆளாக்கு ஆனாலும் அடுப்பு நெருப்பு அவசியம்.
  3. அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
  4. அலை ஓய்ந்த போது தலை முழுக முடியாது.
  5. அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.
  6. அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.
  7. அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு
  8. அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
  9. அன்ன நடைநடக்கப் போய் தன் நடையும் கெட்டான்.
  10. அறுக்க மாட்டான் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 16

  1. கடன் கேட்க வருபவரைப் பலரும் வரவேற்க மாட்டார்.  
  2. சொந்தக் குழந்தையில்லாதவன் பெரும் அதிர்ஷ்டமில்லாதாவன்.
  3. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவமில்லாம சாவான். 
  4. காவலுக்கு ஆள் இருந்தாலும் பூட்டுப் போட தவறமாட்டான்.
  5. புத்திசாலி. போதுமென்ற மனமுடையவன் – முன்னேறமாட்டான். (??)
  6. புத்திசாலி, ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக ஆக்கிக் கொள்வான். 
  7. பணக்காரர்களின் பார்வை மங்கலாக இருக்கும்.  
  8. தொடக்கத்தை விட முடிவைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.  
  9. அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்  
  10. அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 15

  1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
  2. செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
  3. மூடின வாயில் ஈ நுழையாது. மரணமே உலகின் முதலாளி.
  4. பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும். செயலே புகழ் பேசும்.
  5. நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
  6. நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
  7. இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
  8. வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
  9. தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.
  10. கவனமாயிருந்தால் துரதிர்ஷ்டத்தையும் தூக்கி விடலாம்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

அறிஞர்களின் பொன் மொழிகள் -1

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது. - ஸாடி

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை. - அக்னஸ் றெப்லையர்

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. - பிலிப் குறொஸ்பி

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது. - எலனொர் ரூஸ் வெல்ட்

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான். - ஹென்றி சி. லிங்க்

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும்.  
ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம். என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான்
என்ன செய்ய வேண்டும்?

இவை
ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும். - நதானியல் பிராண்டன்

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல. - எட்வின் சி. ப்ளிஸ்

நன்றி: வலைப்பூ