திங்கள், 22 அக்டோபர், 2012

வலைச்சரம் - முதல் நாள் பதிவு - அறிமுகம்

இறையடி பற்றிட இளகிய தென்மனம்
மறைபொருள் கண்டேன் மதிதெளிய – பறையறை
தமிழின் பழஞ்சுவை சபையொ டலாவ
நேமிவழி நல்கிடு இறையே.


அனைவருக்கும் எந்தன் பணிவான நல்வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் சிவஹரி. சிவஹரி என்பது என் பெயர். எல்லோருக்கும் பொது வழியென்றிருந்தாலும் என் வழியென்றுமே அதில் தனித்து நிற்கவேண்டும் என்ற பேராசை கொண்டவன்

எண்ணத்தில் உதிக்கும் வரிகளில் சிலவொன்றை எழுத்துருவாக்கி அதனைக் கண்டு மகிழ்பவன். அதே வழியிலே அடுத்தவரின் கருவறிந்து அவர் வளர பாராடிடவும் வேண்டுமென்று எண்ணுபவன். புரியா வரிகளுக்கு பொருள் கேட்பதில் வன்மனத்தோன். என்னைப் பற்றி நானே எடுத்துச் சொல்ல மேலும் ஏதுமில்லையாதலால் என் படைப்பினைப் பற்றி விரிந்து சொல்லவும் என் மனம் மறுக்கின்றது.


என் வலைப்பூவினில்( ிவியின் சேமிப்பில் சில..... )எழுதிச் சேர்த்த வரிகள் எல்லாம் என் மனவிசைவோடே படைக்கப்பட்டதால் என் கண்களில் எது சிறந்தது என்று என்றுமே பிரித்துக் காட்டிட விரும்பவில்லை


என் படைப்புகளுக்கு மீயிணைப்பினை இங்கே தந்து பதிவர்களின் ரசனைக்கே விட்டுவிட விரும்புகின்றேன்.

இதோ என் படைப்புகளின் வகையொட்டிகள்:


அடுத்து ஒரு முக்கியமான வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடவும் விழைகின்றேன். இந்த சரீரத்தின் இயக்கத்தில் பங்கு செலுத்தி இன்னும் என்னை கடனாளியாகவே எப்போதும் வைத்து அழகு பார்ப்பவர். கூடவே வலைச்சர ஆசிரியப் பணிக்கு பரிந்துரைத்திருப்பதும்.  


 
கற்றதைப் பகிர்வதிலும், கருத்தின் செறிவை வழங்குவதிலும், பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும், கறிவேப்பிலையாய் காரியக்காரர்கள் நினைத்தாலும் கவலை கொள்ளாது கனிவுடன் பழகுவதில் வல்லவராய்த் திகழும் எங்கள் மஞ்சுபாஷிணி அக்கா அவர்களின் கதம்ப உணர்வுகள் என்னும் வலைப்பூவினில் எனக்கு படித்ததில் பிடித்த சிலவற்றினை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.


மரணத்தின் நிழல் என்னும் தலைப்பிலான கவிதையில் படிக்கையிலே பயம் நம்மை சூழ்ந்து கொள்வதோடு அக்காவின் எழுத்து நடையினையும் ரசிக்க வைத்து விட்டது.

முத்தான மூன்று முடிச்சு என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கும் பதிவினில் ஒருவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவும் வகையிலான கேள்விகள் அமையப் பட்டிருக்கின்றது. அந்த வகையிலே அக்காவைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள இப்பதிவு உதவும் என்று எண்ணுகின்றேன்.

எதார்த்தமாய் இந்த பதிவினை இப்போது தான் கண்டேன். கதையின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல சிந்தனை வீச்சுகளை நமக்கு அள்ளித்தந்திடும் கலைக்கண் என்ற இக்கதையின் முடிவிலே கருவை இதமாய்ப் பொருத்தியிருக்கின்றார்கள் அக்கா. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வது இதனின் காரணமாகத்தானோ என்னவோ.

என் வீட்டுக்கண்ணாடி என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கின்றது பாருங்களேன்.

காண்பது எல்லாம் நல்லவையாகவும் தெரிகின்றதாம் இங்கே.

சராசரி மனித வாழ்வின் உண்மை நிலையினை எடுத்துரைக்கும் கவிதையாக செல்லக் கூடல் மிளிர்கின்றது.

நெஞ்சைத் தொட்டுச் சென்ற கதையாய் மரணம் காதலைப் பிரிக்குமா?” வெளிப்படுகின்றது இருமுறை படித்தும் நான் இன்னும் மறுமொழியிடவே இல்லை.


அடுத்த பதிவானது என் தாய் மன்றம் குறித்து எழுதப்பட்டவையாக அமையும். அதன் பின்பு நான் ரசித்த வலையகங்களில் சிலவற்றை அடுத்தடுத்து காண்போம்.


நன்றி.6 கருத்துகள்:

 1. படித்தேன்... கருத்திட்டேன்... வாழ்த்துக்கள்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கியின் சேவை உலகம் போற்றத்தக்கதே!


   மகிழ்ச்சி சகோ.!

   நீக்கு
 2. ரசித்த வலையகங்களின் பகிர்வுகள் அருமை .. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. ரசித்த வலையகத்தில் இன்று கதம்ப உணர்வுகள் மிளிர்கின்றது. மற்றயன பின்னர் காலச்சூழலுக்கு ஏற்ப அறியத் தருகின்றேன் சகோ.!

  நன்றி

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. இனிய வரவேற்புகளும் நன்றிகளும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.

   மகிழ்ச்சி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...