காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 அக்டோபர், 2012

மார்க்கண்டேய சரித்திரம் - திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு - ஒலிநாடா

அன்பின் உறவுகளே!

மார்க்கண்டேய சரித்திரத்தை நமக்கு இனிய கீதத்துடன் அருட்திரு முருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்கள். அதனை ஒலிநாடா வடிவிலே இங்கே தருகின்றேன். கேட்டு இன்புறுக.



அசுரேந்திரன் என்னும் அரக்கனின் மகளான சுரசி, சுக்ராச்சார்ய முனிவருக்கு அடுத்து சகல கலையையும் கற்றுக் கொண்டு விளங்கியதால் மாயை என்ற பெயரும் பெற்றாள். தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனகிரியிலே மாதவம் செய்யும் பிரம்மாவின் பேரனான காஷிப முனிவரை மயக்கி அவரின் வழியே குலம் தழைக்கச் செய்தாள் என்பதனை வாரியாரின் வழியிலே கேட்கும் போது இன்னும் கருத்து ஆழப்படுகின்றது.

நஞ்சு உண்டாரைக் கொள்ளும்; காமம் கண்டாரைக் கொள்ளும்  என்ற அற்புத விளக்கத்தை நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.


மேலும் சுவைபட கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கின்றார்கள்.



நன்றி
முக நூலின் வழியே பகிர்ந்த சுந்தர சிகாமணி அவர்களுக்கும்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தமிழின் பெருமை சொல்லும் ஒலி நாடா


தமிழ் மொழி அறிந்தோர் சற்றைய நிமிடம் இவ்வொலி நாடாவினைக் கேளுங்களேன்.

தமிழ் மொழி அருமையை தரமான வகையிலே கணீர் குரலில் விளக்கும் பதிவு..

நன்றி : முக நூலில் பகிர்ந்த நண்பருக்கு.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வெள்ளி, 20 ஜூலை, 2012

நகைச்சுவைக் காணொளி- 2

அடுத்த கூத்தைப் பாருங்களேன்...




நன்றி: இணையம்

நகைச்சுவைக் காணொளி- 1



எனக்கென்னமோ இது நன்கு முறைப்படுத்தி இயக்கியிருப்பதாகத்தான் தோன்றுகின்றது..


நீங்களும் பாருங்களேன்.


நன்றி: இணையம்

செவ்வாய், 17 ஜூலை, 2012

கலங்கச் செய்த காணொளி - தந்தை மகன் பாசம்

சொல்வதை விட பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.. அதுவே இக்காணொளியின் சிறப்பு.



தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
- - - (குறள். 67)


மகன்தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
- - - (குறள். 70)

நன்றி : இணையம்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெருந்தலைவரின் காவியம்

அன்பின் உறவுகளே!

இன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். இந்திய அரசியலிலும், தமிழக ஆட்சியும் ஒரு திறமை மிக்க நாயகனை இத்தரணி கண்ட தினம்.

அன்னை சிவகாமியின் வயிற்றிலே உதித்த அற்புதச் செம்மல், அனைவருக்கும் கல்வி என்ற அடைப்படையினை வழியினை இன்னோர்க்காய் முன்னோராய் வழிவகுத்த, தன் எளிமையான ஆளுமையினால் பட்டி தொட்டி பாமர மக்களின் உள்ளத்திலும் இடம் பிடித்து, இன்னாளில் ஆளுமையாளர்கள் திறன்மிகு ஆட்சியமைப்போம் என்று  வாய்சவடாலில் வடித்துக் கொட்டும் மாமேதைகளுக்கு அன்றே ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய செம்மல் பாரத ரத்னா கல்விக் கோமகன் கர்ம வீரர் காமராசர் அவர்கள் அவதரித்த தினம்.

அவரின் ஆட்சிக் காலத்தில் அடித் தட்டு மக்களில் ஒருவனாகக் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கா விடிலும் இன்றைய நாளில் அவர் வகுத்த/வடித்த நற்பயன்களின் விளை முத்தை அனுபவிக்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் என்றும் பெருமிதம் கொண்டு ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் நல்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.




மிதிவண்டியில் பின்னர் அமர்ந்திருப்பவர் நம் தலைவர்.
(நன்றி : முக நூலில் பகிர்ந்த நண்பருக்கு)



 அன்னை சிவகாமி

 நன்றி :  http://kamarajar.blogspot.com/



பெருந்தலைவரின் பேச்சு:





நன்றி யூ டியூப்

வெள்ளி, 13 ஜூலை, 2012

நகைச்சுவைக் காணொளி



நாம நடந்து போனால் நமக்கு முன்னாடி நம் விதி ஆட்டோ புடிச்சு போகுமுன்னு சொல்றது இது தானோ!


நன்றி: இணையம்

வெள்ளி, 22 ஜூன், 2012

பூமி வெப்பமயமாதலை விளக்கும் காணொளி.



 

சுற்றுலாப் பயணிகள் கடளுக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பனி மலை உருகி கடலோடு கலந்து விட்டதை நேரடியாக தங்கள் வீடியோவில் பதிவு செய்திருக்கும் காட்சி இது.

பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கின்றது. பிளாஸ்டிக் உபயோகத்தினை குறைத்து மக்கும் பொருட்களை உபயோகிக்கச் சொல்லி அரசே சொல்லி சொல்லிப் பார்த்தாலும் கேட்பாரெவர்? அதனால் தான் இறைவனே சதிராட்டத்தை தொடங்கி விட்டார்/ன்/ள்.

வீட்டிற்கு ஒரிரு மரங்களாவது வளர்ப்போம்! நம் பங்கிற்கென புவி வெப்பமயமாதலைக் குறைப்போம்.

நன்றி

youtube

செவ்வாய், 22 மே, 2012

மெய் சிலிர்த்திடச் செய்யும் காணொளி..




நன்றி: பகிர்ந்த உறவுகளுக்கு.

கடவுள் கொடுத்த படைப்பை இப்படி தான் கரை சேர்க்க வேண்டுமோ?

இறைவனின் படைப்புகளில் ஒன்றான மனிதப் படைப்பில் இயல்பாய் நடந்திடும் அதிசயங்களை விட இன்னல்களைத் தாங்கி காட்டிடும் அதிசயம் நின்றிடும் நாள் எதுவோ?





நன்றி

வெள்ளி, 11 மே, 2012

ஞானம் வளர்த்த மாமணிகள்..!

சொல் வேந்தர் சுகி. சிவம் அவர்களின் மகான்கள் குறித்த தெளிவு சிந்தனை மிக்க காணொளி..!
பகுதி : 1

பகுதி : 2


பகுதி: 3

பகுதி: 4

நன்றி: பகிர்ந்த உறவிற்கு 

வியாழன், 10 மே, 2012

மனதிற்கு இனிமையான காணொளி.. அருமையான ஒலி வடிவத்துடன்



மனதிற்கு இனிமையான காணொளி அருமையான ஒலி வடிவத்துடன்:

பகுதி 1

பகுதி 2



 நன்றி: http://www.youtube.com/user/vijayadurai?feature=watch




ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

வித்தியாசமான போராட்டம் - காணொளி



ஒரு பேருந்து சாலையில் பழுதடைந்து நிற்கின்றது. அதனை புரட்டி ஒரு தூக்கி எந்திரம் வந்து முயற்சித்து வெற்றி பெறுகின்றது. முடிவாக என்ன நிலைமையினை அடைகின்றது அந்த எந்திரம் என்பதை சொல்லும் காணொளி..

கவனமாய் இருக்க வேண்டுமோ?



ஒரு பெண் தனது செல்லப்பிராணிகளுடன் கடற்கரையிலிருக்கும் பாலத்தின் மேல் உலா வரும் போது பெரிய டால்பின் மீன் வந்து நாயினை அப்படியே தூக்கிச் செல்கின்றது.

கொஞ்சம் உட்கிரகித்துக் கொள்ளுங்கள். - இழப்பு காணொளி





ஒரு சிறுவன் ஆற்று நீருக்குள் அகப்பட்டுக் கொள்கின்றான். அவனைக் காப்பாற்ற சிறு படையே ஆற்றுக் கரையில் நின்று போராடுகின்றது. அதில் இருவர் ஆற்றினில் இறங்கி அவனை வெளியே கொண்டு வரும் காரியத்தினை மேற்கொள்ள முயல்கின்றார்கள். முடிவில் அவ்விருவரோடு சிறுவனும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது பரிதாபத்தின் உச்சம்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

நெஞ்சை நெகிழ வைத்த காணொளி.

அன்போடு வளர்ந்து வரும் தன் அன்பு மகனையே பல வித குண/மன நலன்களோடு பயணித்து வரும் தொடர்வண்டிக்காய் இழக்கின்ற கொடுமையான காணொளி.!
 
இளகிய மனமுடையோர் காணொளியினை காணுதலை தவிர்த்து விடுங்கள்.


தியாகச் செம்மலை என்னவென்பது?


நன்றி: முகநூலில் பகிர்ந்த உறவிற்கு.
              http://avargal-unmaigal.blogspot.com/2011/06/blog-post_21.html

தர்பூசணிக்குள் ஒரு தளிர்..!


சனி, 24 மார்ச், 2012

புதுவை புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள். இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்,
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழ் எங்கள் இளமைக்கு பால்,
தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்! சுடர் தந்த தேன்!
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

இரண்டு குழந்தைகள் செய்யும் சேட்டையைப் பாருங்க...!


மெகாலுக் டிக்கி மட்டும் வாங்கிக் கொடுத்து தோழி பிடித்திட்டானே சிறுவன். அதுவும் சாதகமான பேச்சால்..!