என்னைப் பற்றிய சிறு குறிப்பு..

என்னைப் பற்றி இணைப்பில் சொல்லியிருக்கும் நலன்களே என்னுள்ளும் இருக்கின்றது. மேற்படி சொல்ல வேண்டுமானால் தொலைத்தூரக் கல்வியின் மூலமாக தமிழ் இளங்கலை இலக்கியம் பட்டம் பெற்று சம்பந்தமே இல்லாத துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். 

எது கிடைக்கின்றதோ அது தான் நமக்கு தற்போதைய சமாதானப் பொருள் என்ற கொள்கையிலே காலம் கழித்து வரும் சராசரி மனிதனே. 

கிராமத்தின் வாசனையினை இன்னும் மறந்திறக் கூடாது என்றே என் கிறுக்கல்களிலும் சில பகுதியில் இருந்து வரும் சில வழக்குத்தமிழ்ச் சொற்களை புகுத்திட முயல்கின்றேன்.

என்னை இன்னும் பண்படுத்திக் கொண்டிருக்கும் என் தாய் மன்றமாம் முத்தமிழ் மன்றத்திற்கு என் நன்றிகள் என்றென்றும்....!

நன்றி

4 கருத்துகள்:

  1. உங்கள் படிப்புக்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும்போது உங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது...
    காலம் நிச்சயம் உங்களை மாற்றும்..

    பதிலளிநீக்கு
  2. ”இந்நிலையும் மாறும்” என்ற நீதி எப்போதும் என்னிலை மாறும் நினைத்துக் கொள்ளும் வசனம் நண்பரே!

    ஆதலால் நான் இதனைக் கண்டு கலங்குவது இல்லை. ஆனால் என் எண்ணக் கருத்துகளை தகுந்த இடங்களில் வெளியிடுவேன். அவ்வளவு தான். கருத்திற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.சிவஹரி



    உங்களுடைய வலைப்பூவை சென்று பார்த்தேன் அருமையான படைப்புக்களை படைந்துள்ளிர்கள் என்னதான் செய்வது நீங்கள் இளம்கலை பபட்டம் பெற்று சம்மந்தம் இல்லாத துறையில் வேலை செய்கின்றிர்கள் என்று கூறியுள்ளிர்கள் (இன்னதான் இன்னது என்று இறைவன் எழுதிய எழுத்துப்படிதான் நடக்கும்
    .அதை ஒருபாரமாக பெருட்படுத்தாமல். கையில் கிடைத்ததை கொண்டு வாழ்கையில் பயணிப்போம்.இருந்தாலும் இந்த எழுத்துலகில் ஒரு வெற்றி நடை போடவேண்டும் என்ற சிந்தனைக் கீறல்கள் உங்கள் மனதில் உதித்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எழுத்துலகில் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.

    (என்னுடைய படைப்புகளையும் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம் செய்யுங்கள்
    .ரஞ்ஜனியம்மா.ஆரணிய நிவாஸ் (ஆர்.ஆர்,ஆர்.) இருவரும் என்படைப்புகளை அறிமுகம் செய்தார்கள் அதைய போன்று நீங்களும் அறிமுகம் செய்விர்கள் என்று எதிர்பார்கிறேன்)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.! இது தான் வேண்டுமென்று வறட்டுப் பிடிவாதம் பிடிககாமல் கிடைத்ததைக் கொண்டும், அதே சமயத்தில் கிடைக்க வேண்டியதைக் காணவும் பயணிப்பேன்/ பயணித்தும் கொண்டிருக்கின்றேன்.

      எனக்கு அறிவிப்பு ஏற்கனவே கிட்டி விட்டதால் வலைச்சரத்திற்கான மொத்த பதிவுகளுமே எழுதி நகல் நிலையில் வைத்திருக்கின்றேன். இருப்பினும் இடைப் புகுத்திட முயற்சிக்கின்றேன் சகோ.!

      நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...