சனி, 20 அக்டோபர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 19

 1. உழைப்பின் வேரோ கசப்பு, கனியோ இனிப்பு.
 2. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது. 
 3. கத்தும் பூனை எலிகளைப் பிடிக்காது.
 4. நீரில் மூழ்குபவன் அதன் நுரையைக் கூட பற்றிக் கொள்வான்.
 5. கடன் படாத ஏழ்மை பெரும் செல்வம்.
 6. அறிஞர்கள் கூட்டம் ஒரு உயிருள்ள வாசக சாலை.
 7. அறிவாளியின் ஒரு நாள் முட்டாளின் முழுவாழ்வுக்குச் சமம்.
 8. அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
 9. உள்ளத்தோடு போராடுவதே உயர்ந்த போராட்டம்.
 10. பிரயாணம் செய்யாதவனுக்கு மனிதர்களின் மதிப்பு தெரியாது.

6 கருத்துகள்:

 1. 10 பொன்மொழிகளும் விலை மதிப்பில்லாத முத்துக்கள்

  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே!

   நன்றிகள் பற்பல

   நீக்கு
 2. வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... அசத்துங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்கூட்டிய நல்வாழ்த்துகளை முதன்மையாக தெரிவித்திருக்கும் சகோவின் உளத்திற்கு என் நன்றிகள் பற்பல.!

   என் பொறுப்பின் கடைசி அத்தியாயத்தின் கல்வெட்டிலே தங்களுக்கு என் நன்றியினை தெரிவிக்கும் முகாந்திரம் கிடைத்திருக்கச் செய்திருக்கின்றேன்.

   நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...