வியாழன், 11 அக்டோபர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 18

  1. அவனே இவனே என்பதை விடச் சிவனே என்பது மேல்.
  2. சுட்டாலும் பால் சுவையிலும் குறையாது
  3. அழுதாலும் அந்தஸ்து வேண்டும், சிரித்தாலும் சீர் வேண்டும்.
  4. அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
  5. ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
  6. ஆசையுள்ளவனுக்கு அலைச்சலும் உண்டு.
  7. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.
  8. இல்லாமல் போனாலும் சொல்லாமல் போகாதே!
  9. உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும்.
  10. உயிர் இருக்கும் வரை தைரியத்தைக் கை விடலாமா?

6 கருத்துகள்:

  1. எல்லாப் பொன்மொழியும் ரசிச்சேன். இருந்தாலும் 2ம் 4ம் மனசுல பதிஞ்சுது. ரொம்பப் பிடிச்சிருக்குது. நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான பொன்மொழிகள்... ரசிக்க வைத்தது...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பொன்மொழிகள் அத்தனையும் மிக அருமை....

    1. 2. 4. 10.

    எனக்கு மிகவும் பிடித்தவை....

    மனிதன் மனிதனை கும்பிடாமல் இறைவனை வழிப்பட்டால் இறைவனையே சரண் அடைந்தால் நலம்...

    யார் இகழ்ந்தாலும் நம் தனித்தன்மை என்றும் குறைவதில்லை... நம்முள் இருக்கும் நல்லவைகள் மறைவதில்லை....

    அன்பு உலகில் அனைவரையும் ஒன்றாய் இணைக்கும் பாலம்....அன்பு எனும் ஆயுதம் ரத்தம் சிந்த வைக்காது நேசத்தையே பகிரவைக்கும்..

    மனதின் தைரியம் கண்களில் நிற்கும்.... அந்த தைரியம் தான் வெற்றிக்கு வழியும் வகுக்கும்.... கடைசி மூச்சு இருக்கும் வரை தைரியத்தை கைவிடக்கூடாது என்று சொன்னது அருமை....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி அருமையான பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் தன்மை சுருக்கமாய் இருந்தாலும், கருத்து விரிவாய் பதிலுரை தரும் அக்காவின் கைகளுக்கு ஒரு சல்யூட்.

      தாங்கள் கொடுத்த 1, 2, 4 & 10க்களின் கருத்துகள் என்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே!

      நன்றி அக்கா.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...