சனி, 9 ஜூன், 2012

மஞ்சு அக்காவின் பிறந்த நாளுக்காய்..!

அன்பின் உறவுகளே!

எனதருமை அக்காமார்களில் ஒருவரானாவரும், மழலைச் சிரிப்பினை எப்பொழுது தன்னிலும் தன்னிடத்தே வைத்துக் கொண்டு அனைவரையும் மகிழ்வித்து கவலை மறக்கச் செய்வதில் மூதாட்டிகளையும் மிஞ்சி நிற்கும், அதே சமயத்தில் கோபம் வந்தால் வந்த வேகத்திலே சொர்ணா அக்காவாக உருவெடுக்கும், தலை சிறந்த முத்தமிழ் மன்றத்தின் முத்தான பதிவர்களின் நெஞ்சினில் இன்னும் அன்பையும், பொறுமை குணத்தினையும் விதைத்து வரும் எந்தம் மஞ்சுபாஷிணி அக்கா இன்று தன்னுடைய பிறந்த நாளினை (10/6/****) தன்னுடைய தாய் மண்ணிலே குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..!

அவர்களுக்கு என் சார்பில் மன மகிழ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு என் கிறுக்கலில் விளைந்த ஓர் மணியினை இன்னும் கொஞ்சக் காலத்திற்குள்ளாகவும், கை வரிசை காட்டிய  வரைகலையினை இப்போதே பதிந்து கொள்கின்றேன்.அன்பெனுந் தறியில் அடுக்கிய நூலென்று
         அறுத்திட்ட மாந்தர் அழுகுறி கேட்பினுங்
பின்செல் எம்மனமே பிறருடை யாதெனவே
         நன்செய் காணியி லோர்நட்டிய விதையன்ன
நல்லுள் கொண்டே நடப்பன உற்றுழி!
        ஆயிரஞ் சொல்லிடுங் கடுகடுக்கு மோரிக்கணம்
வெல்லாய் தாயே வீறுகொண்டே நற்சிலையாய்
        எங்காலம் கூட்டியே எழிலோடு வாழ்ந்திடவே
அகிலங் கொண்ட அன்புடை செந்தூரான்
        அருளொடு பரவ அடித்தொழ வேண்டிட்டே!


நன்றி.

4 கருத்துகள்:

 1. சகோ, எனது பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்... சொல் சரி பார்த்தல் பட்டையை நீக்குங்கள் நண்பரே. பின்நனூட்ட்டம் இட தொந்தரவாக உள்ளது...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வாழ்த்திற்கும் என் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கின்றேன். சொல் சரி பார்த்தல் பட்டை நான் நிறுவியிருப்பதாக நான் அறிகிலேன். காரணம் தமிழில் தட்டச்சிடுவதால் சரிபார்த்தல் பட்டை எமது வலைப்பூவில் இருக்காது என்று நினைக்கின்றேன்.

  கொஞ்சம் விளக்குவீர்களாக..

  நன்றி மீண்டும்.

  பதிலளிநீக்கு
 3. அன்பு மனதில் வேறெப்படி கவிதை உருவாகும்? அன்பு மழையினில் நனையவைத்த பாசவரிகள்... வரிகளில் பாசமும் கனிவும் ஒருங்கே நெய்யப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கவிதையை இப்போது தான் காண நேர்ந்தது தம்பி நீ வலைச்சரத்தில் போட்டிருந்ததை பார்த்தப்பின் தான்....

  எனக்கு நினைவிருக்கிறது. அக்கா உங்களுக்கு பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்னு என்னை கேட்டது.... நான் சொன்னதும் நினைவிருக்கிறது. காசு செலவு செய்யாம உன்னிடமிருந்து அன்பாய் கிடைக்கவேண்டும் பரிசு என்று சொன்னேன். என் தம்பியாச்சே... அன்பைத்தானே தருவான். இங்கே அதே அன்பை தான் காண்கிறேண்டா...

  மனம் நிறைந்த சந்தோஷத்தோடு சொல்கிறேன். வாழிய நீ பல கோடி ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாயிருக்கா அக்கா..! ஏதோ ஏழையால் ஆன எள்ளுருண்டை.

   வாழ்த்தியமைக்கு டாங்க்ஸூ அக்கா.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...