வெள்ளி, 1 ஜூன், 2012

வசு அக்காவின் பெற்றோருக்காய்..!

எனது உடன் பிறவா சகோதரி வசுப்ரதா அவர்களின் பெற்றோர் திருவாளர். திருவேங்கடம் - திருமதி. சுலோச்சனா அம்மையார் இன்று தனது பேரக் குழந்தைகளுடன் இனிதே திருமண நாளினைக் கொண்டாடியிருக்கின்றார்கள்..!

அவர்களுக்கு என் சார்பில் இனிய நல்வாழ்த்துகளுடன் கூடிய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு நல்லாசியினையும் வேண்டி நிற்கின்றேன்..

படமும் கவிதையும் விரைவில் அளிக்கின்றேன்.
நகைப்பா ரிவரென்று நசிங்கிட்டுச் சென்றிடா
பகைப்பா ரிவென்று பதுங்கிடா - நகைப்பால்
உளமறி மாந்தர் உறவொன்றைப் பெரிதாய்
அளவறி மாந்தர் அடிப்பொடி யுமேறாய்


திறனோடு குடும்பம் திறம்பட நடாத்தி
அறனொடு மகவுங் அற்புதமா யீந்து
சிறப்பிடச் செயுஞ்சீர்தகைப் பெரியரே
நின்னடித் துளியடைய ருந்தவ மேற்பேனே!

வாழுங் கலையொடு வையமுந் தழைக்க
நாளும் சொல்லிடுங் நற்பொருள் யாவும்
தீஞ்சுவை யெனதெளி வாயு ணர்த்தி
மாபிஞ் சுவாழ்வில் மகிழ்வதனை சேர்
நன்னாள் தன்னிலே நல்லுள் வாழ்த்தியே!நன்றியுடன்,
சிவஹரி

2 கருத்துகள்:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது சிவா கவிதை. அம்மாவிற்கு படித்துக்காட்டினேன் மிகவும் சந்தோஷப்பட்டார். உன் அன்பு கவிதை வழியே வழி சொல்லியது பல நல்ல விஷயங்களை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...