சனி, 28 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 7


1.      ஒரு நகரத்தின் வாலாயிருப்பதை விட ஒரு கிராமத்தின் தலையாயிருப்பது மேல்.
2.      வியாபாரம் சில சமயங்களில் தாயாயிருக்கும்; சில சமயங்களில் மாற்றாந்தாயாய் இருக்கும்.
3.      ஆயிரம் எதிரிகளை விட ஒரு போலி நண்பனால் தான் அதிகத் தீமை.
4.      பொன்னில் இழப்பதை விட தவிட்டில் ஆதாயம் தேடு.
5.      கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கின்றவன் கௌரவம் இல்லாமல் சாவான்.
6.      செல்வம் என்பது பணம் மட்டுமல்ல
7.      உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப் பற்றியும் வம்பளப்பான்.
8.      உன் அன்பை மனைவியிடம் காட்டு; உன் இரக்கத்தை தாயிடம் காட்டு.
9.      சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன.
10.     தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவிகளில் மூன்றில் ஒரு பங்கு.

2 கருத்துகள்:

  1. அருமையான அவசியம் மனதில்
    பதிந்து கொள்ளவேண்டிய பழமொழிகள்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி சகோ!

      தினசரி நாட்காட்டியில் இருந்ததை தட்டச்சிட்டதே! மேலும் தரவுகள் தேடி முயற்சிக்கிறேன்.


      நன்றி

      நீக்கு