1. தன்னை வெல்ல முடிந்தவனே மிகப் பெரிய வீரன்.
2. ஆசையுள்ளவரை வேதனையும் கூடவே இருக்கும்.
3. ரோஜப்பூ முள் செடியில் தான் வளரும்.
4. திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கமுடியாத பாவங்கள்.
5. நீ நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய்; நாளையே இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய்.
6. தொடர்ந்து மூன்று நாட்கள் பசிந்திருந்தால் ஒரு மனிதன் திருடவும் துணிவான்.
7. நல்லவனுக்கு உலகம் முழுவதும் நல்லது.
8. கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறார். ஆனால் அவர் அதை கூட்டில் வீசுவதில்லை.
9. ஊர் கூடி தேர் இழுக்கலாம். ஆனால் ஊர் கூடி செக்கிழுக்க முடியாது.
10. புலியைப் பிடிக்க வேண்டுமானல் முதலில் நீ மலைப்பக்கம் போக வேண்டும்.
அருமையான பழமொழிகளை தொகுத்து தந்தமைக்கு
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றி
குறிப்பாக பறவைக்கு உணவு
மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கருத்திட்டமைக்கு நன்றி..
பதிலளிநீக்குஇன்னும் சிறிதளவு தரவுகள் இருக்கின்றன. அதனையும் விரைவில் சேர்த்திடுவேன்.