திங்கள், 6 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 9

  1. பெண்ணென்று பிறந்த போதே புருசன் பிறந்திருப்பான்.
  2. கவலையானது சொறிய சொறிய மேலும் மோசமாகும் சிரங்கு போன்றது.
  3. பொறுத்தார் பூமி ஆள்வார். பொங்கினவர் காடாள்வார்.
  4. பிரியமான வேலை எதுவும் கஷ்டமானது அல்ல.
  5. நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சின் ஆழம் காண முடியாது.
  6. தேளுக்கு மணியங் கொடுத்தால் நிமிசத்திற்கு நிமிசம் கொட்டும்.
  7. நின்றால் நெடுஞ்சுவர். கிடந்தால் குட்டிச் சுவர்.
  8. நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை
  9. நதி வளைந்தோடினும் கடமை தவறாது.
  10. தாழ்ந்து நின்றால் உயர்ந்து நிற்பாய்.

5 கருத்துகள்:

  1. படித்த பொன்மொழிகள் எங்களுக்கு
    பிடித்த பொன்மொழிகளாகவும் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி சகோ.!

      சில நாட்களுக்கு முன்னர் தான் என் வலைப்பூவினை மேலோட்டமாகப் பார்த்த என் தமக்கையார் மஞ்சுபாஷிணி தங்களைப் பற்றியும் கூறினார்கள்.. தங்களின் கருத்து கண்டும் இங்கே மட்டற்ற மகிழ்வு!

      மூன்று நாட்காட்டியில் வந்த பொன்மொழிகளின் தொகுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரியே இருந்ததால் பதிவுகள் மேலும் நீட்டிக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

      தொடரவும் முயற்சிக்கின்றேன்.

      நன்றி மீண்டும்..

      நீக்கு
  2. எந்தப் பொன்மொழியும், பழமொழியும் சில காலம் தான் தாக்குப் பிடிக்க முடியும்.

    1. பெண்ணென்று பிறக்கும் போதே புருசன் பிறந்திருப்பான் -
    நம்ம ஊர் ராதிகாவுக்கு எப்படி?

    4. பிரியமான வேலை எதுவும் கஷ்டமானது அல்ல.- எனக்குப் பிடித்தமான வேலை ஒண்ணும் செய்யாமல் இருக்குறது தான். என்ன செய்வது, முடிய வில்லையே.. வுட மாட்டெங்குறாங்களே?

    8. நதி வளைந்து ஓடினாலும் கடமை தவறாது - அது சரி. தண்ணியே இல்லாத போது கடமை என்ன வாழுது?

    10.தாழ்ந்து நின்றால் உயர்ந்து நிற்பாய் -
    ஒரு சமீப கால உதாரணம் சொல்லுங்களேன் பார்க்கலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி சகோ.

      தாங்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் கடமைப்பட்டிருக்கின்றேன். அதற்குண்டான காலம் தற்போது என் கையில் இல்லை. இன்றைக்குள் பதிலளித்திடுவேன்.

      நன்றி மீண்டும்,

      நீக்கு
    2. 1) தாங்கள் நடிகை ராதிகா அவர்களைத்தான் கேட்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆகவே தங்கள் கேட்ட கேள்விக்கு அனுமானத்திலே தான் பதில் சொல்ல முடியும்.

      பெண்ணென்று பிறக்கும் போதே புருசன் பிறந்திருப்பான் :> பழமொழியினை சற்று கூர்ந்து கவனியுங்களேன். பெண் ஒன்று அல்ல, பெண் என்று தான் இருக்கின்றது. பெண் ஒன்று என்றிருந்திருந்தால் தாங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் பொதுப்படையாக பதிலளித்திருக்க இயலாது.

      4)பிரியமான வேலை எதுவும் கஷ்டமானது அல்ல:> தங்களுக்குப் பிரியமான வேலை ஒண்ணுமே செய்யாமல் இருப்பது தான். தங்களுக்குப் ப்ரியமான வேலை தங்களுக்கு கடினமானது இல்லை தானே! தன்னிலை மட்டுமே இப்பொன்மொழிக்கு காண உகந்தது என்பதையும் ஈண்டு நோக்குக.

      8)நதி வளைந்து ஓடினாலும் கடமை தவறாது :> தெளிவான பொன்மொழியாகத்தான் நான் உணர்கின்றேன். நதி என்பது வளைந்து நெளிந்து ஓடினாலும் அதன் கடமையாகிய பிற உயிர்களுக்கு பல்வேறு முறையில் உணவளித்தல், தாகம் தீர்த்தல், விவசாயத்தினை செழுமைப்படுத்திடுதல், முடிவில் இறைவனோடு ஐயமறக் கலக்கும் மனித ஆன்மா போல கடலோடு கலந்திடல் என்ற தன்னுடைய கடமையைத் தவறாமல் செய்திடும் என்பதே பொருள்.. தண்ணியே இல்லாத பொழுது நதி என்று எதனை அழைக்க இயலும்? அது நதி வந்த இடம் அல்லது நீரோடை என்ற பெயர்களுக்கு உள்ளாகி விடுமே.

      10)தாழ்ந்து நின்றால் உயர்ந்து நிற்பாய் :> அடக்கமிருந்தால் அகிலத்தை வெல்லலாம் என்பதே இதன் பொருள். சமீபகால உதாரணம் என்ற வகையில் முன்னாள் பாரதப் பிரதமர் மேதகு அப்துல் கலாம் அவர்களே! அவர்களின் வாழ்க்கைத் தடத்தினை தேடிடுங்கள்.. பதில் தெளி(ரி)யலாம்.

      மேலே கூறியிருப்பது ஒரு வகையான பதிலளிக்கும் முறை

      மற்றொரு முறை:
      http://www.youtube.com/watch?v=dXK9lvKO2dM

      மேலிருக்கும் இணைப்பினைச் சொடுக்கிக் கேட்டீர்களெனில் சரியாக 12:52 நிமிடத்திலிருந்து 13:16 நிமிடங்கள் வரை சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளே தாங்களின் முழுக்கேள்விக்கும் பதிலாகத் தந்திருப்பேன்.

      கூடுதலாக முழு விபரம் அறிய 12:02 முதல் 15:22 வரைக் கேட்கும் போதும் தெரிந்து கொள்ள இயலும்.

      தங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பேன் என்ற நம்பிக்கையில்..


      நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...