புதன், 22 ஆகஸ்ட், 2012

நெஞ்சிற்கோர் தூது!


ஊர்க்குருவி பறந்திடு உண்மைதனை சொல்லிவர
பாரினில் காணொரு பச்சிளங் குணவதி
தேரெடுத்து வந்திட்டே தினைக்கதிரும் தந்திட்டே
ஆயொப்பர் நல்கிடவே ஆசைமணம் புரிவோமே
மார்பிலே தரித்தெடுத்த மாருதியை வென்றெடுத்து
நீரொழுகும் வைகையன்ன நித்தமுங் கூடிட
பரியாய் வருபொழுது பகர்வாய்
சிறகொடு அன்பொழு சிற்றினப் புள்ளினமே


படம்: rami-loveallsaveall.blogspot.com

கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

3 கருத்துகள்:

 1. தூது செய்தி கேட்டதும்
  காதலுக்காக மட்டுமல்லாது
  இந்த அழகிய கவிதைக்காகவது
  மன்னவன் பற்ந்து நிச்சயம் வரவே செய்வான
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஊக்க வரிகளுக்கு என்னுடைய நன்றிகள் பற்பல சகோ.!

   ஊர்க்குருவி, மன்னவன் பரியின் வேகங்கொண்டு விரைந்து வந்திடுவான் என்று சொல்லிடும் என்று நம்பிடுவோம் :)


   நன்றி மீண்டும்,

   நீக்கு
 2. ponga sir ada ponga sir ada ponga sir ada ponga sir

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...