வியாழன், 5 ஏப்ரல், 2012

மகவுடன் தாய் ~ மகிழ்ந்தாய்Two-year old child Vaishnavi offering food to her mother Sangeeta, during the second National Convention on 'Children's Right to Food' in Bhopal on Friday. Sangeeta, a construction labour, lost both her hands in an accident during construction of a building at Multai township in Madhya Pradesh in 2001. — A.M. Faruqui

(This article was published in the Business Line print edition dated January 21, 2012)


நன்றி : முகநூலில் பகிர்ந்த நண்பருக்கும், வழி காட்டிய வசுப்ரதா அக்காவிற்கும்.கவிதை நிச்சயம் இப்பதிவினை திருத்தி வரைவேன்.

இதோ கவிதை:

உடல்தந்து   யிர்தந்து  ஒருமனதாய்  தனையிழந்து
நடைநடையாய்   என்னுதையுங் தாங்கிட்டே!  சிறுசெடி
சுமைந்திட்ட  கனியுபெரும ரமுமேந்திட் டநல்விதையாய்
சுற்றிவந்தீரே! ஈரைந்து மாதமும் இடர்வரினும் தாங்கிட்டே
இட்டபணி குறையென இறக்கியும் வைக்காதாண் டுபல
கடந்திட்டும் அரிபொருளாய் யனை நோக்குமன்னையே!

சிற்றெரும்பு வந்தாலும் சிறுயானை வந்ததென அலறி
குற்றமோடு குறைகண்டு கொடுப்பாய் அதற்குமன்னம்
சிறப்பாய் நானுறங்க சிதறிட்ட உன்தூக்கம் கொடுப்பேன்
பொறுப்பாய் ஏற்றந் தருமொரு வழியினிலே.

ஆட்டமென நிற்காது அடுத்தடுத்தும் தொடர்ந்திட்டே
வாட்டமுற்ற உன் மனதை வலிமைகொண்டு தூக்கிடவே
வீற்றிருக்கும் வேழமுகன் வெற்றிகனி தந்திடுவான்
நாற்றம்கொள் நம்வாழ்வும் நலமுடன் மலர்ந்திடுமே;
அத்தருணம் வந்துவிடும் அதுவரையென கொள்ளாது
எத்தருணமும் எழிலோடு உனக்கு ஊட்டுவேனே!

4 கருத்துகள்:

 1. எதிர்காலம் கண்டிப்பாக அன்பின் வழியாய் மலரும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்த படமே அதற்கு சாட்சியாய்....

  பதிலளிநீக்கு
 2. நிதர்சனமான உண்மையே அக்கா.

  நன்றி

  பதிலளிநீக்கு
 3. தாய் பாசத்தை உணர்ந்த கவிதை. நன்றாக இருக்கிறது சிவா!

  பதிலளிநீக்கு
 4. கருத்தோடு சேர்த்து கவிதை பகுத்தமைக்கு மிக்க நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...