வெள்ளி, 12 அக்டோபர், 2012
வியாழன், 11 அக்டோபர், 2012
படித்த சில பொன்மொழிகள் - 18
- அவனே இவனே என்பதை விடச் சிவனே என்பது மேல்.
- சுட்டாலும் பால் சுவையிலும் குறையாது
- அழுதாலும் அந்தஸ்து வேண்டும், சிரித்தாலும் சீர் வேண்டும்.
- அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
- ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
- ஆசையுள்ளவனுக்கு அலைச்சலும் உண்டு.
- இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.
- இல்லாமல் போனாலும் சொல்லாமல் போகாதே!
- உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும்.
- உயிர் இருக்கும் வரை தைரியத்தைக் கை விடலாமா?
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
வியாழன், 4 அக்டோபர், 2012
புதன், 3 அக்டோபர், 2012
மனமொடு வாழியவே!
அன்று,
தேனொடு புரளும் தெள்ளுதமிழ் குறத்திவழி
ஊனொடு மெய்யாய் உரைத்தாளே; அறிமின்
பாரொடு நீயொழுக பாவைதனைத் தேடிட்டே
ஆறுகடல் தாண்டி அகிலமதின் கடைசேர
நாலாறு வயதினில் நங்கை பொறுக்கி
ஊர்கூட்டி மாலைசூட உலகமுங் வென்றேன்
அந்திவானங் கறுக்க அழகிலாடு மஞ்ஞையன்ன
அருந்தளிர் நடைகண்டே அகிலந்தனை வென்றோமடி
எங்குலத்தான் மொழிதனையே இசையின் உச்சமென
சங்கெடுத்து ஊதினோம் சலிப்பிலா நத்தையாய்
இன்று,
பெற்ற பிள்ளையவன் பெருங்கடன் கொண்டானென
உற்ற துணையவள் ஒதுக்கிட்டாள் நம்மையுமே
கற்ற தொழிலொடு காலமுங் கரைந்திடவோர்
சுற்ற முருவமாய் சுழன்றதே நம்வாழ்வு
காய்ந்த வயிறும் களைத்திட்ட நடையும்
ஓய்ந்தோ டிடுநாளும் உளதே நமக்கு
ஆவொடு மகவு அருந்திடும் பாலொப்ப
நாமொடு வாழ்வும் நலமுடன் வளர
தாயொடு சேயாய் தன்மடி அணைத்தேனே
என்றும்
சிறப்புருஞ் செல்வம் சீர்கொண்ட மனதே
சிற்றறிவோர் கெட்டுதலு மிலதே - பிறப்பொடு
இறப்பும் பெருந்துயர் அடைப்பின் மறப்போர்
வீரன் மகிழ்ந்தேற் பானவ னென்னாளுமே!
தேனொடு புரளும் தெள்ளுதமிழ் குறத்திவழி
ஊனொடு மெய்யாய் உரைத்தாளே; அறிமின்
பாரொடு நீயொழுக பாவைதனைத் தேடிட்டே
ஆறுகடல் தாண்டி அகிலமதின் கடைசேர
நாலாறு வயதினில் நங்கை பொறுக்கி
ஊர்கூட்டி மாலைசூட உலகமுங் வென்றேன்
அந்திவானங் கறுக்க அழகிலாடு மஞ்ஞையன்ன
அருந்தளிர் நடைகண்டே அகிலந்தனை வென்றோமடி
எங்குலத்தான் மொழிதனையே இசையின் உச்சமென
சங்கெடுத்து ஊதினோம் சலிப்பிலா நத்தையாய்
இன்று,
பெற்ற பிள்ளையவன் பெருங்கடன் கொண்டானென
உற்ற துணையவள் ஒதுக்கிட்டாள் நம்மையுமே
கற்ற தொழிலொடு காலமுங் கரைந்திடவோர்
சுற்ற முருவமாய் சுழன்றதே நம்வாழ்வு
காய்ந்த வயிறும் களைத்திட்ட நடையும்
ஓய்ந்தோ டிடுநாளும் உளதே நமக்கு
ஆவொடு மகவு அருந்திடும் பாலொப்ப
நாமொடு வாழ்வும் நலமுடன் வளர
தாயொடு சேயாய் தன்மடி அணைத்தேனே
என்றும்
சிறப்புருஞ் செல்வம் சீர்கொண்ட மனதே
சிற்றறிவோர் கெட்டுதலு மிலதே - பிறப்பொடு
இறப்பும் பெருந்துயர் அடைப்பின் மறப்போர்
வீரன் மகிழ்ந்தேற் பானவ னென்னாளுமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



