வியாழன், 25 அக்டோபர், 2012

வலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும் எதிர்பார்ப்பும்

எதார்த்தமும் எதிர்பார்ப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.  ஆனால் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டே இருப்பதில்லை. ஒருவரின் எதிர்பார்ப்பு வெற்றியடைந்தால் மனம் கொள்ளும் உவகையை எதார்த்தத்தின் போது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது என்னுடைய கருத்து. 

பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி விட்டு பெரியோர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து வீண் கதைகள் பேசிக் கொண்டும்,  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், பிள்ளைகளின் மீது அவர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு ஒரு வேளை கருதிய பயனைத் தராது எதார்த்தமான பயனைத் தந்திடும் போது நம் மனம் கலங்குவதோடு, “ஒரு அரை மணித்துளிகள் குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்தியிருக்கலாமே” என்று எண்ணிடத் தோன்றும்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் எதார்தத்தின் விளைவையும், எதிர்பார்ப்பின் இலக்கையும் இறைவன் வசமே அர்ப்பணித்து விட்டால் என்றும் நலமே. இவ்வேளையில் ஸ்ரீமந் நாராயணனின் ஏழு மலைகள் குறித்து அறிந்திடுவோமாக.

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும்.

நாராயணன் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு மலைகள் அடங்கியுள்ளன. 


 அவை சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகியவை. திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளது.

சேஷாத்ரி: ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் ஒரு சமயம் சண்டை ஏற்பட்டது. அதில் ஆதிசேஷன் வெற்றி பெற்றான். அவனுக்கு கர்வம் ஏற்பட்டது. தான் இல்லாவிட்டால் பகவானுக்கு படுக்கை ஏது? தூக்கம் ஏது? என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த கர்வம் அடங்கிய பின் பகவானிடம் தன் தவறை ஒப்புக்கொண்டான். கர்வத்தை விட்ட ஆதிசேஷன் பெயரால் சேஷாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

அஞ்சனாத்ரி: அஞ்சனாதேவி அனுமாரின் தாயார். அவள் திருப்பதியிலுள்ள ஆகாச கங்கையில் நீராடி தவமிருந்து ஆஞ்சநேயரை பிள்ளையாக அடைந்தாள். அவள் பெயரிலேயே அஞ்சனாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

நாராயணாத்ரி: நாராயண முனிவர் என்பவர் பிரம்மாவின் யோசனைப்படி இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து தவமியற்றினார். விஷ்ணு பிரத்யட்சமாகி வேண்டிய வரம் கேட்டபோது அவர் "உலகிலுள்ளவர்கள் வருத்தம் தரும் யோக மார்க்கத்திலிருந்து உன்னைக் காண சக்தி இல்லாதவர்கள். ஆதலால் தாங்கள் எவ்வுயிருக்கும் அருள் சுரந்து காட்சி அளிக்க அகலாது இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டும்'' என்று கோரினார். 


பகவானும் அதற்கு இசைந்தார். இந்த இடத்திற்கு "நாராயணாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது. பகவானே இந்த இடத்தில் தானே வந்து கோயில் கொண்டதால் இது ஸ்வயம்வக்த ஷேத்திரமாகும்.

விருஷபாத்ரி: விருஷபன் என்று ஒரு அரசன். அவன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தான். திருமால் பிரத்யட்சமானார். "உன்னை எல்லாரும் பொல்லா சுவாமி என்கிறார்களே. உன்னோடு போர் புரிய ஆசை. அந்த வரம் தா'' என்றான். இந்த வரம் காரணமாக போர் நடந்தது. 


ஏழுமலையானின் நாமமே அவனை பயமுறுத்திவிட்டது. அவர் சக்கரத்தை எடுத்தவுடன், "சுவாமி நீ பொல்லாத சுவாமிதான். என் பெயரால் இம்மலையின் பெயர் ஏற்பட வரம் அருள்'' என்றான். இதனால் விருஷபாசலம் என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது. இதுவே விருஷபாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கருடாத்ரி: கருடனையும் ஞாபகப்படுத்தும்படி கருடாசலம் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. நாராயணனுடைய மலையானதால் நாராயணாத்ரி. 


திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயருண்டு. ஆகவே ஸ்ரீநிவாஸாத்ரி. இம்மலை கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கும் என்று நம்பி "சிந்தாமணிகிரி' என்றும் அழைக்கிறார்கள்.

வேங்கடாத்ரி: திருமலையில் ஏறியதுமே பாவங்கள் பஸ்பமாகி விடுகின்றன. "வே' என்றால் பாவங்கள். "கட' என்றால் கொளுத்தப்படுதல் என்று பொருள். இப்படி பாவங்களைப் போக்குவதால் வேங்கடாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

நீலாத்ரி: நீலன் என்ற வானர வீரன் தவம் செய்த மலை. எனவே இம்மலைக்கு நீலாத்ரி என்ற பெயர் அமைந்தது.

நன்றி: தினமணி இதழ்

சரி, வாருங்கள் உறவுகளே இன்று நாம் காணவிருக்கும் வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.

இலக்கியச் சுவை கொண்ட இவ்வலைப்பூவில் சிற்றில் கட்டி சிறு சோறு சமைத்து விளையாடும் விளையாட்டைப் பற்றி சுவைபட தந்திருக்கின்றார்கள்.  கிராமங்களில் இது போல கூட்டாஞ்சோறு பழக்கம் இன்னும் சிறுமிகளிடம் இருக்கின்றது என்பது கூடுதலான சுவைகொண்ட தகவல்.

விளையாட்டு

 
இலக்கணமா?இலக்கியமா? என்ற கட்டுரையில் இலக்கியத்திலும் சமுதாயச் சாடல் இருப்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். 


சென்னைத்தமிழில் குட்டிச்சுவர் குட்டி குரூப் என்ற தலைப்பிலே நகைச்சுவைப் பேட்டியும் காணுங்களேன். 


 இலங்கைத் தமிழ் பாடும் குயில் கனடாவிலிருந்து தாயகம் சார்பாய் ஒலிக்கின்றது. காதல் கவிதையில் தாய்மையோடு தாய்நாட்டினையும் நேசித்து வடித்திருக்கும் வரிகள் நினைவை விட்டகலாதவை.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பில் இல்லாது போன ஈர இதயங்களைத் தட்டி எழுப்பிடும் வரிகளாய் என் இனிய பனை மரங்களே!  ஒளிர்கின்றது.


உளமார்ந்த நட்பினை எடுத்துரைக்கின்றது நம்மோடு நட்பு எனும் கவிதை.




இந்த வலைப்பூவில் முதியோர்களைப் பற்றிய கதைகளும் கட்டுரைகளும், படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

யாளிகள்….. வண்ணதாசனின் சிறுகதை
இப்படிக்கு உன் அம்மா
கடவுளுடன் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரனின் கவிதை 






ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லத்தினைத் தாண்டி நான் மெல்லப் பயணிக்கும் போது கண்ணபிரானின் கீர்த்தனைகள் பாடல்களாய் நாம் மனதில் வந்து விழுகின்றன. 

அவை எங்கே என்று பார்த்தால் ஒரு குழுமமாய் அமைந்து பாடல் வரிகளை நமக்கு ஒலி, ஒளி, அச்சு வடிவிலே தருகின்றார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமாக,
இச்சுவை தவிர யான் போய்....

இங்கு சினிமா பாடலொன்றை ஆராய்ந்து முடிவு வெளியிட்டிருக்கின்றார்கள் பாருங்களேன்
சிநேகிதியே(லேடீஸ் ஒன்லி): ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?


விஷமக்காரக் கண்ணன் பாடலின் தலைப்பே நமக்கு புரிந்திருக்கும் சேட்டைக்கார கண்ணனின் லீலைகளைத் தான் எடுத்துரைக்கின்றதென்று.


யோகா பயிற்சி குறித்தும், மனவளப் பயிற்சி குறித்தும், பங்குவர்த்தகம் செய்து பலனடைய வழிமுறைகள் குறித்தும் பல பயனுள்ள பதிவுகள் இத்தளத்தில் அடங்கியுள்ளன.

படித்துப் பயன்பெறலாமே!

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி 


பயில்வோம் பங்குச்சந்தை – 1 


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1



சக்தியை தேடி சக்தியோடு குரல் கொடுக்கும் வாழ்க்கை! கவிதைக்கான வலைப்பூ "குரல், என்று வலைப்பூ ஆசிரியர் நம்மை குரல் வலைப்பூவிற்கு இனிய வரவேற்பினை அளிக்கின்றார்கள்.

பூக்கள் விற்பனைக்குத்தான்
சருகு ஒன்று மலர் தொடுத்துக் கொண்டிருக்கின்றது”  

-  இந்த ஹைக்கூ வரிகளைப் படிக்கும் போது எத்தனையோ விதமான எண்ணங்கள் நம்மில் எழும். அதனை மறுக்கவும் இயலாது. 

அத்தகைய கவிதை மாமலையில் நானும் படித்தனவற்றை தங்களின் பார்வைக்காவும் வைக்க விரும்புகின்றேன்.
கனவின் சிறகுகள்


சருகு படர்ந்த கூடுகள்


உன்னோடு போனது துக்கம்


அம்மாவும் கைபேசியும்


நான் எழுத்துகளில் இருக்கின்றேன் என்று நம்மோடு எழுத்தின் வழியே அறிமுகமாகும் சுந்தர்ஜி அவர்களின் கைகளில் அள்ளிய நீரில் நாமும் கொஞ்சம் பருகிடுவோமே! 


நகரவாசியின் தனிமை கவிதை வழியே இன்பத்தேன் பாய்ச்சிய சுந்தர்ஜி காய்ந்த குருதி.காயாத சுடர். கட்டுரையில் இதயத்தினை கலங்கடிக்கச் செய்கின்றார். எப்படியோ நம்மை சிரிக்காமல் இருக்க இங்கே சவாலாய் கதையொன்றையும் படிக்கச் சொல்லுகின்றார் என்றால் பாருங்களேன்.! சிரிக்காமல் படிங்க பாப்போம்- ஒரு சவால்!


கவிதை, கட்டுரை, கதை என தூரிகைச் சிதறல்களாய் நம் மனத்தின் மீது எழுத்துகளால் சிதறும் கவிக்காயத்ரி அவர்களின் வலைப்பூவிற்குள் நுழைந்து தான் பார்ப்போமே. வாருங்கள் உறவுகளே!

கருத்த மச்சானை தூக்கத்திலிருந்து எழுப்பும் வரிகளைப் படிக்கும் போது திருப்பாவை நினைவிற்கு வருகின்றதெனக்கு. அத்தோடு சின்ன சின்ன ஆசை - 2 ில் நாம் ரோஜா திரைப்படப் பாடலை மறந்தே விடுவோம். 

உணவும், உணர்வும்.... கட்டுரையில் தமிழ் நாட்டில் ஒரு உணவு விடுதி உரிமையாளர் அனைத்து ஊழியர்களுமே சாப்பிட்ட பின்னர் தான் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றராம்.. 

கேட்கவே எவ்வளவு இனிமையானதொரு செய்தியாக இருக்கின்றது. இத்தனை உயரிய மனம் எல்லோருக்கும் வருமென்று எதிர்பார்ப்பது எதுமாதிரியான பலன் என்று நீங்களே அப்பதிவின் கருத்தில் சொல்லிடுங்களேன்.
தூரிகை தந்த தூறலை சுவாசித்துக் கொண்டிருக்கும் போதே அகல்விளக்கு வலைத்தளம் நம்மை இனிய நற்றமிழோடு கவிதை, கதை, கட்டுரை மற்றும் அனுபவங்களின் மூலம் வரவேற்கின்றார்கள்.

செவிக்கு விருந்தளிக்க அழைத்திடும் போது அங்கே செல்லாமல் இருப்பது தமிழரின் மரபல்லவே. ஆதலின் நாம் சென்று செவியுணவு பருகிடுவோம். வாருங்களேன்.

உள்ளே நுழைந்த வேகத்திலேயே எப்போது... நம் காதல் மலர்ந்தது என்று ஆராய்ச்சிக் கவிதையொன்றை வடித்து தருகின்றார்கள். சரி வடி கட்டி குடித்து விட்டு அடக்கமுடியாத சிரிப்புடன் நமக்கு அப்பாவான கதை யை படிக்க தருகின்றார். நாமும் கதை தானே என்று படித்தால் அது அனுபவம் என்று நம்மிடமே சொல்லிச் சிரிக்கின்றார்கள். நல்ல கூத்து தான்.


விழுகின்ற மழைத்துளியில் ஒரு துளியையேனும் உள்ளங்கைகளில் சேர்த்து வைக்க முயலும்/துணியும் இளங்கோ அவர்களின் வலைப்பூவிற்குள் நாம் நுழைந்து தேன் பருகிடுவோம்.

ஓர் இளம் விஞ்ஞானி
இளம் விஞ்ஞானியான பாலாஜியின் கண்டுபிடிப்பு குறித்து நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள்.

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி அவர்களுடன் சந்திப்பினை நமக்கு கட்டுரை வழியில் தருகின்றார்கள்.


இப்போதெல்லாம் சிலை திருட்டு சர்வசாதாரணமாக நடக்கின்றது. அதனை ஹைக்கூ வரிகள் நம்மிடம் காப்பாத்திக்கோ என்ற பதிவில் சொல்லியிருக்கின்றார்கள்.


சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதையான நீ, நான், நேசம் கடித வடிவிலே ஒரு கதையினை நமக்களித்திருக்கின்றார்கள்.

திகில் கதையாய் பூமராங்கினை நமக்கு பிக்கத் ந்திரக்கின்றார்கள். பாதி படித்த மாத்திரத்திலே பயம் தொற்றிக் கொண்டது. தைரியமாய் படிப்பீங்க தானே நீங்க. 
இனியவராய், இயல்பானவராய், இதயசுத்தியுடன் குருவருளை நாடி வாழ்கின்றவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழி அவர்களின் சித்தர்கள் இராச்சியம் வலைப்பூவினில் சித்தர்கள் குறித்த தகவல்களும், சித்தர்கள் பாடல்களும், ஆசனங்களும், சித்த மருத்துவ முறைகளும் பொதிந்து கிடக்கின்றன.

 ஆங்கில மருத்துவமானது உலகில் வீறு நடை போட்டு சென்று கொண்டிருப்பதால் சித்தமருத்துவத்தின் உண்மையான பலன் என்னவென்று நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

திரிகடுகம் என்று சொல்லப்படும் சுக்குமி ளகுதி ப்பிலி மூலங்களான மருந்து பொருட்களின் பயன் குறித்து திறன்பட சொல்லியிருக்கின்றார்கள்.

ஆசனங்கள் வழியிலே அகத்தியர் அருளிய கோமுகாசனம், சவாசனம் குறித்த தகவல்களும் நமக்கு அளித்திருக்கின்றார்கள். பயன்மிகு இத்தளத்தில் கருத்துகளைப் படித்து நாமும் பயன்பெறுவோமாக.


சே.அரசன் அவர்களின் எண்ணத்தூறல்களின் சங்கம்மான கரை சேரா அலைகள் வலைப்பூவினில் நுழைந்திருக்கின்றோம். என் மொழிகள் # 1 கொண்டு நம்மை வரவேற்கின்றார்கள்.

அப்படியே உருக்கமான காதல் கதை ஒரு முறையாவது படித்து விடுங்களேன். அத்தோடு ஓராயிரம் இடிகளைப் படித்திடும் போது நெஞ்சில் ஒரு வித உணர்வலைகளை எழுத்துகள் தோற்றுவிக்க வல்லவை என்பதை நிரூபணம் செய்து விடுகின்றது.


அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தினை ஒரு முறை சந்திப்பது நல்லது என்ற தாரகமந்திரம் கொண்டு வலைப்பூவினை வடிவமைத்திருக்கும் சகோ எழில் அவர்கள் பெரியாரின் சிந்தனைத் துளிகளில் நம்மை கரைய வைக்கின்றார்கள்.

சில துளிகளைப் பார்வையிடுவோமே!

பெரியாரின் சிந்தனைத் துளிகள் -5

பெரியாரின் சிந்தனைத் துளிகள் -4

சூழல் காப்போம் -5 சூரிய ஒளியில் மின்னாற்றல் உற்பத்தி செய்து சூழலைக் காக்க வழிமுறைகளை எடுத்துரைக்கின்றார்கள்.

வாழ்வின் தேடல்-1 பதிவில் வாழ்வின் உள்ளார்த்தமான நிலையை விளக்கியிருக்கின்றார்கள். 



இன்றைய பதிவானது ஆன்மீகத்தில் தொடங்கி பகுத்தறிவாதியின் சிந்தனைத் துளிகளில் ஊறி முடிந்திருக்கின்றது. மேலும் பல சிந்தனைச் சிதறல்களை அடுத்த பதிவினில் காண்போம்.

நன்றி



சில கட்டாய காரணங்களால் நாளையோடு என் வலைச்சர பதிவுகள் நிறுத்தத்தைக் கண்டு கொள்ளும்.

அதனின் காரணமாக இன்று கூடுதலாக ஒரு பதிவினைத் தந்து என் இலக்கினை அடைய முயற்சித்திருக்கின்றேன். 

ஒத்துழைப்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி

வலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அருந்ததி

ஏழு என்பது வேத மரபில் முக்கியமான எண்ணாகக் கருதப்படுகின்றது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று வேதம் அறிந்தோர் விளக்குகின்றார்கள். 

ஒரு கால கட்டத்தில் பூமியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழு முனிவர்களான அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் ஆகியோர் தான் வானில் ஏழு நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றார்கள் என்றும் படைப்புகள் தெரியப்படுத்துகின்றன.



கீற்று இணையத்தின் வழியே பெறப்பட்ட மேலே இணைத்திருக்கும் படத்தின் வழி திருமணத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கினைப் பற்றி அறிந்து கொள்வோமே!

இன்றைய கால கட்டத்தில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய அளவில் நடத்திடுவதே கௌரவம் என்று நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் பார்ப்பனச் சடங்குகளின் படி நடைபெறும் திருமணங்களில் குறிப்பிடத்தக்கதொரு சடங்கு ”அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”.


படத்தில் காட்டப்பட்டிருக்கும் நட்சத்திர தொகுப்பினில் ஆறாவதாய் இருப்பவரே வசிட்ட மாமுனி. அவரோடு சேர்ந்திருப்பது அவரது மனைவி அருந்ததி. மற்ற முனிவர்கள் எல்லாம் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வனதேவதைகளின் பால் மயங்கியதாகவும், அதே போல் மற்ற முனிவர்களின் மனைவியர் தேவேந்திரனின் அழகில் மயங்கியதாகவும் சரித்திரக் கதைகள் நமக்கு தெரிவிக்கின்றன. 

ஆனால் வசிட்ட மாமுனியும், அவரது மனைவியுமான அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். என்றுமே இணைந்தே இருப்பவர்கள். அவர்களைப் போல மணமகனும், மணமகளும் இணைந்தே இருத்திட வேண்டும் என்பதற்காகத் தான் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப் படுகின்றது.

திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

 

இந்த விடயத்தை அறிந்து கொண்டே நாம் சுப.நற்குணன் அவர்களின் திருத்தமிழ் வலைப்பூவிற்குள் சென்று வருவோம். வாரீர்





மலேசிய எழுத்தாளரான வலைப்பூவின் ஆசிரியருக்கு தமிழின் மீது அளவுகடந்த பற்றிருப்பதை அவரது இயல்பான எழுத்து நடையின் வழியே அறிய முடிகின்றது.   சமீபத்தில் மலேசியாவில் தமிழினை கட்டாயப் பாடமாக்குவது குறித்து மலேயப் பிரதமர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார் தான! மலேயப் பள்ளிகளில் தமிழினை கட்டாயப் பாடமாக்கினால் ஏற்படும் விளைவுகளை இக்கட்டுரையின் வழியே எடுத்துரைக்கின்றார்கள்.

தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை

அத்தோடான்றி கட்டாயாப் பாடமின்றி எளிதான முறையில் கற்றிட பத்து திட்டங்களை நமக்கு அளிக்கின்றார்கள். 


கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்

இடையிடையே நாட்டுப்புற பாடல்களை நமக்குத் தந்து களைப்பினைப் போக்குவதோடு மட்டுமின்றி தரவதனை எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கின்றார்கள். 


நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு


 

இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானல் கிராமத்து மணம் பரப்பும் கீழ்திசைக் காற்று. எளிமையும், பக்தியும் இவரது பதிவுகளில் இருப்பதைக் காணலாம். எந்த விதமான அலட்டலோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாமல் தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.” இவ்வாறு குறிப்பிட்டுருப்பதை ஈண்டு நோக்கத்தக்கது. 

முத்துக் கருப்பாயி ஆச்சியினைப் பற்றி இவ்வளவு தான் என்று நான் நினைத்திருக்க கடந்த தினங்களுக்கு முன் அவர்கள் குறித்த ஒரு பதிவினை சகோதரம் தேனம்மை லக்க்ஷ்மணன் அவர்களின் வலைப்பூவிலே கண்டேன். 


இணைப்பு இதோ
 

வயது ஒரு தடையல்ல..

சாதனைக்கு வயது ஒரு தடையே அல்ல என்று தேனீயாய் உழைக்கும் அவர்களது வலைப்பூவில் சில பதிவுகளை உங்களின் பார்வைக்காக வைத்திட விரும்புகின்றேன்.


தாமரையில நூலெடுத்து


தாலாட்டு.


என்ன நாஞ்சொல்லுறது?! 1


எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா


*********************************


நா.சுரேஸ்குமார் அவர்களின் அறிவுக்கடல் வலைப்பூவில் கணினி குறித்தும், வாழ்வியல் குறித்தும் நிரம்பிக்கிடக்கின்றன. அவற்றை நாமும் பருகிடுவோமே! 


Control Panel - Add / Remove Programs-ல் அப்ளிகேஷன்களை மறைக்க


தெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS)

 
ரன்பாக்ஸ்(Run Box) மூலம் அப்ளிகேஷன் புரோகிராம் (Computer Tips-5)


வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!

 
இளைஞசர்களை சீரழிக்க இணையத்தில் பரப்பிவிடப்படும் ஆபாசங்கள்


*******************************

 ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பேராசியர் பழனி.கந்தசாமி அவர்களின் வலைப்பதிவில் பற்சுவைகளும் குழுமியிருக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்த ஆசிரியர் அவர்களின் கருத்துகள் என்றும் விவசாயத் தொழில் முனைவோருக்கு உதவிடும் விதமாக அமைந்திருப்பது கூடுதற் சிறப்பு.

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்

நகைச்சுவை உணர்வுடன் களிமண் குறித்து விளக்கிய பதிவினை படித்து அதிர சிரித்து விட்டேன்.

தலைல என்ன களிமண்ணா இருக்கு?

*******************


பத்திரிக்கையாளர் வ. மு, முரளி அவர்களின் குழலும் யாழும் வலைப்பூவில் கவிதை மாலைகளும், சமூக அவலச் செய்திகளை துகிலுரிக்கும் பதிவுகளும் நிரம்பி வழிகின்றன.

கருவாடு குறித்த கவிதையைப் படிக்கும் போது எண்ண அலைகள் பலவிதமாய் பறந்தோடிற்று எனக்கு.


புரிந்தும் புரியாமலும்... இலக்கிய நடையோடு எதிர்ப்பார்ப்பினை அளித்த கவிதையாய் நான் கருதுகின்றேன். 


மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...என்ற தலைப்பிலே சமூகத்தின் இன்றைய கால ஊடக நிலையினை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள். நல்லதொரு வலைப்பூ. நானும் அறிந்து கொண்டேன்.

*******************************
இந்த வலைத்தளம் தமிழ் ஆர்வலர்களுக்கு கிடைத்த மாபெரும் சொத்து என்றே கூறலாம். சிங்கப்பூர் வாழ் பத்திரிக்கையாளரும் தமிழ் ஆர்வலருமான திருவாளர் ரமேஷ் சக்ரபாணி அவர்களால் தொகுத்தளிப்பட்ட இத்தளத்தில் அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கணம், இஸ்லாம், உடல்நலம், எழுத்தாளர்கள்,கட்டுரை, கவிஞர்கள், இத்யாதியென பல வகைகளில் மின்னூல் கோப்புகளை நமக்கு அளிக்கின்றார்கள். படித்துப் பயன் பெறுவோம்.
மழலைகளுக்கென ஓர் வலைத்தளம், குழந்தைகளுக்கு நீதியினை போதித்திடும் பாடல்களும், கதைகளும், கவிதைகளும் இங்கே ஏராளம். அத்தோடு காணொளி வடிவாகவும் கற்றுக் கொள்ள வழிகள் செய்திருக்கின்றார்கள். 

வருங்கால சந்ததியினை எண்ணி படைக்கப்பட்டிருக்கும் இத்தளத்திலிருந்து சில இணைப்புகள் நமது பார்வைக்காக..

இணையப் பாட்டி

கற்றிடல் வேண்டும் - நடராஜன் கல்பட்டு

பொது அறிவுக் கடல்






நகைச்சுவை உணர்வில்லையெனில் இம்மானுடம் என்றோ மடிந்து போயிருக்கும். கவலைகள் மறக்கச் செய்யவல்லது அன்பான உபசரிப்பும், நகைச்சுவை கலந்த உடல்நளினங்களுமே தான். 

அந்த வகையிலே இந்த வலைப்பூவின் ஆசிரியர்கள் நகைச்சுவை ததும்பிடும் பதிவுகளோடு மனம் கலங்கிடச் செய்யும் பதிவொன்றையும்  பகிர்ந்திருக்கின்றார்கள்.

ஒருவருக்கு உதவி விட்டு உலகம் முழுமைக்கும் தம்பட்டம் அடித்து தற்பெருமை சூடிக்கொள்ளும் மனிதரும், தற்பெருமைக்காக அடுத்தவரின் மேல் கடமைகளை திணித்திடும் மானிடரும் இவ்வையத்தில் இருப்பதில் வியப்பில்லை. 


ஆனால் வலக்கை கொடுப்பதினை இடக்கை கூட அறியா வகையில் உதவி செய்வோரும் இப்பாரினில் உண்டு. 

ஆம் இங்கே சொடுக்கி அறிக.

நடிகர் விக்ரம் ஏன் இப்படி செய்தார்?, சந்தானத்தின் முடிவுகள், பவர் ஸ்டார் யாரு? : கும்ப்ளிங் கும்ப்ளிங் 04/10/2012 


 நாம் நிகர் விக்ர் அவர்குக்கு மர்ந்தன்றியினத் ெரிவித்ுக் ொள்ளைப்பட்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமை பொதிந்திருக்கும். தத்ரூபமாக புகைப்படம் எடுப்பது ஒரு உன்னதமான கலை. அதற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை என்றாகிலும் உறவுகளில் புகைப்படத்துறையில் கை தேர்ந்தவர்கள்/ தேற முயற்சிப்பவர்கள்/ தேற நினைப்பவர்கள் இருப்பர் என்பது உண்மையான விடயமே.

அவர்களுக்காக இவ்வலைப்பதிவினை குறித்து இங்கே வழங்குகின்றேன்.
ஓரஞ்சாரமாய் சுதந்திர மென்பொருளான ஜிம்ப் பற்றி கூறியிருக்கின்றார்கள் இங்கே Selective Coloring- செய்வது எப்படி ? இதனை நான் முத்தமிழ் மன்றத்தினை குறித்த பதிவினில் அசைபட வரைகலை தெரிவோமா என்பதிலும் GIMPல் கலக்குவோம் வாருங்கள் என்ற பதிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

Post Production - DOF இல்லாமல் தவிக்க வேண்டாம்


Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?


  
இவர்களது வலைப்பூவிற்கான விசிறிகள் வலைச்சரத்தில் ஏராளம் என்பதை கூட தற்போது தான் அறிந்து கொண்டேன்.  நிமிடக் கதைகள் படைப்பதில் கரைகண்ட பெருங்கடலாய் விளங்குகின்றார்கள்.  அன்னையின் அன்பு குறித்த கவிதை என் மனதினை மிகவும் கவர்ந்திழுத்தது என்னமோ உண்மை தான்.

ஊனமில்லா மனம் !! (2 நிமிடக் கதை)

சோளியன் குடுமி சும்மா ஆடுமா? (நிமிடகதை)

அன்னையின் அன்பு!! (கவிதை)



வைணவம் சார்ந்த கருத்துகள் நிறைந்திருக்கும் தளம். பாடல்களாகவும், பக்தி இலக்கியங்களாகவும் விரவிக் கிடக்கின்றன. பருகி பயன்பெறுவோம்.

மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை

 
தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்

 
மடல் 107 - மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!


ஆரோக்கியமான வாழ்விற்கு ஆகமத்தின் படி உடல்நலக் குறிப்பினை நமக்காக வழங்கிடும் ஓர் அற்புதமான வலைப்பூ. சில பதிவுகளை இங்கே இணைக்கின்றேன்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!!

எல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூஜையும் செய்யலாம் 


உறக்கமின்மையால் அவதியா??? - உங்களுக்கோர் எளிய தீர்வு !!!!
இல்வாழ்க்கைக்கு இருபது

அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் ம.ஞானகுரு அவர்கள் உலகில் மறைக்கப்படும் உண்மைகள் என்ற தலைப்பிலே தொடர் எழுதி வருகின்றார்கள்.

 பயிர்வட்டங்கள் குறித்த சமீபத்திய தொடரினைப் படித்தேன். ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு பார்வைகள். உலகில் மறைக்கப்படும் உண்மைகள்(மர்மங்கள்)-13 சரி உங்கள் பார்வை என்ன என்பதினை அங்கே பதிவு செய்யுங்களேன்.


நம் தொழிற்களத்தின் ஆசிரியர் தான் அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் போலிருக்கு. உண்மையைக் கண்டுபிடித்து விட்டோமே! 

விஞ்ஞானமும் மெய்ஞானமும் சரியான பகுப்பாய்வுக் கட்டுரை.



பசிக்கு இரப்போர் பட்டியல் இன்னும் இவ்வுலகில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஒவ்வொரு ஐந்து நிமிட்த்திற்கும் 5 இந்தியர்கள் பசியால் இறக்கின்றார்கள் என்ற செய்தியினையும் நமக்கு இந்த தளம் தெரிவிப்பதோடு பசியால் வாடும் ஏழைகளுக்காய் நாம் இவர்களது இணையத்தில் இருக்கும் இணைப்பினைச் சொடுக்கினால் உலக அமைப்பின் மூலம் பசிப்பிணி தீர்த்த பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
சொடுக்கிடுக: http://www.bhookh.com/index.php
 



அடுத்து இன்னும் பல வலைப்பூக்களோடு சந்திக்கின்றேன்.
 

நன்றி