சனி, 17 மார்ச், 2012

மன்றத்தாயின் மடியில்... 1

தீந்தமிழ் அன்னையாம்
தெளிவுறு முத்தமிழ் மன்றமே
ஓங்குபுகழ் உன்னில் ஒருதுரும்பாய் கூடி
அடம் பிடிக்காமலே ஆட்டம் போடாமலே
திடமாய் முடித்தேன் இரண்டாமாண்டு!!!.
ஓரிடமாய் இங்கு உண்டென நிரூபிக்கும்
உளம்கொள் ஒப்பிலா தமிழ் மாந்தர்களோடு
திண்டாட்டமின்றியே கொண்டாட்டம் போட்டு
குடிபுகுந்தேன் என்னவர்களின் மனதிலே!!!
தன்னாட்சி இணைய உலகினிலே
தமிழ் வலைகள் பற்பல!
தாய்த் தமிழை வளப்படுத்தியே
தழுவி நிற்பது சிற்சில!

நான் கண்ட வலைதனிலே
நச்சென்று வந்துனின்ற
நல்லதொரு என் உயிரே!

நினக்கு நானடிமை யென
நிறுத்தி விட்டேன் அப்பொழுதே

கற்றிட பலவுண்டு கருத்துச் செறிவுமுண்டு
சிற்றறிவை விலக்கி சிறப்பாய் மேன்மையுற
கற்றறிந்த அறிஞர்கள் களங்காணும் இடமுண்டு!

ஆத்திகமும் அறிவியலும் நாத்திகமும் நகைச்சுவையும்
அன்னைத் தமிழுக்கெழுதும், ஆரமாய்க் கவிதையும்
அடுத்தடுமையும் கதைகளும் இங்குண்டு

வெற்றி கொண்டோருக்கும் வேண்டி நிற்போருக்கும்
நட்புக் கரங்கொண்டு நலமாக பிராத்திக்க
நாங்கள் உண்டென வேண்டும் உறவுகளுண்டு!!!!


வாடிக்கையான செய்திகளும் வேடிக்கையான விளையாட்டும்
நன்னெறி புகட்டும் நல்லதொரு சிறுவர் பூங்காவும்
வேலை வாய்ப்புத் தகவலும், விவாத மன்றமுண்டு!!

அடுப்பங்களைத் தாண்டி ஆகாயந்தன்னிலே
சிறப்பாய் நடைபோடும் சீர்மைமிகு மகளிருக்கென
புதிதான தகவல்தரும் புதுமைப் பெண்கள் பகுதியும்
கண்ணுங் கருத்துமாய் கடமையென வளர்க்கும்
கற்பூர முல்லையாம் கவின்மிகு குழந்தை வளர்ப்பும்,
ஆண்டுகள் கழிந்தாலும் அசையாமல் நிற்கும்
அருமை மிகு மன்னையரின் அமுதமொழியும்
புகைப்படமும், பொழுதுபோக்கும் இங்குண்டு!

சாப்பிடத் தெரிந்த நம்மையே சமைக்கவும் கற்க
சரிநிகராய்ப் போட்டிபோடும் சமையல் பகுதியும்
கருப்பு வெள்ளையுமாய் கலந்த வண்ணமுமாய்
தெளிவாய் கண்டுனர காணொளிப்படமுமுண்டு!

இன்னும் சொல்லலாம் எடுத்தெழுத நேரமில்லை
நன்றே சொல்லிட்டேன் நயமிகு எந்தாய் பற்றி

அருமைமிகு உறவுகளை அடுக்கடுக்கி வைத்தாற்போல
பெருமைமிகு மன்றத்திலே பெரியவர்கள் பலருண்டு
சிறியேனின் சேட்டைகளை சேவித்தே வண்ணம்
சீருறச் செய்வீரே செயல்மிகு வேந்தர்களே!!


எழு நூற்றாயிரம் நொள்ளையிலாப் பதிவுகளும்
ஒருநூற்றா யிரந்தாண்டிய உரிமையான பதிவர்களுமே
ஒப்பிலா என்னன் னைக்கு ஓய்யாரமாய்
ஓர் மகுடம் சூட்டிட்ட உறவுகளுக்கு வந்தனமே!!

பெயர் பிரித்துச் சொல்லிடுனும் ஆங்கே
பேதமை வந்திடுமென அஞ்சியே பெருமன்றம்
சகோதரமென பெருமை பொங்கிட அழைப்பேனே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...