சனி, 17 மார்ச், 2012

என் ஐயன் ராஜாவிற்காய்.... - 2

2)

அன்புற்ற ணைக்கும் அறிவொடு கைகூட்டி
இன்புற்று றவேங்கிய மென்னை - மண்புற்றிலோர்
மச்சுக் கொள்ளுறையுங் நல்லதொரு நாகம்
உச்சந்தலை கொள்ளொளிர் யுயர்மாணிக் கமொப்ப
மிச்சமறக் காட்டி மேன்மையுறச் செய்தீர்!!


(3)

நகர்ந்த நாட்களில் நல்லவை யெலாம்
பகர்ந்த நின்சொல் பக்குவப் படுத்த
பழகிய நானோ பாவல னானேன்
அழகிய பாதை அன்பொடு ஈந்தீர்


(4)

கட்டழகு வீரனின் காவியன் தன்னில்
மொட்டுமலர் போல மொழிந்தீர் அனுபவமாய்
பட்டிக் காட்டுப் பையனுக்கும் பாடஞ்சொல்லும்
விட்டில்புழு போல வெளிர்தரும் அமுதசுரபி


(5)

அன்னை மொழியாம் அழகுத் தமிழாம்
மன்னை ஈந்த மாணிக்கக் குன்றில்
தமிழோடும் நானும் தரமோடு பழக முத்
தமிழன்னை தந்த தாகம்தீர் தாடகம்..


(6)

ஆயிரமு மாயிரமாய் அழகுதரு நூறாயிரம்
பாயிரமோ டேபல் சுவையுங் கலப்ப
பகட்டெனும் பேயும் பயந்தோடிட வேயுந்தன்
நித்தியப் பதிவும் நிம்மதியைத் தந்தனவே!


(7)

இலட்ச பதிவென்னும் இலட்சிய பயணத்திலே
இலட்சினை பொறித்தமென் இருதயமே - லட்சணமாய்
நீமிளிர லட்சோப லட்சம் வேண்டுதலையே
அலட்சியமின்றியே ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...