சனி, 17 மார்ச், 2012

திருமண நாள் வாழ்த்து..

செப் 01, 2010 4:25 am திருமண நாள் வாழ்த்து..

கரும்பனையோ டேகட்டிப் பிடித்து மழை
காணாகழ னியோடுவெட்டி விதைத்து - கருவேல
மரக்கரியை கரிசனமாய் சுட்டு எடுத்து
கண்ணே, மைந்தா, காரிருள் வண்ணா
நின்னிலை மாறநித்த முழைப்பே னென்று
நித்திரை குறைய மெனக்காய் பட்ட
பாட்டை எண்ணியே எந்தையின்தாள் பற்றியே..

கட்டிய மணாளனோடு கரம் கோர்த்து
காட்டிய வழிதனில் கால்பதித்து – தட்டிய
தடைதனை தகர்ந்தெறிந்து இல்லற வாழ்விலே
பெற்ற குஞ்சுகளை பெருமைபட வளர்த்து
தனக்காய் வாழாமெனக்காய் வாழ்ந்தே
வருமெந்தன் அரசியே என்னையீந்தாயே!!

இருபதினாறோடு மொன்றைக் கூட்டியே
இளமைமாறா அந்நாள்தனில் சுற்றஞ்சூழ
சுடர் விடும் சோதியை நிறுத்தி
ஆண்டாண்டு காலம் வாழ்வீரென
அவையோர் மனமுவந்து வாழ்த்த
நல்லறமாய் நீங்கள் வாழ்வீரென
நாதங்களும் இன்னிசையாய் முழங்க
இருவரும் இணைந்ததாய்
இயம்பினீர் ஓர் நாள்…

அந்நாளையே இன்னாளிலே அழகாய் நினைவுகூற
ஆண்டவனை பிராத்திக்கின்றேமென்
ஆயுள் முழுக்க வரவேண்டி

பொருட்செல்வம் வந்தே சென்றாலும் உங்கள்
அருட்செல்வம் அடியேனுக்கு வேண்டுமென்னாளும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...