சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 15


15)
ஈராறாண்டுக்கொரு முறை
இளமலராய்ப் பூக்கும்
மாறாத மணங்கொள்
வாடாத வன்குறிஞ்சியே!

நிந்தன் தரிசனம் நின்றைய நாள்
வாராத காரணம் வகையுடன் அறிவேன்

நாலாறு காலத்திலே
நயமோன்றைக் கழித்திட்டே
அம்மியும் பொம்மையாய்
பறக்கும்ஆடித்திங்களின்
அழகிய நன்னாளில்

ஆதியொன்றைக்கூட்டியே
அவதரித்தாய் புவியினிலே!!


புவிக்கு வாராத தேவதை
வந்துவிட்டாள் அழகினிலே – இனி
நமக்கில்லை பயனென்று
நழுவி விட்டாயோ நன்மலரே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...