சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 18

18)

வேத வியாச முனிவனின் வாக்கு
வேழ முகனால் வெளிப்பட்டதாம்
மகாபாரதமாய்..

வள்ளல் சீதக்காதி செங்கரம் கொடுக்க
செம்மையாய் வடித்தார் உமறுப்புலவர்
சீறாப்புராணமென்னும் செந்தமிழிலோரு நூலை.

இங்கே..
பாலவயதில் படுத்திய குறும்பை
பவ்யமாய் தோழி எனக்குஞ் சொல்ல
பாக்களாய் வடிக்க சில நாட்களாய் முயல

முதலெழுத்து கிட்டாமலே முடிவிலியாய் போக
முட்டி முட்டியே எட்டித்திரும்பினேன்....

இறுதியாய் நானும் இயற்றுவோவியமென
இறகெடுக்கையிலே இயல்பாய் வாய்த்தது
இப்படம்.. ஹி..ஹி… :bounce: :bounce:


கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...