சனி, 17 மார்ச், 2012

ஒரு தாயின் மகிழ்வு..

உந்தன் விழியோரம் வழியும்நீர்கண்டு
நானும் சிலிர்த்திட்டேன் சில நொடிகள்...

உந்த‌ன் ப‌வ‌ள‌வாய் வருகுள‌றல் க‌ண்டு
நானும் சிலாகித்தேன் ப‌ல‌ நொடிக‌ள்...

கால்க‌டுக்க‌ க‌ழ‌னியிலிற‌ங்கி
க‌திர‌வ‌ன் ம‌றைபொழுது வேலை முடித்து

காட்டோடு போட்டி போட்டு
க‌ருவேல‌ ம‌ர‌க்க‌ட்டோடு த‌லை சும‌ந்து

நித்த‌முமுழைத்து ப‌ஞ்சு மெத்த‌மாய் வ‌ள‌ர்த்த‌
அழ‌கான‌ நின் ம‌க‌ளிட்ட‌ கோல‌ம்
அம்ச‌மாய் இருப்ப‌து க‌ண்டோ...

அன்றேல்

நேர்த்தியாய் நின் புத‌ல்வ‌ன்
ஒன்றாம் வ‌குப்பிலிருந்து
ஒய்யார‌மாய் இரெண்டாம் வ‌குப்பு
பாசாயிட்டேன‌ம்மா வென்று
ப‌க‌ர்ந்த‌ மொழி க‌ண்டோ...

ஏறிவ‌ந்த‌ ஆன‌ந்த‌ம் எதுவாக‌யிருப்பினும்
என்றுமுங்க‌ளோடு நீடித்திருக்க‌
எளிமையாய் வாழ்த்துகிறேன் சீரிள‌ம் தாயே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...