சனி, 17 மார்ச், 2012

புத்தனை நாடியே..

அலரிலா வாழ்வதனைத்தேடி அறிவோடு பயணிக்க
சிலரிலா ரிவாய்முகமேந் தியசிரிப்போடே - பலருள்
பகைமைகொள் நெஞ்சோடே பரிவறக் குழாவ
கடைந்தேமென் நெஞ்சம் கரையுருகி யோடியதோர்
காட்டாற்று வெள்ளமொப்ப போதிமர புத்தனுக்கே
புரிந்தேவிவ் வழியத்தனை யும்வேரறுக் கமர்ந்தானோ
பரிதவிக்குமெ னக்கோ பகர ஆளில்லை
தெளிவாய் நானும் சரணமடைய வேனுன்னிடமே!


துன்ப‌மில்லா வாழ்வ‌த‌னைத்தேடி அறிவு கொண்டு நான் ப‌ய‌ணித்தேன். சில‌ரிலார் (எதிர்மறையாக: பலரது) வாயிலும், முக‌த்திலுமே சிரிப்பைக் க‌ண்டேன். இன்னும் ப‌லரது ப‌கைமையைக் கொண்டாடும் நெஞ்சோடே என்னோடு ப‌ரிவில்லாம‌ல் ப‌ழ‌குவ‌தையும் க‌ண்டேன். க‌ண்ட‌ என் நெஞ்ச‌ம் க‌ரை உடைந்து க‌ட்டுப்பாடு இல்லாம‌ல் ஓடும் காட்டாற்றைப் போல‌ ம‌ன‌ம் ஒருமைப்ப‌டாம‌ல் இருந்து விட்ட‌து.

போதி ம‌ர‌த்த‌டியின் கீழ் இருக்கும்/ இருந்த‌ புத்த‌னுக்கும் இவ்வ‌ழி புரிந்திருக்குமோ? அத‌னால் தான் ஞான‌ம் தேடிச்சென்றாரோ? அத்த‌னையும் வேர‌றுத்து விட‌ வேண்டும் என்று ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்து விட்டாரோ? ப‌ரித‌விக்கும் என‌க்கும் கூட‌ பக‌ர‌ (சொல்ல‌) ச‌ரியான‌ ஆளில்லை. ஆகையால் புத்த‌பிரானே நானும் உன்னிட‌மே ச‌ர‌ண‌ம‌டைகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...