வெள்ளி, 16 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 6


6)
கயலுக்கொப் பாயிரண்டு கண்ணோடே நெற்பூத்த
வயலுக்குலா வும்வெண்ணிற கொக்கே –நிந்தன்
வண்ணமிட தூயதாமெ ந்தன்வகை யோளினுள்ளம்
கண்டே மண்ணிலூன்றிய வித்தாய்
களிவாழ் வாங்குவாழ வளமாய் பாடுவீரே!!மீன்களை(கயல்)ப்போன்ற இரு கண்களைக்கொண்டு, நெற்வயலில் உலாவும் வெண்மை நிறம் பொருந்திய கொக்கே! நீ கொண்டிருக்கும் வெண்மை நிறத்தை விட தூயதாய் என் தோழியின் உள்ளம் இருக்கின்றது.

அதனைக்கண்ட நீ, மண்ணில் ஊன்றிய விதை எப்படி தன்னிலையை தாக்குப்பிடித்துக்கொண்டு முளைத்து வெளிவருமோ அதே போல் என் தோழியும் இப்பூவுலகில் மகிழ்ச்சி கரமான வாழ்க்கை வாழ வாழ்த்துவீரே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...