சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 22


22)
என் தோழியே!!!
காடு மேடாய் திரிந்த மனித வாழ்வு
இன்று கம்ப்யூட்டரில் கணக்கு பாக்குது.
நாடும் நகரமும் நடக்க நேரமின்றி
நமக்கு முன்னே ஒடுது – அங்கே
பிறர் சுக துக்கங்களை சீர் தூக்கியே
நிந்தன் சுகமெல்லாம் போகுது
இதுவும் ஒரு தியாகமென்றால்
இனிமேலும் இது வேண்டுமோ!!

நின்னொடு மலர்ந்த சகோதர வாழ்வும்
நின்னொடு வளர்ந்த பாங்கியர் வாழ்வும்
நித்த மினித்தம் நின் வாழ்சிறக்க
நிறைவாய் பிராத்திக்குது

வாழ்வுக்கு தேவை இதுவென்று
வரிசை வகையோடறிந்து போட்டிசூழ்
பூவுலகிலே புதுமை புகுத்திய
பதுமையாய் முன்னேறு..
நாங்களும் வருகின்றோம்
நட்பொடு பின்னே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...