சனி, 17 மார்ச், 2012

ஔவை அவர்களின்பிறந்தநாள்.!!

அறிவுசார் கருத்தூன்றியே ஆற்றல்தரு பதிவோடே
அழகுசால் கவிகொண்டு ஆள்ந்திடுமோர் தனிமதியே!
தெளிவுதருவி ளநீராயீந் தெள்ளுதமிழ்ப் புலமைசூடி
தெவிட்டாத கேள்வியோடு திகட்டா பதிலுமீந்து
மிரட்டா வன்புங்காட் டிடுமன்ற வித்தகியாம்
மெங்கள் ஔவை யம்மேநீ வாழியவே..!!ஆதியவன் வகுந்தீந்த அழகுசேர் கல்வியு
மாநுந்தை யாயோடு அருள்தருவறி வுங்கூட்டி
ஆறாக் கல்வி அகலாவன்பு மீறாநெறியுங்
மேவாப் புகழோடு மெலியா நலனொடு
என்னாளும் நன்னாளாய் ஏற்றந் தருமோர்
பொன்னாளாய் நினக்கே விளங்கிடுகவே!ஆறொடு புகழை அறியார் உளரோ தேன்
சாறொடு புரண்ட தென்பொதிகை வேர்பலா
நாதன்னி லூறும் நற்சுவை யொப்ப‌
ஆலுக்கு நிகராயத னையுந்தாண் டியே
தன்பலன் பாரா தந்திடும் கருத்தினில்
சிந்தையி லூறும் சிலகன‌வுக் கவியும்
செழுமையாய் மின்னுமோர்நட் சத்திரமாமே!
இன்னமும் கூட்டி ஈகையு ட‌னீந்து
நன்னெறி காட்டிட நாங்களும் வேண்டவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...