

9)
எண்வகை குணத்தில் எழிலோடு முந்தி
பன்மொழி மக்கள் பாவனையில் பழக
நன்றாய் அமையும் நகையென்னும் முத்தே!!
ஆற்றிலும் கடலிலும் அழகிய வடிவிலே
வலமிட புரியாய் வளர்வெண் சங்கே!!
மாலை வேளைமயக் குந்தன் மணத்திலே
ஆளையிழுக் குமழகிய மென்முல்லை கொடியாளே!!
வெண்மையெ னுண்மை மென்மையோடே காண்
வருவீரே வரிசையாய், தருவீரே பரிசிலாய்
என்தோழியின் எழில்மிகு வரிசை பல்லுக்கே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக