புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் பலமான லோக் ஆயுக்தாவை அமைக்கக் கோரியும், சுரங்க ஊழலை விசாரிக்கக் கோரியும் அன்னா ஹசாரே அணியில் உள்ள சரத்சிங் கும்ரி தலைமையில், கடந்த 13 மற்றும் 14ம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையடுத்து, லோக் ஆயுக்தாவை அமைப்பது குறித்து விவாதிக்க, அன்னா ஹசாரே அணிக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார். அன்னா ஹசாரே அணியில் உள்ளவர்களுடன் இன்று, மத்திய பிரதேச அரசு, லோக் ஆயுக்தா குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறது.
சுப்பிரமணியசாமி பாய்ச்சல்: ""ஊழலை ஒழிப்பதற்காக அன்னா ஹசாரே இயக்கம் நடத்தினாலும், அவரது அணியில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளை போல செயல்படுகின்றனர்,'' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "பிரச்னைக்குத் தீர்வு காண முயலாமல், அதைப் பெரிதுபடுத்தத்தான் ஹசாரே அணியினர் முயற்சிக்கின்றனர். கற்பழிப்பு, கொலை போன்றவை போன்று ஸ்பெக்ட்ரம் வழக்கு, இந்திய குற்றவியல் சட்டத்தைச் சார்ந்ததல்ல. ஆனால், இந்த விஷயத்தில் சிதம்பரம் கிரிமினல் மூளையுடன் செயல்பட்டுள்ளார். எனவே தான், நான் சுப்ரீம் கோர்ட்டை அணுக நேர்ந்தது. அடுத்த கட்டமாக ஏர் இந்தியாவில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்த உள்ளேன்,'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக