



19)
மாலை வேளை மயக்கு செஞ்சூரியன்
ஆளை யழைக்கும் அழகிய பசுஞ்சோலை
குன்றைத்தழுவும் குளிர் முகிலினோட்டம்
சென்றவளைத்தேடும் கருங்குயிலின் கவிராகம்
கொஞ்சிப்பேசும் பைங்கிளிகளின் பாட்டு
ஆளைத்தேடி அதனுடன் குலாவும் மணிப்புறவு
மகிழ்வோடே செல்லும் மனதின் ஓட்டம்
நீயும் ஒரு நாள் பயணிப்பாய்
நாங்களும் வருவோம் நட்பொடு துணையாய்!!!
வாழ்த்து, நகை, அடுத்து மெல்லிய சோகம் ஊஞ்சாலாடும் கவிதை என எழுத முடிவெடுத்து எழுதியது.. மன்னித்துக்கொள்வீராக..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக