வெள்ளி, 16 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 2


2)
வாழ்த்தும் வசையும் வழங்க
.....வளர்தமிழும் இன்னபிறவும் மொழிப
சிந்தையில் சீர்கூட்டி சீர்மையாய்
.....சொல்லெழுத்து வெளிப்பட்டு மாந்தர்
உளம்குளிர் பலாச்சுளை பருகியதேன்
.....பவ்யமாய் நின்றாடும் கலைமகளே
என்றோழிக் கென்னாளும் சிறந்தோங்கியே
.....நன்றாய்வள ரநான்வேண் டுவதுணையே!!


மாந்தர்களின் உள்ளம் குளிர, தேனில் நனைத்த பலாச்சுளை தரும் இன்சுவை போல சீர்மையான சொற்களும், எழுத்துக்களும் நம் சிந்தையிலிருந்து வெளிப்படச்செய்பவள் கல்விக்கதிபதியான கலைவாணி.

நாம் பிறரை வாழ்த்தும் செய்திகளும், வசைமொழிச்சொற்களும் நம் சிந்தையிலிருந்து வளர் தமிழாகவும் மற்ற பிற மொழிகளாகவும் வெளிப்பட உதவுபவளும் அவளே!!

இவ்வாறு நம் சிந்தையில் பவ்யமாய் (அழகாய்) நின்றாடும் எங்கள் கலைமகளே, என் தோழிக்கு எல்லா நாளும் சிறந்து ஓங்கிய நன்னாளாக வளர நான் உன்னை வேண்டிக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...