சனி, 17 மார்ச், 2012

எங்கள் நட்பின் வயதொன்றே!!

அன்பின் உறவுகளே!

இன்றைய நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்.. ஆம்...என் ஆருயிர் தோழி வளர்தமிழ்ச்செல்வி யுவா அவர்களோடு நான் கொண்ட நட்பின் வயதுக் காலம் ஒன்று. நம் மன்றத்தில் பிப்ரவரி மூன்றாம் நாள் 2010ல் சேர்ந்த யுவா அவர்கள் இன்று மலை போல மாமணிப் பதிவுகளை நல்ல பயன் தரும் பதிவுகளாக நல்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் இணையத்தின் வழியே சந்தித்த அன்றே நம் மன்றத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறிய பொழுது தனக்கும் மிகவும் பிடித்திருக்கின்றது என்றும், எளிமையான மன்ற அழகும், அறிவு சார் கருத்துக்களைக் கொண்ட பதிவுகளும் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்த இரு நாட்களுக்குள்ளே நம் மன்றத்திலிணைந்து என்னை மகிழ்வு கொள்ளச் செய்தார்கள்..

நான் வணங்கும் இறையிடம் இந்த நல்லதொரு நட்பை என்னாளும் என்னை விட்டகலா வண்ணம் சிறப்புற சேவிக்க வேண்டுமென்பதே!!


எங்களின் நட்பிற்கு ஒரு வயதாகிவிட்ட படியால் சில கிறுக்கல்கள்..


அறிவே அழகே அசலின் ஒளியே
தெளிவே வடிவே தெள்ளுதமிழ் வேந்தே
கத்துங் கடலோடு காவியம் பாடி
சத்தமெடு சங்கொடு சரணமுஞ் சொல்லி
நெஞ்சிலே நின்றாடுங் நெடுபுகழ்செந் தூரழகனே
நின்னருள் வேண்டியே நிற்கின்றேன் இத்தருணமே


*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+

அன்பெனும் நட்பால் அழகுற சேர்த்திட்டாய்
மெந்தன் நட்பெடுங்கா லைநலமோடே தொடர
அன்றலர்ந்த மலரால் அடியோடு பற்றி
நன்றாகத் தொழுவேனே நான்வணங் கிறையையே


*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+‍‍*+*+

இன்பத்தையே யிரண்டாக்கி துன்பத்தையோ தூளாக்கி
அன்பெனு நாரோடழ குறகோர்த்தெடுக் கவரொளி
மன்னவ மார்பிலாடும் மாசில்லா நல்முத்தொப்ப
நன்றாய் தொடருமென் நட்பிற்கு வயதொன்றே(று)!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...