சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 21


21)
பெற்றோர் வாய்ச்சொல்லோடு உற்றோருளச் சொல்கொண்டு
கற்றோர் வழி சென்று வாழ்வில் வெற்றி
பெற்றோர் தடமாய் தவழ
நற்றாங்கே வாழ்த்தியே நங்கையென் தோழிக்கே!!


தந்தை தாய் சொல்லின் வழியே நடந்து வாழ்வில் முன்னேறமடையவும், சுற்றத்தாரின் மகிழ்வைப்பெற்றும் கற்றுத்தேர்ந்த அறிஞர்களின் நூல் வழியிலே சென்று வாழ்வில் வெற்றி பெறுவீர்களாக..

நமக்கு முன்னரே வாழ்வில் வெற்றி பெற்றோரின் கால் தடம் பற்றியே சென்று(அவர்கள் கற்ற அனுபவ பாடங்களைக்கொண்டே) நலமாய் வாழ்ந்திட நங்கையான என் தோழியை வாழ்த்திக்கொள்கின்றேன்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...