சனி, 17 மார்ச், 2012

என் பாசமிகு அண்ணனுக்காக... (ம‌ன்ற‌த்தையும் கூட்டிக் கொண்டே!!!)

ஓரிடமா யோடியாடி சேரிடமாய் சேர்ந்துனின்று
நாரிடமாய் வந்திணையும் நல்மலர்போல- வேறிடம்
தேடாது வெறுமனே வீழ்ந்தேனுன் மடியிலே!!


தத்தித்தத் திநடைபயின்று தடுக்கி விழுந்தெழுந்து
திக்கிக்திக் கிமொழிபேசியே திரிந்தேன் ஒரு பொழுதே!
மாதாவே னுனைக் கண்டு மடிமீது ஆசைகொண்டு
நின்மடிதே டியேநித்தமும் நாடியே வந்தேன்
வீழ்ந்தமென் னையேவீறிட் டழுகுமுன்னமே வாரி
யணைத் தெடுத்து வகையுடன் புராணங் கேட்டே
வரிசையோடு நிற்க வைத்தார் ஓர் உறவு..

செந்தூரா னைக்கண்டொரு கணம் சேவித்து
சீரழகன்தாள் பணிந்து செம்மையாய் வணங்கிவர
சிறப்புடன் நீ பணிக்க சென்றிட்டேன் அப்பொழுதே

கண்ட வேலவனின் காட்சி மறையுமுன்னே
கருத்தோடு அலைபேசி கத்தியது நற்செய்தி!!
பரமன்குறிச்சி பங்காளனின் வார்த்தையிலே
சிரமின்றி செயல்படவே சிந்தித்தேன் அப்பொழுதே

ஊட்டிவிடினும் சிறப்புற உண்ணக்கற் கச்செய்தலே
உண்மையான திறமெயன ஓதினார் எனக்குமே;
நான்கற்ற பாதைதனிலே நழுவும் காலங்கண்டே
நறுக்கென்று குட்டிநல்வழி காட்டியே பயணிக்க
வெறுப்பின்றி நடந்தேன் வெம்மையான பாலையிலே!

நன்றிச் சொல்லி நகரவும் மாட்டேன்
மன்றில் நின்று மருகவும் மாட்டேன்
அன்புடனே உன்னோடு அடுத்த பிறப்பிலாவது
அகவை பிந்தியேத் அம்பியாய் பிறப்பேனா
நன்றே சொல்லீர் நயமிகு என்னிறையே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...