அனைவருக்கும் என் சார்பில் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்....!!!
காடுவெட்டி நற்கழனி திருத்தியே
நாடுபோற்ற நற்மணி யீந்த
நாயகராங்கே நல்ல வராம்
நம்முழவ ரெனநானு மென்பேன்.
கட்டாந் தரையதனை நற்கழனி யாக்கியே
மொட்டாய் கரையுங்கொடி முல்லை மலரொப்ப
பட்டாய் அரும்பாடு பகலவனுந் தானறிவான்
சிட்டாய் நீசேர்த்த சிறுமணியை ஈந்தெமக்கு
விட்டாய் உயர்ந்தே விண்ணவர்க்கு மேலே..
மாகாணிப் படிஅரிசி மந்திரஞ் சொல்லியே
நோகாமல் வரமழைக் குமோவிவ் வுலகே;
சேற்று மண்னோடு நீபுரண்டு
செருப்பிலா காலோடு நன்னடந்து
ஊற்றிலே நீரெடுத்து உலகோர் உய்ய
நாற்றங் காலிலே நயமாய் நீகிடந்தாய்!
தன்னலம் கருதினால் தமக்கே போதுமென
பின்னலம் பாராது பெருவிளைச்சல் கொடாமலே
அண்ணலே நீயிருப்பின் அடியவனுக்கேது அடிசில்?
அந்தக் கலப்பையை நீபிடிக்க மெந்தன்
அகப்பையில் வருமே அன்னம் - அன்றில்
சுப்பனே சும்மாயிருந் தால்
சுருண்டொ டுங்கும் இவ்வுலகே
அப்பனே நீயிலை யேல்
அறுந்த நீரிலையே நான்!!
அடுத்து..
விவரமறியா குழந்தையின் குதலைமொழியில்...
“ஏப்பூ.. எங்க அப்பாவும் ஏர்க் கலப்பை புடிச்சிருக்காங்களே.. அதுக்காக இந்த பாட்டு..”
எப்பாடு பட்டாவது எம்மைக் கரையேத்த
சாப்பாடு போட்டே சாதனை யீந்தீர்
கூப்பாடு இலா குளிர் வாழ்வதனைக்
கூட்டித் தந்தீரே மெனக்கு; நாளை
நலம் மாமலரும் நன்னாளிலே
நானும் வேண்டுவேனே நின் நலமே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக