கண்ணை மூடிக்கொண்டே.. கனவு
கடவுள் வந்தான் சடுதியில்
பொன்வேண்டோ, பொருள் வேண்டோ
மண் வேண்டோ, நல்மனம் வேண்டோ
பகிர்வாய் பக்தா பலதில் ஒன்றை!
நன்றே யானும் நலமுடன் யோசித்தேன்
பொன்னும் பொருகளும் மண்ணும்
மரித்த பின்பும் வருதல் தகுமோ
ஆகா
நல்மனமே வேண்டுமென்று
நந்தனிடம் யாசித்தேன்.
கேட்ட பெருமானே
கிடுக்கென்று திளைக்க
சடுதியில் சங்கீதம்
சன்னமாய் தந்தான்.
ஆவின் பாலோடு கோவின் புகழோடு
நாவின் சுவையறி யூட்டத்தோடே
பார் புகழும் மன்னனாய்
பாசத்தில் மிஞ்சும் கர்ணனாய்
பசித்தோர்க்கு ஈயும் பண்ணனாய்
நலமாய் நீ வாழி; நகருகின்றேன் இக்கணம்.
கனாக்கண்டேன்
கடவுள் வந்தானே..
நனாவில் நண்பனைத்தேடிக்கொண்டே
நாயகன் வேடம் தரித்த எனக்கு
நையாண்டி வேடம் கூட கிட்டில்லை ஏனோ?
இறுதியில் ஒருநாள்...
இமை மூடிக்கொண்ட கனவில்
இன்னுயிர் ஈந்தவன்
இசையோடே வந்தான்
பெற்ற இன்பத்தை பேணிக்காத்துக்கொண்டு
உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து
இருப்பதைக்கொண்டு இனிமையாய் வாழ்
இனி மேயாவது வாழ்..
நடப்பன யாவும் நலமாய் விளங்கும்
தேடிக்கிடத்த திரண்ட பெருஞ்செல்வம்
வாடிய மனத்தோர்க்கு வகையுடன் வழங்கு
இருப்பதும் இறையையே, இயக்குபவமுவனே
நடப்பன யாவும் நன்றே என்று
நலத்தோடு வாழி..
பகன்ற இறைவனை
பார்க்கின்றேன் நேரில்
எனக்கும் ஒருவர் உதவும் போது.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக